For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தற்கொலை செய்து உயிரை மாய்க்கும் பெண்கள் - ஜாதகத்தில் கண்டுபிடிக்க முடியுமா

தற்கொலை செய்து மரணமடைபவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு அதிகரித்துள்ளது. 2018 ஆம் ஆண்டில் ஒவ்வொரு நாளும் சராசரியாக வேலையில்லாத 35 பேர் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் 36 பேர் தங்கள் வாழ்க்கையை முடித்துக் க

Google Oneindia Tamil News

சென்னை: மரணம் ஒருவருக்கு இயற்கையாக நிகழவேண்டும். சிலரின் மரணங்கள் விபத்துக்கள் மூலம் நிகழ்கின்றன. சிலரோ சின்ன சின்ன பிரச்சினைகளைக் கூட தாங்கும் சக்தியில்லாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஒருவரின் ஜாதகத்தில் கிரகங்களின் சேர்க்கை, கிரகங்களின் சஞ்சரிக்கும் நிலையைப் பொறுத்து கிரகங்களின் தசாபுத்தி காலத்தில் மரணம் ஏற்படுகிறது. அந்த மரணம் இயற்கையாகவோ, தற்கொலையாகவோ நிகழ்கிறது. தற்கொலை செய்து கொள்வதற்கான காரணம், ஜோதிட ரீதியாக எந்த கிரகங்களின் கூட்டணி தற்கொலையை தூண்டுகிறது என்று பார்க்கலாம்.

தற்கொலை என்பது மிகப்பெரிய சமூக பிரச்சினை கொலைகள், விபத்துக்கள் மூலம் நிகழும் மரணங்களை விட தற்கொலை மூலம் நிகழும் மரணங்கள் அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும் செப்டம்பர் 10 ஆம் தேதியை உலக தற்கொலை தடுப்பு தினமாக உலக சுகாதார நிறுவனம் கடந்த 16 ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறது. தேசிய குற்ற ஆவண காப்பகம் நாடு முழுவதுக்குமான தற்கொலை தொடர்பான 2018ம் ஆண்டுக்கான தரவுகளை வெளியிட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டில் ஒவ்வொரு நாளும் சராசரியாக வேலையில்லாத 35 பேர் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் 36 பேர் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது, இரண்டு பிரிவிலும் சேர்ந்து 2018ம் ஆண்டில் 26,085 தற்கொலை மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் தற்கொலைகள்

இந்தியாவில் தற்கொலைகள்

2018ம் ஆண்டில் வேலையில்லாதவர்கள் 12,936 பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள். சுயதொழில் செய்பவர்கள் 13,149 பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள். இது வேலையில்லாதவர்களைவிட கொஞ்சம் அதிகம் ஆகும். அதே நேரத்தில் இரு பிரிவுகளிலும் விவசாயத் துறையில் பணிபுரிபவர்களின் தற்கொலை புள்ளிவிவரங்கள் 10,349 ஆக உள்ளது. நம் நாட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டில் மட்டும் 1,34,516 தற்கொலைகள் பதிவாகியுள்ளன, இது 2017 உடன் ஒப்பிடும்போது 3.6 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் கூறியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட மொத்த பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 17.1 சதவீதம் பேர் பெண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்கொலை செய்து கொண்ட பெண்களில் 54.1 சதவீதம் பேர் இல்லத்தரசிகள் அதாவது 42,391 பேரில் 22,937 பெண்கள் ஆவர்.

நவகிரகங்கள் கூட்டணி

நவகிரகங்கள் கூட்டணி

ஒருவருடைய ஜாதகத்தில் லக்னம், லக்னாதிபதி பலமாக நிற்பது, காலபுருஷனுக்கு லக்னமாகிய மேஷத்தில் அசுப கிரஹங்கள் தொடர்பு இன்றி இருப்பது, அதன் அதிபதி செவ்வாய் பலமாக இருப்பது, ஆத்ம காரகனாகிய சூரியன் அசுபத்தன்மை இன்றி நல்ல நிலையில் பலம் பெற்று இருப்பது ஆகியவை ஜாதகரை மன நோயில் இருந்து காக்கும் அம்சங்களாகும். லக்னம் மற்றும் லக்னாதிபதி ஆறு, எட்டு, பனிரெண்டு ஆகிய இடங்களின் தொடர்பு பெற்று பலமிழந்த நிலையில் இருப்பது மன நலத்தை பாதிக்கும்.

