For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேன்மை தரும் ஐப்பசி மாதம்

Google Oneindia Tamil News

ஐப்பசி மாதம் தமிழ் மாதங்களில்-சித்திரை தொடங்கி 7வது மாதமாகும். ஜோதிடவியலில் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிக்கும் காலம் ஐப்பசி மாதம் என்று அழைக்கப்படுகிறது.. பொதுவாக பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் பெயர் வைப்பது மரபு. இருப்பினும் ஐப்பசி மாதத்தில் பிறக்கக்கூடிய ஆண் குழந்தைகளுக்கு உபேந்திரன் என்றும் பெண் குழந்தைகளுக்கு சந்திரவதி என்றும் பெயர் வைக்கலாம்.

துலா ஸ்நானம்:

ஐப்பசி மாதம் முதல் தேதி (18-10-2014) சனிக்கிழமை முதல் 30 நாட்கள் இம்மாதம் முழுவதும் துலா ஸ்நான காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த 30 நாட்களும் உலகில் உள்ள அனைத்து புண்ணீய தீர்த்தங்களும் காவேரி நதியில் கலப்பதாக ஐதீகம். எனவே ஐப்பசி மாதத்தில் ஒரு நாளாவது காவேரியில் நீராடி ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்து வழிபாடு செய்வது சகல பாபங்களும் நிவர்த்தியாகி புண்ணியங்கள் உண்டாகும்.

ஐப்பசி மாதத்தின் சிறப்புகள்:

ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் பல்வேறு சிறப்பம்சங்கள் காணப்படுகின்றன. பலவிதமான பண்டிகைகள் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன வாழ்க்கையில் உயர்வையையும் மேன்மையையும் கொடுக்கின்றன என்பது நம்பிக்கை. இம்மாத சிறப்புகளை காண்போம்.

கோவத்ச துவாதசி:

ஐப்பசி மாதம் 3ம் தேதி 20-10-2014 திங்கள் கிழமை கோவத்ச துவாதசி ஆகும். இன்று மாலை நேரத்தில் 04-30 மணி முதல் 06-00 மணிக்குள் பசுவுக்கும் கன்றுக்கும் உணவு கொடுத்து பூஜித்து வழிபட்டால் வீட்டில் பெண்களும் குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.

தனத்திரயோதசி:

ஐப்பசி மாதம் 4ம் தேதி 21-10-2014 செவ்வாய் கிழமை தனத் திரயோதசி ஆகும். இன்று விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவது சிறப்பு.. இதனால் பொருள் பணம் சேர்க்கை உண்டாகும்..மேலும் தன்வந்திரியை பூஜித்து வழிபட்டால் அனைவரும் நோய் நீங்கி ஆரோக்கியமாக வாழலாம்.

தீபாவளி:

ஐப்பசி மாதம் 5ம் தேதி 22-10-2014 புதன் கிழமை தீபாவளி ஆகும். ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்சம்-தேய்பிறை சதுர்தசி திதி நரக சதுர்தசி என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளன்று கிருஷ்ணர் நரகாசுரனை கொன்று மக்களை காத்தமைக்காக தீபாவளி கொண்டாடப்படுகிறது. இன்று காலை எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு கிருஷ்ணர் பூஜையும் லட்சுமி குபேர பூஜையும் செய்வது சிறப்பு. மஹாலட்சுமியின் அருளினால் செல்வ வளம் சிறக்கும்.

கேதார கௌரி விரதம்:

ஐப்பசி மாதம் 6ம் தேதி 23-10-2014 வியாழன் கிழமை கேதார கௌரி விரதம். இன்று அர்த்தநாரீஸ்வரரை வழிபடுவது சிறப்பு. குடும்பத்தில் ஒற்றுமை சிறக்கும். குடும்பத்தில் சச்சரவுகள் குழப்பங்கள் பூசல்கள் நீங்கும்.

யமத் துவிதியை:

ஐப்பசி மாதம் 8ம் தேதி 25-10-2014 சனி கிழமை யமத் துவிதியை ஆகும். இன்று சகோதர சகோதரிகள் ஒன்று கூடி சகோதரியின் வீட்டில் விருந்து உண்டு மன மகிழ்ச்சியுடன் பரிசுகள் பரிமாறிக் கொள்ள வேண்டும்.. இதனால் குடும்பத்தார் அனைவரும் தீர்க்க ஆயுளுடன் மகிழ்ச்சியுடன் வாழலாம்.

இந்த மாதம் 11ம் தேதி காலை 07-42 முதல் 08-18க்குள் வாஸ்து பூஜை செய்வது சிறப்பு. குடும்பத்தில் சுபிட்சம் நிலவும்.

ஐப்பசி மாத சுபமூகூர்த்த நாட்கள்

தமிழ் தேதி ஆங்கில தேதி கிழமை திதி நட்சத்திரம் நேரம்
ஐப்பசி 13 30-10-2014 வியாழன் சப்தமி உத்திராடம் காலை 08-09
ஐப்பசி 16 02-11-2014 ஞாயிறு தசமி சதயம் காலை 08-09
ஐப்பசி 23 09-11-2014 ஞாயிறு திரிதியை ரோகிணி காலை 07-08
ஐப்பசி 24 10-11-2014 திங்கள் சதுர்த்தி மிருகசீரிடம் காலை 5.30-6.30
ஐப்பசி 26 12-11-2014 புதன் சஷ்டி புனர்பூசம் காலை 5.30-6.30
ஐப்பசி 27 13-11-2014 வியாழன் சப்தமி பூசம் காலை 5-6

English summary
The Tamil month of Aippasi falls between 18.10.2014 and 16.11.2014. Known as Thula masam the first day is known as Aippasi Vishu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X