For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலியுகத்தினை கடக்க உதவும் குருபக்தி

By Staff
Google Oneindia Tamil News

-அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சென்னை: கலியுகத்தில் கடவுளை அடைய ஒரேவழிஎன்பதைஉணர்ந்து பக்தி மார்க்கத்திற்கு வந்துக்கொண்டிருக்கின்றனர்.

கலியுகமும் ஸ்ரீ க்ருஷ்ணரும்:

'பகவான் கிருஷ்ணரிடம் பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் கலியுகம் எப்படி இருக்கும் என்ற கேள்வியை கேட்டனர்.

Symptoms of Approaching kali yuga a story from Bhagavatam

அதற்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், "சொல்வதென்ன? எப்படி இருக்கும் என்றே காண்பிக்கிறேன்." என்று கூறி.. தனது வில்லில் இருந்து நான்கு அம்புகளை நான்கு திசைகளிலும் செலுத்தி அவற்றை எடுத்துக் கொண்டு வருமாறு கூறினார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் ஆணைப்படி நால்வரும் நான்கு திசைகளில் சென்றனர்.

முதலில் பீமன், அம்பை எடுத்த இடத்தில் ஒரு காட்சியை கண்டான்... அங்கு ஐந்து கிணறுகள் இருநதன. மத்தியில் ஒரு கிணறு, அதைச் சுற்றி நான்கு கிணறுகள்.

சுற்றியுள்ள நான்கு கிணறுகளில் சுவை மிகுந்த தண்ணீர் நிரம்பி வழிந்து கொண்டே இருந்தது. ஆனால் நடுவில் உள்ள கிணறு மட்டும் நீர் வற்றி இருந்தது...இதனால் பீமன் சற்று குழம்பி, அதை யோசித்தபடியே அந்த இடத்தை விட்டு கிருஷ்ணரை நோக்கி நடநதான்.

அர்ஜூனன், அம்பை மீட்ட இடத்தில் ஒரு குயிலின் அற்புதமான குரலைக் கேட்டான். பாடல் கேட்ட திசையில் திரும்பிப் பார்த்தான் அர்ஜூனன், அங்கு ஒரு கோரமான காட்சியை கண்டான்...அந்தக் குயில் ஒரு வெண்முயலை கொத்தித் தின்று கொண்டிருந்தது. அந்த முயலோ வலியால் துடித்துக் கொண்டிருந்தது. மெல்லிசை கொண்டு மனதை மயக்கும் குயிலுக்கு இவ்வளவு கொடிய மனம் உள்ளதே என்று எண்ணியபடி, குழப்பத்தோடு அங்கிருந்து நகர்ந்தான்.

சகாதேவன், கிருஷ்ணரின் அம்பை எடுத்துக் கொண்டு திரும்பி வரும் வழியில் ஒரு காட்சி கண்டான். பசு ஒன்று அழகிய கன்றுகுட்டியை ஈன்றெடுத்து, அதனைத் தன் நாவால் வருடி சுத்தம் செய்து கொண்டிருந்தது. கன்று முழுமையாக சுத்தம் ஆகியும் தாய்ப் பசு நாவால் வருடுவதை நிறுத்தவில்லை இதனால் கன்றுக்கு சிறிய காயம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. இதனை தடுக்க சுற்றியிருந்த பலர் கன்றை பசுவிடம் இருந்து மிகவும் சிரமப்பட்டு பிரித்தனர். அதனால் அந்தக் கன்றுக்கு பலத்த காயங்கள் உண்டானது. 'தாய் எப்படி பிள்ளையை காயப்படுத்த முடியும்?' என்ற குழப்பத்தோடு அவனும் கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.

