For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பருவமழை எப்படி இருக்கும் - 2019ஆம் ஆண்டில் பஞ்சாங்கம் கணித்ததும் பலித்ததும்

2019ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை, வடகிழக்குப் பருவமழை தவறாது பெய்யுமா? புயல், மழை, சூறாவளி எப்படி இருக்கும் என்று தமிழ் பஞ்சாங்கம் கணித்திருந்தது. அணைகள் நிரம்பி வழியும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்ப

Google Oneindia Tamil News

மதுரை: பருவமழை தவறாது பெய்தால் மட்டுமே நாட்டின் பொருளாதாரம் தடுமாறாமல் இருக்கும். 2018ஆம் ஆண்டில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட அதிகமாகவே பெய்தது, வெள்ளம் ஏற்பட்டு அணைகள் நிரம்பி வழிந்தன. வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவில் இல்லை. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் தண்ணீர் பிரச்சினை தலை தூக்கியது. 2019 ஆங்கில புத்தாண்டில் பருவமழை அபரிமிதமாக பெய்யும் என்றும் அணைகள் நிரம்பி வழியும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும் என்றும் தமிழ் பஞ்சாங்கம் கணித்திருந்தது. கோடை வெயில் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்றும் பஞ்சாங்கம் கணித்திருந்தது பலித்துள்ளது.

2019ஆம் ஆண்டின் பருவமழை காலமான ஜூன் தொடங்கி டிசம்பர் வரை மழை பெய்வதற்கான நாட்களையும், அந்த நாட்களில் மழை பெய்தால் நாடு சுபிட்சமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது. பருவமழை சற்றே தாமதமாக தொடங்கினாலும் கர்நாடகத்தில் பெய்த மழையால் அணைகள் நிரம்பி காவிரியில் வெள்ளம் பெருகியது. மேட்டூர் அணை உள்ளிட்ட பல அணைகள் நிரம்பி வழிந்தன.

ஏப்ரல், மே மாதங்களில் இந்த ஆண்டு கோடை வெயில் அதிகமாக இருக்கும் புழுக்கம் அதிகமாகும். ஜூன் தொடக்கத்தில் அதிகமாக காற்று வீசும் சேதம் அதிகமாகுமாம். சென்னையில் வெப்பத்தினால் தவிப்பார்கள் என்று பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டது போலவே இந்த ஆண்டு அனல் காற்றின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.

கிறிஸ்துமஸ் 2019: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை - வாழ்த்துக்களை பரிமாறிய கிறிஸ்துவர்கள்கிறிஸ்துமஸ் 2019: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை - வாழ்த்துக்களை பரிமாறிய கிறிஸ்துவர்கள்

வானியல் மாற்றங்கள்

வானியல் மாற்றங்கள்

வானிலை ஆய்வு மையம் புயல் மழை பற்றி சில வாரங்களுக்கு முன்பு கணித்து கூறினாலும் பஞ்சாங்கம் மூலம் ஓராண்டுக்கு முன்பே மழை, புயல் பற்றி முன்பே கணிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருவெள்ளம், குமரியை தாக்கிய ஓக்கி புயல், டெல்டா மாவட்டங்களை தாக்கிய கஜா புயல் பற்றி முன்பே பஞ்சாங்கம் கணித்துள்ளது. அதே போல 2019ஆம் ஆண்டிலும் மழை, வெள்ளம், புயல் பற்றி பஞ்சாங்கம் கணித்து மக்களை எச்சரித்துள்ளது.

ஆடி முதல் கார்த்திகை வரை மழை

ஆடி முதல் கார்த்திகை வரை மழை

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் விகாரி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. அந்த ஆண்டின் மேகாதிபதியாக சனி வருவதால் எட்டு திக்கும் புயலுடன் நல்ல மழை பெய்யும். தேவையான நேரத்தில் மழை பெய்யாமல் தேவையில்லாத நேரத்தில் மழை பெய்யும் என கணிக்கப்பட்டிருந்தது. ஆடி, ஆவணி மாதங்களில் பகல், மாலை, இரவில் நல்ல மழை பெய்யும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படும் அணைகள் நிரம்பி வழியும் என கணித்தது போலவே பலித்தது. தமிழகம் முழுவதுமே அணைகள், நீர் நிலைகள் நிரம்பி வழிந்தன.

பருவமழை

பருவமழை

இந்த ஆண்டு துவக்கத்திலேயே பல நகரங்களில் தண்ணீர் பிரச்சினை தலைகாட்டத் தொடங்கியது. சென்னை உள்ளிட்ட பெரு நகரங்கள் மழையில்லாமல் தண்ணீர் பஞ்சத்தில் சிக்கின. குடி தண்ணீர் காசு கொடுத்து வாங்கினாலும் குளிக்கவும், வீடுகளில் உபயோகிக்கவும் தண்ணீர் இன்றி தத்தளித்தன. அவ்வப்போது பெய்த திடீர் மழையால் சென்னை பெருநகரங்கள் தப்பின. தென் மாவட்ட அணைகளும் நிரம்பின விவசாய பணிகள் உற்சாகமாக நடைபெற்றன.

புயாலால் தீபாவளி நாளில் மழை

புயாலால் தீபாவளி நாளில் மழை

ஐப்பசி மாதம் அடைமழைக்காலம் என்று கணித்திருந்தாலும் தீபாவளி வியாபாரம் பாதிக்கும் அளவிற்கு மழை பெய்யும் என்றும், புயல் பாதிப்பு ஏற்படும் என்றும் பஞ்சாங்கம் கணித்திருந்தது. அதேபோல புயல் பாதிப்பு ஏற்பட்டது. மழையால் விளைச்சல் அதிகமாகி விலைவாசி குறையும் என்றும் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு வெங்காய விலை விண்ணை முட்டியது.

English summary
Tamil panchangam prediction rains and cyclone 2019
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X