For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசு வேலை, அரசாளும் யோகம் தரும் ஆதவனை வணங்குங்கள் #Rathasaptami

உலகிற்கு ஒளி தரும் சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் மிக முக்கியதானது ரத சப்தமி. தை மாத வளர்பிறையில் ஏழாவது நாள் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: அரசு வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கும் அரசாள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் ஆதவனே கண் கண்ட இறைவன். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் சூரியனை வணங்கினால் அரசு வேலையும் அரசாளும் யோகமும் கூடி வரும்.

சூரியனைக் கொண்டாடுகிற விரதங்களில் ரத சப்தமி என்றும் சூரிய ஜயந்தி என்றும் போற்றப்படுகிற இந்த விரதம் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. நவகிரகங்களின் நாயகன் சூரியனை வணங்கி விரதம் இருந்தால் அரசு வேலைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

உலகத்தின் உயிராகச் சூரியதேவன் விளங்குகிறார். வேதகாலம் முதலே சூரியனைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. ரிக்வேதம் சூரியனை மூன்றுவித அக்னியில் ஒன்றாக விவரிக்கிறது. யஜுர்வேதம் சகல உலகங்களையும் ஒளிபெறச் செய்பவன் என்று போற்றுகிறது. அதர்வண வேதம் சூரியனை வழிபட்டவர்கள் இதயநோயிலிருந்து விடுபடுவர் என்று வழிகாட்டுகிறது.

கண்களின் நாயகன் சூரியன்

கண்களின் நாயகன் சூரியன்

ஜோதிடத்தில் சூரியன் வலது கண்ணுக்கும் சந்திரன் இடது கண்ணுக்கும் காரக கிரகங்களாக அமைந்துள்ளனர். இரண்டாம் வீடு வலக்கண்ணையும் பன்னிரெண்டாம் வீடு இடக்கண்ணையும் குறிக்கும் பாவங்களாகும். இரண்டாம் இடத்திலும் - பன்னிரெண்டாம் இடத்திலும் பாவ கிரகங்கள் இருந்து இந்த இடத்து பலமில்லாமல் இருந்து சூரியனும் சந்திரனும் பாதிக்கபட்டு இருந்தாலும் அந்த ஜாதகனுக்கோ அல்லது ஜாதகிக்கோ கண் சம்பந்தமான குறைபாடுகள் உண்டாகும் .

கண் நோய்

கண் நோய்

சூரியன் லக்னத்தில் அமைவது கண்களை பாதிக்கும் என்கிறது மருத்துவ ஜோதிடம். சூரியன் மேஷ லக்னத்தில் உச்சம் பெற்று இருந்தால் கண்களில் எரிச்சல் ஏற்படும். மேஷம் செவ்வாயின் வீடு என்பதால் கண்களில் உஷ்ணத்தால் ஏற்படும் எரிச்சல் ஏற்படும். சூரியன் சிம்ம லக்னத்தில் ஆட்சி பெற்று இருந்தால் மாலைக்கண் நோய் ஏற்படும். சூரியன் கடகத்தில் லக்னத்தில் இருந்தால் கண்களில் பீளையும் நீரும் வடியும். மேலும் கண் புரை நோய் ஏற்படும்.

சூரியன் சந்திரன் சேர்க்கை

சூரியன் சந்திரன் சேர்க்கை

சூரியன் துலா லக்னத்தில் நீசம் பெற்றிருந்தால் பார்வையிழப்பு ஏற்படும். சூரியன் இரண்டாம் வீட்டில் நிற்பது, இரண்டாம் வீட்டில் இரண்டிற்க்கு மேற்பட்ட அசுப கிரகங்கள் நிற்பது, அசுப தொடர்பு பெற்ற சந்திரன் இரண்டாம் வீட்டில் நிற்பது போன்றவை பார்வை இழப்பை ஏற்படுத்தும். .சூரியனும் சந்திரனும் இணைந்து இரண்டாமிடத்தில் நிற்பது மாலைகண் நோயை ஏற்படுத்தும். இதுபோன்ற ஜாதக அமைப்பு உடையவர்கள் பானு சப்தமியில் சூரிய பகவானை வணங்கி வர பார்வை கோளாருகள் நீங்கும்.