சந்திரனின் நிலை

சந்திரனின் நிலை

ஜாதகத்தில் லக்னாதிபதி பாதிக்கப்படுவது, 6, 8, 12 ஆம் இடங்களில் மறைவதால் தற்கொலை எண்ணம் ஏற்படுகிறது. சந்திரனை மனோகாரகன் ஜாதகத்தில் சந்திரனின் பலம் குறைந்தவர்களுக்கு, லக்னாதிபதி வலிமையாக இருக்கும் பட்சத்தில் தற்கொலை எண்ணம் ஏற்படாது. லக்னாதிபதியும், சந்திரனும் வலிமை இழந்திருக்கும் பட்சத்தில் லக்னத்தில் அமர்ந்திருக்கும் கோள் தற்கொலை எண்ணத்தைக் கட்டுப்படுத்தும். சூரியனும் பலமாக இருந்தால் தற்கொலை எண்ணம் தடுக்கப்படும். அதேபோல கிரகங்களின் கூட்டணி வலிமையாக இருந்து சுப கிரகங்களின் பார்வை இருந்தாலும் தற்கொலை எண்ணம் ஏற்படாது.

அஷ்டமாதிபதி அமர்ந்த நிலை

அஷ்டமாதிபதி அமர்ந்த நிலை

பொதுவாக ஒருவரது ஜாதகத்தில் லக்னத்துக்கு 8ஆம் இடம் ஆயுள் ஸ்தானமாகும். எட்டாம் இடம் சுத்தமாக இருக்க வேண்டும். 8ஆம் இடத்தில் கிரகம் அமர்ந்தால் அந்த தசைகளில் மரணத்துக்கு ஒப்பான கண்டங்களையும் நஷ்டங்களை ஏற்படுத்தும். லக்னத்துக்கு 8ல் செவ்வாய் இருந்தால் ரத்தக் கொதிப்பு ஏற்படும். புதன் வந்தால் தண்ணீரில் கண்டம் வரும். சுக்கிரன் வந்தால் கோழை மனதோடு,தற்கொலைக்குத் தூண்டும்.எனவே அதற்கான பரிகாரங்களைச் செய்து கொள்ள வேண்டும்.

ராகு கேது

ராகு கேது

சந்திரன் மனோகாரகன், புதன் புத்திநாதன். சந்திரனும் புதனும் வலிமையற்ற நிலையில் இணைந்தால் தற்கொலை எண்ணம் மேலோங்குகிறது. கிணற்றில் குதித்தும், கடலில் குதித்தும், ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் குதித்தும் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதற்குக் காரணம் சந்திரன் நீர் காரகன். ராகு கேது பாம்பு கிரகங்கள். சந்திரனின் மீது ராகுவின் நிழல் படரும்போது, அதாவது ராகுவின் தாக்கம் உடையவர்களுக்கு தற்கொலை எண்ணம் தோன்றுகிறது.

விஷம் குடித்து தற்கொலை

விஷம் குடித்து தற்கொலை

சந்திரன், ராகுவோடு சூரியனின் தாக்கமும் இணையும்போது அவமானம் அல்லது கவுரவக் குறைபாடு ஏற்படுகிறது. புதனுடன் ராகு சேர்ந்து வலுவில்லாத நிலையில் இருக்கும் ஜாதகக் காரகர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வார்கள். சிலர் விஷ ஊசி போட்டும் உயரமான மாடியில் இருந்து குதித்தும் தற்கொலை செய்து கொள்கின்றனர். புதனோடு கேது சேர்ந்திருக்கும் ஜாதகக் காரகர்கள் ரசாயனங்களை குடித்து தற்கொலை செய்து கொள்வார்களாம். பொட்டாசியம் சயனைடு, தூக்கமாத்திரை குடித்தும் தற்கொலை கொள்வார்கள்.

