For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சூரிய கிரகணம் 2020:திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடல்- பக்தர்களுக்கு இன்று முழுவதும் தரிசனம் ரத்து

Google Oneindia Tamil News

திருப்பதி: இந்த ஆண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் நிகழ்வதை முன்னிட்டு கோவில்களின் நடை அடைக்கப்பட்டு பூஜைகள் நிறுத்தப்பட்டுள்ளன. சூரியகிரகணம் முடிந்த பின்னர் கோவில் சுத்தப்படுத்தப்பட்டு பரிகார பூஜைகள் செய்த பின்னர் வழக்கமான பூஜைகள் நடத்தப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முழுவதும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    Solar eclipse எங்கு எப்போது தெரியும்? எதெல்லாம் செய்ய கூடாது

    சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் நேற்றிரவு 8.30 மணி முதல் மூடப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் கிரகணம் முடிந்த பின்னரே திறக்கப்படும் என்றாலும் இன்று முழுவதும் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

    Surya Grahanam 2020: Tirupathi Balaji temple closed due to Solar eclipse

    கொரோனா லாக் டவுன் காரணமாக இரண்டரை மாதங்களுக்கு மேல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் கடந்த 11ஆம் தேதி முதல் பலத்த கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    தினமும் இலவச தரிசனத்துக்கு திருப்பதியிலேயே 3 இடங்களில் டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன.
    இந்நிலையில் இன்று நெருப்பு வளைய சூரிய கிரகணம் கங்கண சூரிய கிரகணத்தை ஒட்டி நேற்று இரவு எட்டரை மணியில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைக்கப்பட்டது. கிரகணம் முடிந்த பின்னர் இன்று மதியம் இரண்டரை மணிக்கு மேல் கோவில் நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சீன மொழியில் குறிப்பு.. மாமல்லபுரத்தில் கரை ஒதுங்கிய மர்ம ட்ரம்.. திறந்து பார்த்தால்.. பகீர் சம்பவம்சீன மொழியில் குறிப்பு.. மாமல்லபுரத்தில் கரை ஒதுங்கிய மர்ம ட்ரம்.. திறந்து பார்த்தால்.. பகீர் சம்பவம்

    கோவில் முழுவதும் கழுவி சுத்தம் செய்யப்பட்ட பின்னர் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை போன்ற அனைத்து சேவைகளும் ஏகாந்தமாக நடைபெறும். அர்ச்சகர்கள் மட்டுமே பங்கேற்பார்கள். இன்று நாள் முழுவதும் ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    English summary
    A solar eclipse is the occasional interruption of the moon between the sun and the earth. Tirumala temple closed on today for pilgrims due to solar eclipse. devotees will not be allowed in. Pilgrim services will resume at the temple from Monday at the usual timings.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X