சூரியனின் நன்மை

சூரியனின் நன்மை

கால புருஷனுக்கு ஆத்ம காரகன் என்பதாலும் உடல் முழுவதிற்க்கும் சூரியன் காரகமாவதால் தொழுநோய்க்கும் சூரியன் முதன்மை காரகம் வகிக்கிறார். மேலும் வைட்டமின் டி குறைபாடும் தோல் நோயிற்க்கு காரணம் என்கின்றனர் அறிவியலார். வைட்டமின் டிக்கு காரக கிரகம் சூரியனாகும். மேலும் நமக்கு தேவையான வைட்டமின் டி சூரிய வெளிச்சத்திலிருந்துதான் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ரத சப்தமி விரதம்

ரத சப்தமி விரதம்

சூரியன், சுக்கிரன் மற்றும் சனி எந்த ராசியிலும் இணைவு பெறுவது. சூரியனும் சந்திரனும் நீர் ராசியில் இணைந்து நின்றால் ஜாதகருக்கு உடம்பில் வெள்ளை புள்ளிகள் ஏற்படும். ரத சப்தமியில் சூரிய பகவானை வணங்கி வர தொழுநோய் நீங்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

சூரியன் சனி சேர்க்கை

சூரியன் சனி சேர்க்கை

ஜோதிடத்தைப் பொறுத்தவரை பத்தாமிடம் இடம் உத்தியோக ஸ்தானமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பத்தாமிடத்தின் அதிபதி பத்தில் இருந்து சூரியனின் பார்வை சேர்க்கை ஏற்பட்டால் அரசு வேலை கிடைக்கும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. மேலும் கர்மகாரகன் என கூறப்படும் சனீஸ்வரன் அரசாங்க உத்யோக காரகன் சூரியனுடன் சேர்க்கை பெற்றிருந்தால் அரசு வேலை கிடைக்கும்.

பத்தாம் வீட்டில் சூரியன்

பத்தாம் வீட்டில் சூரியன்

ஜாதகத்தில் சூரியனுடன் சனி சேர்க்கை பெற்று இருந்தால் ராஜாங்க சம்மந்தமான வேலைகள், அரசு, அரசு சார்ந்த தொழில், அரசியல், தலைமை பதவி, கெளரவ பதவிகள் ஆகியவை அமைகின்றது. அரசியலுக்கும் அரசியல் பதவிகளுக்கும் காரக கிரகங்கள் சூரியன் சந்திரன் மற்றும் கால புருஷனுக்கு பத்தாம் வீட்டதிபதியான சனைஸ்வர பகவானும் ஆவர். அரசியலில் கொடிகட்டி பறக்க விரும்புபவர்கள் ரதசப்தமியில் சூரியனை வணங்க அரசியலில் அமோக வெற்றி உண்டாகும்.

அரசு வேலை

அரசு வேலை

ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் படித்தால் எதிரிகளை வெற்றி கொள்ள முடியும். எதிரிகள் நம் கட்டுக்குள் இருப்பார்கள். ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் 7 மணிக்குள் அமைந்த சூரிய ஹோரையில் சிவபெருமானின் கோவிலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். இந்த விரதத்தை 108 நாட்கள் செய்து வர வேண்டும். அந்த 108 நாட்களும் அசைவ உணவையும், கருப்பு நிற ஆடைகள் அணிவதையும் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அரசு வேலை, அரசாளும் யோகம் வரும்.

English summary
Ratha Sapthami falls on Shukla Paksha Saptami in Magha month every year is known as Ratha Saptami as per Hindu calendar. Devotees believed that Lord Surya Dev started enlightening the whole world on this day and considered as Surya Jayanti. Chant Surya Mantra daily for job problem.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X