ஆயுள்காரகன் புத்திநாதன்

ஆயுள்காரகன் புத்திநாதன்

சனி ஆயுள்காரகன் ஒருவரின் ஆயுளை தீர்மானிப்பவர் சனிதான். ஒருவரின் மரணம் எப்படி இருக்கவேண்டும் என்று முடிவு செய்பவரும் சனிதான். சனியோடு புதன் சேர்ந்து வலிமையற்ற நிலையில் இருந்தால் வண்டி வாகனங்களில் மோதி தற்கொலை செய்து கொள்வார். ஓடும் கார் அல்லது பேருந்தில் விழுந்தும், ரயிலில் விழுந்தும் கொடூரமான முறையில் தற்கொலை செய்து கொள்வார்களாம்.

செவ்வாயுடன் சேரும் புதன்

செவ்வாயுடன் சேரும் புதன்

ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாயும் புதனும் வலிமையற்ற நிலையில் இணைந்திருந்தால் தீக்குளித்து தற்கொலை செய்வார்களாம். கையை, கழுத்தை கத்தியால் அறுத்துக்கொண்டும் தன்னைத்தானே சித்திரவதை செய்து கொண்டும் தற்கொலை செய்து கொள்வார்கள். துப்பாக்கியால் சுட்டுக்கொண்டும், மின்சார சாதனங்களாலும் தற்கொலை செய்து கொள்வார்களாம்.

ஜீவ சமாதி நிலை

ஜீவ சமாதி நிலை

புதனோடு கூட்டணி சேரும் சுக்கிரன் வலிமை குன்றியிருந்தால் அமைதியான முறையில் தற்கொலை செய்து கொள்வார்களாம். மாத்திரையை போட்டுக்கொண்டு அமைதியாக படுத்துக்கொள்வார்கள். அதே போல புதனோடு குரு சேர்ந்து வலிமை குன்றியிருந்தால் அவர்கள் ஜீவ சமாதி நிலையில் அமைதியாக மரணத்தை தழுவுவார்களாம். கிரகங்கள் வலிமையான நிலையில் இருந்தால் தற்கொலை எண்ணங்கள் வருவதில்லை. இல்லாவிட்டால் கோடி கோடியாக பணம் இருந்து கோடீஸ்வரர்களாக வாழ்ந்தவர்கள் கூட நொடியில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

சூரிய நமஸ்காரம் பண்ணுங்க

சூரிய நமஸ்காரம் பண்ணுங்க

ஜாதகத்தில் கிரகங்கள் வலிமையற்ற நிலையில் இருந்தால் அதற்கேற்ப பரிகாரங்கள் செய்யலாம். மிருத்யுஞ்ச ஹோமம் செய்யலாம். ருத்ர ஹோமம் செய்யலாம். விஷ்ணு சகஸ்ராநாமம் படிக்கலாம். சந்திரனால் உண்டாகும் பாதிப்பினை சரிசெய்யும் திறமை சூரியனுக்கு உண்டு. அதேபோல புதனால் பாதிப்பு இருந்தால் அதையும் சூரிய பகவான் சரி செய்வார். அதிகாலைச் சூரியனின் ஒளிக்கதிர்களுக்கு மனிதனின் மூளையைச் சரிசெய்யும் திறன் உண்டு. அதனால்தான் நம் முன்னோர்கள் தினசரி சூரிய நமஸ்காரம் செய்யும் பழக்கத்தினை ஏற்படுத்தினர். சூரிய நமஸ்காரம் செய்வது உடல்நலத்திற்காக மட்டுமின்றி, மனநலத்திற்கும் மிகவும் நல்லது. இது தற்கொலை எண்ணத்தை தடுக்கும் எனவே சூரியனை தினசரியும் வணங்குங்கள் ஆவணி ஞாயிறு விரதம் அற்புதமானது.

English summary
People usually take decision to commit suicide for various reasons.According to Vedic astrology, the planet Moon has the authority to control our thoughts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X