அடுத்ததாக நகுலன், கண்ணனின் அம்பு ஒரு பெரிய மலையின் அருகில் இருப்பதைக் கண்டு எடுத்துக் கொண்டு திரும்பினான். அப்போது...மலை மேலிருந்து பெரிய பாறை ஒன்று கீழே உருண்டு வந்தது. வழியில் இருந்த அனைத்து மரங்களையும் தடைகளையும் இடித்துத் தள்ளி, வேகமாக உருண்டு வந்தது. அவ்வாறு வேகமாக வந்த அந்த பாறை, ஒரு சிறிய செடியில் மோதி அப்படியே நின்றுவிட்டது. ஆச்சர்யத்தோடு அதைக் கண்ட நகுலன் தெளிவு பெற பகவானை நோக்கி புறப்பட்டான்.

இவ்வாறு பாண்டவர்கள் நால்வரும் கிருஷ்ணரிடம் வந்து சேர்ந்தனர்.

அவரவர் தாங்கள் கண்ட காட்சியையும், மனதில் உள்ள குழப்பத்தையும் ஞானக்கடலான கிருஷ்ணரிடம் கூறி, அதற்கான விளக்கத்தை கேட்டனர்.

கிருஷ்ணரோ வழக்கமான தன் மெல்லிய சிரிப்புடன் விளக்கினார்...

"பீமா...! கலியுகத்தில் செல்வந்தர்களும், ஏழைகளும் அருகருகே தான் வாழ்வார்கள்... ஆனால், செல்வந்தர்கள் மிகவும் செழிப்பாக இருந்தாலும், தம்மிடம் உள்ளதில் ஒரு சிறு பகுதியைக் கூட ஏழைகளுக்குக் கொடுத்து உதவ மாட்டார்கள்... ஒரு பக்கம் செல்வந்தர்கள் நாளுக்குநாள் செல்வந்தர்களாகவே ஆக, மற்றொரு பக்கம் ஏழைகள் ஏழ்மையில் வாடி வருந்துவார்கள்... நிரம்பி வழியும் நான்கு கிணறுகளுக்கு நடுவில் உள்ள வற்றிய கிணற்றை போல்..." என்றார்.

பின்னர் அர்ஜூனனிடம் திரும்பி, கிருஷ்ணர்,"அர்ஜூனா! கலியுகத்தில் போலி ஆசிரியர்கள், மத குருக்கள், போன்றவர்கள் இனிமையாகப் பேசும் இயல்பும், அகன்ற அறிவும் கொண்டவர்களாக இருப்பார்கள்...

இருப்பினும் இவர்கள் மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் கயவர்களாகவே இருப்பார்கள்... இனிய குரலில் பாடிக்கொண்டே, முயலை கொத்தித் தின்ற குயிலைப்போல...!" என்றார்.

தொடர்ந்து சகாதேவனிடம் கிருஷ்ணர், "சகாதேவா! கலியுகத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மீதுள்ள கண்மூடித்தனமான பாசத்தால் அவர்கள் தவறு செய்தாலும் அதைப் பொருட்படுத்தாமல், பிள்ளைகளின் நெறி தவறிய வாழ்விற்கு தாங்களே காரணமாக இருப்பார்கள்.. இதனால் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை துன்பப்பிடியில் சிக்கிக் கொள்ளும் என்பதை கூட மறந்து விடுவார்கள்... இதையடுத்து, பிள்ளைகளும் வருங்காலத்தில் தீய வினைகளால் துன்பத்தை அனுபவிப்பார்கள். இவ்வாறு, பிள்ளைகளின் அழிவிற்கு பெற்றோர்களே காரணமாவார்கள்... கன்று குட்டியை நாவால் நக்கியே காயப்படுத்திய பசுவைப் போல்..."

அடுத்ததாக, நகுலனை பார்த்த கிருஷ்ணர்,"நகுலா...! கலியுகத்தில் மக்கள் சான்றோர்களின் நற்சொற்களைப் கேளாமல், நாளுக்கு நாள் ஒழுக்கத்தினின்றும், நற்குணத்தினின்றும், நன்னெறிகளிலிருந்தும் நீங்குவார்கள்... யார் நன்மைகளை எடுத்துக் கூறினாலும் அதை அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள்... எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி செயல்படுவார்கள்... இத்தகையவர்களை இறைவனால் மட்டுமே தடுத்து நிறுத்தி, நிதானப்படுத்தி நன்னெறியுடன் செயல்படுத்த முடியும்...

