• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுக்கிரன் பெயர்ச்சி 2021: தனுசு ராசியில் சூரியனுடன் இணைந்த காதல் நாயகனால் யாருக்கு காதல் மலரும்

Google Oneindia Tamil News

சென்னை: நவ கிரகங்களில் சுக்கிரன் களத்திரகாரகன் இல்லற வாழ்வுக்குறியவர். சுக்கிரன் ஜனவரி 3ஆம் தேதி முதல் தனுசு ராசியில் சூரியனுடன் இணைந்துள்ளார். ஜனவரி 27ஆம் தேதி வரை சஞ்சரிக்கப்போகிறார். இந்த கூட்டணியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்களைப் பார்க்கலாம். கிரகங்களின் கூட்டணி, சஞ்சாரத்தை வைத்து ராசிக்காரர்களுக்கு நன்மையும் தீமையும் நடைபெறும். காதல் நாயகன் சுக்கிரன் உஷ்ண ராசியான தனுசு ராசியில் உஷ்ண கிரகமான சூரியனுடன் இணையும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

சுக்ரன் மனைவி யோகம் தருபவர் ஆணுக்கு மனைவியைப்பற்றியும், பெண்ணுக்கு மண வாழ்க்கையைப் பற்றியும் சொல்லுகின்றவர். ஆகையால் சுக்கிரன் நமது ஜாதக கட்டத்தில் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது அவசியம். இவருடைய தசா காலமான 20 வருடங்களில் மிகப்பெரிய ராஜ யோக பலன்கள் உண்டாகும்.

சுக்கிரன் சிற்றின்பம், திருமணம் முதலான சுகத்தை ஆணுக்கு அளிப்பவர். அதே போல் பெண்களுக்கு நளினத் தன்மையையும் அழகான தோற்றம், கவர்ச்சி, வீரியசக்தி, அறிவாற்றல், மனத்துக்கிசைந்த கணவனை அடையும் தகுதியையும், சுக போகங்களில் திளைத்து மகிழும் ஆற்றலையும் வழங்குவார். சுக்ரன் என்றால் இன்பம். மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர். சுக்கிரன் சுக போகங்களின் அதிபதி. இந்த சுக்கிர பெயர்ச்சியால் யாருக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

 சனிப்பெயர்ச்சி 2023 - மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் மின்னல் வேக பலன்கள் சனிப்பெயர்ச்சி 2023 - மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் மின்னல் வேக பலன்கள்

மேஷம்

மேஷம்

செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 9ஆவது வீட்டில் சுக்கிரன் அமர்கிறார். காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் குதூகலமாக அமையும். வெளிநாடு யோகம் கைகூடி வருகிறது. வீட்டில் மனைவியின் அன்பான ஆதரவு கிடைக்கும். காதலி நண்பர்கள், உறவினர்களுடன் உற்சாகமாக இருக்கும் காலம் இது. பாஸ்போர்ட் எடுத்தவர்கள் விசாவிற்கு முயற்சி செய்யலாம். வெள்ளிக்கிழமை சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்கு சந்தனம் வாங்கித்தரலாம். பசுமரத்திற்கு தண்ணீர் ஊற்றலாம்.

ரிஷபம்

ரிஷபம்

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் எட்டாம் இடத்தில் மறைகிறார். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் அக்கறை செலுத்தவும். குடும்பத்தில் இருவருமே கவனமாக இருந்தால் பொருள், நகை பாதிப்பை தவிர்க்கலாம். திடீர் மருத்துவ செலவுகள் எற்படும். பணத்தை பத்திரப்படுத்துங்கள் விலை உயர்ந்த நகைகளை யாருக்கும் இரவல் கொடுக்க வேண்டாம். வெள்ளிக்கிழமைகளில் பசுவிற்கு அகத்திக்கீரையை தானம் செய்யலாம்.

மிதுனம்

மிதுனம்

காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் களத்திர ஸ்தானத்தில் சூரியன் உடன் அமரப்போவதால் வாழ்க்கை துணை உடனான காதல் உணர்வுகள் அதிகரிக்கும். சிலருக்கு காதல் கணிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது. தொழில் விசயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும். வாழ்க்கை துணைவருக்கு சிறிய அளவில் உடல்நலக்குறைவு ஏற்படும். பெண்கள் விசயத்தில் சற்று கவனமாக இருக்கவும். இல்லை எனில் மதிப்பு மரியாதைக்கு பிரச்சினை ஏற்பட்டு விடும். சுக்கிரனின் அருட் பார்வை கிடைக்கிறது. முகத்தில் பொலிவு கூடும் நிம்மதி அதிகரிக்கும். வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஓரையில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

 கடகம்

கடகம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் மறைவதால் வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். வேலை பார்க்கும் இடத்தில் கடும் உழைப்பை கொடுக்க வேண்டிய காலமிது. உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். வெள்ளிக்கிழமை அம்பிகையை வணங்கவும். பசுவிற்கு அரிசி மாவும், வெல்லமும் தானமாக அளிக்க நன்மைகள் நடைபெறும்.

