For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு மாதத்தில் 3 கிரகணங்கள் - எந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்கணும் தெரியுமா

ஒரு பௌர்ணமி தொடங்கி அடுத்த பௌர்ணமி வரை 30 நாட்களுக்குள் 3 கிரகணங்கள் நிகழ்வதால் இந்த உலகத்திற்கு ஏதேனும் ஆபத்து வருமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: 30 நாட்களுக்குள் 3 கிரகணங்கள் நிகழ்வதால் இந்த உலகம் மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொள்ளுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் நிகழ்ந்த சூரிய கிரகணத்திற்குப் பிறகு இந்த உலகம் கொரோனா வைரஸ் என்ற நோயின் பிடியில் சிக்கியுள்ளது. 2020ஆம் ஜனவரி மாதம் ஒரு சந்திர கிரகணம் நிகழ்ந்த நிலையில் இந்த ஜூன் 5ஆம் தேதி தொடங்கி ஜூலை 5ஆம் தேதி வரைக்குள் சரியாக 30 நாட்களில் 3 கிரகணங்கள் நிகழ்கின்றன. இந்த கிரகணங்களால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பாதிப்பு வரும் என்று பார்க்கலாம்.

பொதுவாகவே கிரகணங்கள் நிகழ்வது வானியல் நிகழ்வுதான். ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக நான்கு கிரகணங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது. ஓராண்டில் 2 சூரிய கிரகணம், 2 சந்திர கிரகணம் நிகழ்வது சாதாரணமானது. அதே நேரத்தில் சில ஆண்டுகளில் ஐந்து, ஆறு, ஏன் ஏழு கிரகணங்கள் கூட நிகழ்கின்றன.

2020ஆம் ஆண்டில் மொத்தம் 6 கிரகணங்கள் நிகழ்கின்றன. இதில் 2 சூரிய கிரகணம் நிகழ்கிறது ஜூன் 21ஆம் தேதி நிகழும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியும். டிசம்பர் 14ஆம் தேதி நிகழப்போகும் முழு சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. ஜனவரி மாதம் முதல் சந்திர கிரகணம் நிகழ்ந்தது. ஜூன் 5ஆம் தேதியும் பெனும்பிரல் சந்திர கிரகணம் நிகழ்ந்தது. ஜூலை 5ஆம் தேதியும் நவம்பர் 30ஆம் தேதியும் நிழல் சந்திர கிரகணங்கள் நிகழப் போகின்றன. இதில் ஜூன் 5 முதல் ஜூலை 5 வரை 30 நாட்களுக்குள் 1 சூரிய கிரகணமும் 2 சந்திர கிரகணமும் நிகழ்வதுதான் சிறப்பு. இது பல ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும்.

நெருப்பு வளைய சூரிய கிரகணம் 2020: ஜூன் 21ல் ஆறு மணிநேரம் என்ன நடக்கும் தெரியுமா நெருப்பு வளைய சூரிய கிரகணம் 2020: ஜூன் 21ல் ஆறு மணிநேரம் என்ன நடக்கும் தெரியுமா

ஒரே மாதத்தில் 3 கிரகணங்கள்

ஒரே மாதத்தில் 3 கிரகணங்கள்

2000ஆம் ஆண்டில் ஜூலை மாதத்தில் 2 பகுதி சூரிய கிரகணங்களும் ஒரு சந்திர கிரகணமும் நிகழ்ந்தது. ஜூலை 1, 2000ஆம் ஆண்டில் பகுதி சூரிய கிரகணம் ஏற்பட்டது. ஜூலை 16, 2000ஆம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழ்ந்தது. ஜூலை 31,2000ஆம் ஆண்டில் பகுதி சூரிய கிரகணம் நிகழ்ந்தது. இதே போல சரியாக 223 சந்திரமான மாதங்களுக்குப் பிறகு 2018ஆம் ஆண்டு ஜூலை 13,27,ஆகஸ்ட் 11ஆம் தேதி என மொத்தம் 3 கிரகணங்கள் நிகழ்ந்தன. இதே போல 2206ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி பகுதி சூரிய கிரகணம் நிகழப்போகிறது. டிசம்பர் 16ஆம் தேதி முழு சந்திர கிரகணமும், டிசம்பர் 30ஆம் தேதி பகுதி சூரிய கிரகணமும் நிகழ உள்ளது.

