• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

சனியின் நேரடி பார்வையில் இணையும் சூரியன், செவ்வாய் - கவனம் தேவை என்கிறார் ஜோதிடர் நெல்லை வசந்தன்

Google Oneindia Tamil News

சென்னை: கடக ராசியில் சூரியன்,செவ்வாய், சுக்கிரன் சேர்ந்திருக்க மகர ராசியில் உள்ள சனியின் பார்வை இந்த கிரகங்களின் மீது விழுகிறது. ஜூலை 17 ஆம் தேதியன்று மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று ஜோதிடர் நெல்லை வசந்தன் கூறியுள்ளார்.

Sun mars conjunction vision Saturn Effects Astrologer Nellai Vasanthan prediction

கொரோனா என்ற ஒற்றை பெயர் உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, கப்பா என பல பெயர்களை உருமாற்றம் அடைந்த கொரோனாவிற்கு சூட்டியுள்ளனர். கருப்பு பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை, வெள்ளை பூஞ்சையும் மக்களை பாதித்து உயிரைக் குடித்து வருகிறது.

செவ்வாய் சனி பார்வை, சேர்க்கையே பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். தற்போது மகர ராசியில் உள்ள சனியின் பார்வை கடக ராசியில் உள்ள சனியின் மீது விழுகிறது. தற்போது ரிஷப ராசியில் உள்ள சூரியன் சில நாட்களில் மிதுன ராசிக்கு நகரப்போகிறார். ஆனி மாதம் முழுவதும் மிதுன ராசியில் பயணிக்கும் சூரியன் ஆடி 1ஆம் தேதி கடக ராசிக்கு செல்கிறார். அங்கே ஏற்கனவே உள்ள செவ்வாய் உடன் இணைகிறார் சூரியன். இந்த கிரகச் சேர்க்கை ஜூலை 17 தொடங்கி ஜூலை 20 வரை நீடிக்கிறது. அதன் பிறகு செவ்வாய் இடப்பெயர்ச்சியாகி சிம்ம ராசிக்கு சென்று விடுவார். இந்த கிரகச் சேர்க்கை பார்வையால் பாதிப்புகள் ஏற்படும் என்பது ஜோதிடர்களின் கணிப்பாகும்.
உலக நன்மைக்காகவும் நோய் தொற்று நீங்கவும் யாகம் வளர்த்து பூஜை செய்துள்ளார் ஜோதிடர் நெல்லை வசந்தன்.

இலவச வேக்சின்.. தனியாருக்கும் கட்டுப்பாடு.. மத்திய அரசின் முடிவால் என்னென்ன பயன்? முழு விபரம் இலவச வேக்சின்.. தனியாருக்கும் கட்டுப்பாடு.. மத்திய அரசின் முடிவால் என்னென்ன பயன்? முழு விபரம்

சுற்றும் உலகத்தையும் ஒட்டுமொத்த மக்களையும் ஒரு சேர முடக்கிப் போட்டு உலுக்கிவிட்டது கொரோனா பெருந்தொற்று. இந்த கொடூரமான காலகட்டத்தில் வாழ்வாதாரங்களை பறிகொடுத்து வேலை வாய்ப்பை இழந்தவர்கள் பொருளாதார நெருக்கடிகளால் பாதித்தவர்கள் உறவுகளை பிரிந்தவர்கள் என நிம்மதி இழந்து நிலையை அடைந்தவர்கள் பலர்

இதற்கு காரணமாக இருப்பது இந்த மூன்று கிரகங்கள் அதாவது சூரியன் செவ்வாய் சனி ஆகிய மூன்று கிரகங்களின் சேர்க்கை பார்வை நெருக்கம் இந்நிகழ்ச்சிக்கு அடிப்படையாகிறது. இது இயற்கை அழிவு ,செயற்கை அழிவுக்கு காரணம் ஆகிறது.

சூரியனில் இருந்து வரும் கதிர்கள் எக்ஸ் கதிர்கள் , ப்ளூகதிர்கள் எல் வகை ப்ளூகதிர்கள், காஸ்மிக் கதிர்கள் பேரண்டத்தில் இருந்து வரும் கதிர்கள் இரும்பையும் ஊடுருவும் கதிர் . கதிர் வீச்சுகள் ஆல்பா பீட்டா காமா கதிர்கள், அகச்சிவப்பு கதிர்கள், அல்ட்ரா வயலட் கதிர்கள் போன்றவை.