 சிம்மம்

சிம்மம்

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களே, காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டில் சூரியன் உடன் அமர்ந்து உள்ளார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் ராசி நாதன் உடன் அமர்வதால் பணவரவு அதிகரிக்கும். வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். காசு மேல காசு வந்து கொட்டுவதால் மனதில் மகிழ்ச்சி கொப்பளிக்கும். உங்களுக்கு கற்பனை வளமும் அழகுணர்ச்சியும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் உங்கள் மீது காதல் மழை பொழியும் நேரமிது. வாழ்க்கைத் துணையுடன் இதே வேகத்தோடு இன்ப சுற்றுலா சென்று வாருங்கள். வெள்ளிக்கிழமை அம்மன் கோவில்களில் விளக்கேற்ற மேலும் நன்மைகள் நடக்கும்.

கன்னி

கன்னி

புதன் பகவானை ராசி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, சுக்கிரன் உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் சூரியன் உடன் அமர்ந்து உள்ளதால் வீட்டுக்குத் தேவையான அலங்கார பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள். அம்மாவின் உடல் நலத்தில் அக்கறை தேவை.வண்டி வாகனம் வாங்கும் போது மட்டும் கவனமாக வாங்க வேண்டும் இல்லை எனில் செலவு இழுத்து விட்டு விடும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு மல்லிகை, முல்லை பூக்களை வாங்கித் தர பாதிப்பு குறையும்.

துலாம்

துலாம்

ராசி நாயகன் சுக்கிரன் ராசிக்கு 3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தில் அமர்ந்து உள்ளார். உங்களின் பேச்சுத்திறமையும், அழகியலும் அதிகரிக்கும். உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும். உடல் நலனில் சின்னச் சின்ன ஏற்படும். எனவே அவ்வப்போது அக்கறையோடு சிறு பிரச்சினைகளையும் கவனியுங்கள். வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாரை விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும். சிறு ஆன்மீகப் பயணம் செல்வீர்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

உங்கள் ராசியில் குரு உடன் சஞ்சாரம் செய்து வந்த சுக்கிரன் உங்கள் ராசிக்கு 2வது வீட்டில் அமர்கிறார். தன ஸ்தான சுக்கிரனால் பண வருமானம் அதிகாிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன் மனைவிக்கு இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவா்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று செந்தூரம் வாங்கி தந்து வழிபட பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.

தனுசு

தனுசு

காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசியில் சூரியன் உடன் குடியேறியுள்ளார். முகப்பொலிவு அதிகரிக்கும். ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். தொழில் வியாபாரத்தில் நல்ல வருமானம் வரும். பொன்னும் பொருளும் சேரும் நேரம் இது. தங்க நகைகள் வாங்கலாம். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவதால் சுப செலவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு மேற்படிப்பு படிக்க வழி ஏற்படும். கணவன் மனைவி இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். சிலருக்கு திடீர் காதல் மலரும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று மல்லிகை மலர் வாங்கிக் கொடுத்து வணங்கி வர நன்மைகள் நடைபெறும்.

மகரம்

மகரம்

சந்திரன் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமாக 12வது வீட்டில் சுக்கிரன் சூரியனுடன் குடியேறியுள்ளார். சுப விரைய செலவு ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடைபெறும். கணவன் மனைவி மகிழ்ச்சியாய் இருப்பாா்கள். வாழ்க்கை துணையுடன் அந்நியோன்னியம் அதிகரிக்கும். பணவரவு சிலருக்கு உற்சாகத்தை தரும். பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பை எற்படுத்தி கொடுக்கும். படிப்புக்காக சிலர் வெளிநாடு செல்வார்கள். வெள்ளிக்கிழமைகளில் சிவ ஆலயத்திற்கு தயிரும் சர்க்கரையும் வாங்கித்தர மேலும் நன்மைகள் நடைபெறும்.

கும்பம்

கும்பம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். திருமண வாழ்க்கையில் உற்சாகமடையும் வகையில் பல செயல்கள் நடைபெறும் மாதம் இது. பண வருவாய் அதிகாிக்கும். அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும் காலமாகும். வாகன வசதி மேம்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சிறப்பான பலன்களை எதிா்பாா்க்கலாம். வீடு நிலம் வகையில் ஆதாயம் கிடைக்கும். வெள்ளிகிழமை சுக்கிரபகவானுக்கு விளக்கேள்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

மீனம்

மீனம்

உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் தொழில் ஸ்தானத்தில் அமரப் போவதால் உங்களின் வேலையில், தொழிலில் உற்சாகம் ஏற்படுத்தும். வேலை செய்யும் இடத்தில் வார்த்தைகளில் கவனம் தேவை. அமைதியாக நிதானமாக பேசவும். குடும்பத்தில் மனைவியுடனே அல்லது காதலியுடனே சின்னச் சின்ன ஊடல் ஏற்படலாம் சமாளியுங்கள். வெள்ளிக்கிழமைகளில் பசுவிற்கு வெல்லம் வாங்கித்தர பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.

English summary
Sukran Peyarchi Transit 2021: Venus transit Viruchigam to Dhanush effects on 12 Zodiac. Read the astrological effects of Venus Transit in various zodiac signs.Venus is considered the lord of Zodiac signs Taurus and Libra according to Vedic astrology.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X