மேஷம் விருச்சிகம்

மேஷம் விருச்சிகம்

இந்த சூரிய கிரகணத்தினால் மேஷம் ராசிக்காரர்களின் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நினைத்தது நிறைவேறும் லட்சியத்தை அடைவீக்ள். குடும்ப உறுப்பினர்களுடன் சின்னச் சின்ன சண்டைகள் வரலாம் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். விருச்சிகம் ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் மீது தேவையில்லாத தவறான குற்றச்சாட்டுக்களை முன் வைப்பார்கள். உங்க நிதி நிலைமை மோசமடையும். உங்க குடும்பத்திற்காக நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும்.

ரிஷபம் துலாம்

ரிஷபம் துலாம்

ரிஷபம் ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்க பேச்சில் கவனமாக இருங்க. உங்க பேச்சை தவறாக புரிந்து கொள்வார்கள். எந்த வார்த்தையை பேசும் முன்பும் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து பேசுங்கள். இதே போல துலாம் ராசிக்காரர்கள் எந்த ஒப்பந்தங்களிலும் கையெழுத்து போட வேண்டாம். உங்களின் நம்பிக்கையை சீர் குலைக்கும் வகையில் சில சம்பவங்கள் நடைபெறும்.

மிதுனம், கன்னி

மிதுனம், கன்னி

ஜூன் 21ஆம் தேதி நிகழப்போகும் சூரிய கிரகணம் மிதுனம் ராசியில் நிகழப்போகிறது. திடீர் இழப்புகள் நஷ்டங்கள் ஏற்படும். உடல் ரீதியான பிரச்சினைகளும் மனரீதியான பிரச்சினைகளும் ஏற்படும். உங்களுக்கு மன உளைச்சல் அதிகரிக்கும். கன்னி ராசிக்காரர்கள் கிரகணம் நிகழும் காலத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்க தினசரி வேலையில் கவனமாக இருங்க. தந்தை மகன் உறவில் சில சிக்கல்கள் வரலாம். எதையும் உணர்வுப்பூர்வமாக யோசிக்காதீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.

கடகம்

கடகம்

சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடகம் ராசிக்காரர்களின் 12வது வீட்டில் சூரிய கிரகணம் நிகழப்போகிறது. மனரீதியாக பிரச்சினைகள் ஏற்படும். சிலருக்கு நரம்பு பிரச்சினைகள் வரலாம். சில மாதங்களுக்கு உங்களுக்கு பணப்பிரச்சினைகள் வரலாம் எச்சரிக்கையாக இருங்க.

சிம்மம்

சிம்மம்

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களே, உங்களின் வருமானம் இந்த மாதம் அதிகரிக்கும். உங்களின் நிதி நிலைமை நன்றாக இருக்கும். உங்களின் காதலை சொல்வதற்கு இது நல்ல நேரமல்ல பொறுமையாக இருங்கள்.

தனுசு மீனம்

தனுசு மீனம்

குருவை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, உங்களின் உணர்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே பிரச்சினை வரும். பிசினஸ் செய்பவர்கள் முதலீடுகளை தவிர்க்கவும். உங்க பிசினஸ் பார்ட்னர்களால் சில பிரச்சினைகள் வரலாம். மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த கிரகணத்தினால் சில பிரச்சினைகள் வரலாம். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. சொத்துக்களை விற்கவோ வாங்கவோ முடிவு செய்யும் முன்பாக பலமுறை யோசிக்கவும். தீர விசாரிக்கவும்.

மகரம் கும்பம்

மகரம் கும்பம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களுக்கு தண்ணீர் தொடர்பான பிரச்சினைகள் வரலாம். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும் என்பதால் கவனமாக இருக்கவும். கும்பம் ராசிக்காரர்கள் உங்களின் குழந்தைகளின் மீது கவனமாக இருங்கள். உணர்வு பூர்வமான முடிவுகளை கைவிடுங்கள். காதலிப்பவர்கள் சில பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

English summary
Beginning on June 5, we will ll have 3 eclipses in one lunar mont in June and July 2020. This time period during which eclipses are possible is also called an eclipse season. We won’t have three eclipses in one eclipse season again until the year 2029.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X