இதேபோன்று செவ்வாய் கிரகத்தில் இருந்து வரும் கதிர்கள் கார்பன்-டை-ஆக்சைடு ,நைட்ரஜன், நீராவி, நைட்ரிக் ஆக்சைடு போன்று சனி கிரகத்தில் இருந்து வரும் கதிர்கள் ஹைட்ரஜன் ,ஹீலியம், மீதேன், நீராவி ,ஈத்தேன் போன்றவை பூமியை நோக்கி வரும்

இந்த மூன்று கிரகங்களை எடுத்துக்கொள்ள காரணம் பூமியில் ஏற்படும் சுனாமி நிலநடுக்கம் எரிமலை குழம்புகள் ஆகியவை ஏற்பட சூரியன் சனி செவ்வாய் கிரகங்களின் கதிர்வீச்சுகளும் காரணமாகிறது என்பதே
உண்மை

வளிமண்டலத்தில் உள்ள ரசாயன பொருட்களோடு செயற்கையாக அனுப்பப்படும் ரசாயன பொருள்கள் சேரும்போது நோய்நொடிகள் வைரஸ்கள் உற்பத்தியாக காரணமாகிறது

மணி மந்திர ஔஷதம் என்றால் மணி என்றால் ஜோதிடம், மந்திரம் என்றால் ஸ்லோகம் ஔடதம் என்றால் மருத்துவத்தை குறிக்கும். இந்த மூன்றும் சேர்ந்தால் தான் வைரஸ் கிருமிகளை விலக்க வாய்ப்பு வரும்

குருதான் ஆக்ஸிஜனுக்கு அதிபதி. குரு பார்க்க கோடி தோஷம் நிவர்த்தி. குரு கிரகத்திலிருந்து மீத்தேன் கதிர்கள் வெளியே வருகிறது. இது உயிர்களை பாதுகாக்கும். குருபலம் வந்து விட்டதா என்று கேள்வி கேட்பது (சந்ததி உருவாகுவதற்கு வழிவகை செய்யும்) என்ற அர்த்தத்தை உள்ளடக்கியது

குரு கும்பத்தில் அதாவது குடத்தில் இருப்பதால் ஆக்சிஜன் முடங்கி விட்டது, ஆக்ஸிஜன் சிலிண்டருக்கு வந்து விட்டது என்பதை எடுத்துக் கொள்ளலாம்

இந்த செவ்வாய் சூரியன் சனி மூன்று கிரகத்தின் அதிபதி நரசிம்மர், சரபேஸ்வரர் தெய்வங்களாகும். நரசிம்மர் சரபேஸ்வரர் வழிபாடு செய்வதன் மூலம் நோய் நொடியில் இருந்து தீர்வு காண வழிவகை கிடைக்கும்

27.12.2019 அன்று ஆறு கிரக சேர்க்கைக்காக யாகம் சென்னையில் மாதவப் பெருமாள் கோவிலில் யாகம் செய்யப்பட்டது. உலக சுகாதார மையம். 30 .12 .2019 அன்று அறிவித்தது. அதேபோல் 17 .7 .2021அன்று சூரியன் சனி செவ்வாய் கிரக சேர்க்கைகள் பார்வைகள் மீண்டும் ஏற்படுகிறது என்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்

அரசு சொல்வதை மக்கள் கேட்கவேண்டும் அதிகாரிகள் சொல்வதை கேட்கவேண்டும் மருத்துவர்கள் சொல்வதை கேட்கவேண்டும். சூரியன் +சனி+ செவ்வாய் இணைவு பார்வை தொடர்பு நெருக்கம் ஏற்பட்டால் இயற்கை சீற்றங்கள் பேரலை சுனாமி எரிமலை வைரஸ் போன்ற அழிவுகளும், இயற்கை செயற்கை அழிவுகளும் ஏற்படும்.

மிதுன ராசியில் சனி அமர்ந்த காலத்திலும் கடக ரேகையில் பெயர்கொண்ட கடகத்தை நோக்கி சனி பயணிக்கும் போது சுனாமி ஏற்பட்டது. தனுசு ராசியில் சனி அமர்ந்து மகர ரேகை என்று சொல்லக்கூடிய மகரத்தை நோக்கி சனி நகரும் போது தான் கொரனா உருவானது. இந்த சூரியன் சனி செவ்வாய் மூன்று கிரக சேர்க்கை தான் கொரனாவாக வந்துள்ளது.

உலக நன்மைக்காகவும் பாதிப்பில் இருந்து மக்களை காக்க வேண்டியும் கடந்த 1ஆம் தேதியன்று அதிகாலை யாகம் நடைபெற்றது. இந்த கொரோனாவை கோர நரசிம்மர் விரட்டுவார் என்றும் நம்பிக்கை அளித்துள்ளார் ஜோதிடர் நெல்லை வசந்தன்.

English summary
Saturn in Capricorn falls on these planets as the Sun, Mars and Venus join in the cross zodiac. Astrologer Nellai Vasanthan has said that people should be careful on July 17.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X