மரங்களாலே தடுத்து நிறுத்த முடியாத பெரிய பாறையை... தடுத்து நிறுத்திய சிறு செடியைப் போல...!" என்று கூறி முடித்தார் பகவான் கிருஷ்ணர்.

சத்திய யுகமான கிருத யுகத்தில் தர்மம் என்னும் பசு மாடு நான்கு கால்களில் நிற்குமாம். த்ரேதா யுகத்தில் அதற்கு மூன்று கால்கள்தான். அதவது தர்மம் 25 விழுக்காட்டை இழந்துவீட்டது. அப்போது ராம பிரான் தோன்றினார். த்வாபர யுகத்தில் தர்மம் என்னும் மாடு இரண்டு கால்களை - அதவது 50 விழுக்காட்டை இழந்து விட்டது. அப்போதுதான் கிருஷ்ணன் தோன்றினார். யுகத்தின் முடிவில் மஹாபாரத யுத்தம் நடந்தது. கலியுகத்தில் தர்மப் பசுவுக்கு இன்னும் ஒரு காலும் போய், ஒற்றைக் காலில் 25 சதவிகித புண்ய கர்மாவுடன் தள்ளாடிக் க்ண்டிருக்கும். கலியுக முடிவில் அந்தக் காலும் போய் உலகமே அழியும். பிறகு மீண்டும் கிருத யுகம் பிறக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

இவற்றில் கலியுகத்தில் தர்மங்கள் சார்ந்த வாழ்க்கை சீர்குலையுமென்றும் கலியுகத்தின் முடிவில் அதர்மவாதிகளே உச்சமாக ஆட்சி செய்யும் தருணத்தில் கல்கி அவதாரம் நிகழும் என்றும் கூறப்படுகிறது. கலியுகத்தில் அப்படி என்னென்ன நடக்குமாம்.

யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத

அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானாம் ஸ்ருஜாம்யஹம் |

பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம்

தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே ||

கலியுகத்தில் தர்மம், ஸத்யம், பொருமை, தயை, ஆயுள் தேஹ பலம், ஞாபகம் ஆகிய இவைகள் நாளுக்கு நாள் குறையும்.

எப்பொழுதெல்லாம் தர்மம் குலைகிறதோ, எப்பொழுதெல்லாம் அதர்மம் தலை விரித்தாடுகிறதோ, எப்பொழுதெல்லாம் சாதுக்கள் துன்பத்திற்கு ஆளாகின்றார்களோ அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்டுவதற்கும், தீயவர்களை அழிப்பதற்கும், சாதுக்களை காப்பதற்கும் நான் யுகம் யுகமாக அவதரிக்கிறேன் என்பது இதன் பொருள்.

இன்றைய கலியுகத்தில் தற்போது கிருஷ்ணர் கூறியபடித்தான் நடந்துகொண்டிருக்கிருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

அதே சமயத்தில் இதற்கு தீர்வாகவும் இறைவனை சரணடைவதை தவிர வேறு எந்த தீர்வும் நமக்குக் கைகொடுக்காது என்தையும் கிருஷ்ணர் தெளிவாக கூறியுள்ளார்.

எனவே இந்த குருநாளில் காஞ்சி பெரியவர், ஸிர்டி சாய்பாபா, ரமணர் போன்ற சித்த புருஷர்களின் வழியில் சென்று இந்த கலியுகத்தில் நாமும் ஆன்மீகப் பாதையை தேர்ந்தெடுத்து இறையருள் பெறுவோம்.

English summary
Kali Yuga is the last of the four stages the world goes through as part of the cycle of yugas described in the Sanskrit scriptures, within the present Mahayuga. The other ages are called Satya Yuga, Treta Yuga, and Dvapara Yuga.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X