For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விளம்பி: கார்த்திகையில் பிரளயம்-சுனாமி வார்னிங் வரலாம்- கடலோர மாவட்ட கனமழை- பஞ்சாங்கம் கணிப்பு

விளம்பி தமிழ் புத்தாண்டு இன்னும் ஒரு வாரத்தில் பிறக்கப் போகிறது. இந்த தமிழ் புத்தாண்டில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

Recommended Video

    விளம்பி: கார்த்திகையில் பிரளயம்-சுனாமி வார்னிங் வரலாம்

    சென்னை: விளம்பி தமிழ் புத்தாண்டு பிறக்கப் போகிறது. சித்திரை முதல் பங்குனி வரை 12 மாதங்களும் நாட்டில் ஏற்படும் மழை, புயல், சூறாவளி, அரசியல் மாற்றங்கள் பற்றி பஞ்சாங்கம் கணித்துள்ளது.

    சனிக்கிழமையன்று விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது. நவகிரக ஆதிபத்தியங்களில் ராஜா, தான்யாதிபதியாக திகழ்கிறார். சனி மந்திரியாகவும், சுக்கிரன் சேனாதிபதியாகவும் அர்க்காதிபதி, மேகாதிபதியாகவும் திகழ்கின்றனர்.

    இந்த விளம்பி வருடத்தில் அதிக மழைப்பொழிவும் உண்டு. வருஷ நட்சத்திர தேவதையாக காமதேனு வருவதால், கால்நடைகள் பஞ்சமின்றி திகழும். சுபிட்சம் பெருகும் என பஞ்சாங்கம் கணித்துள்ளது.

    விளம்பி ஆண்டு வெண்பா

    விளம்பி ஆண்டு வெண்பா

    விளம்பி ஆண்டு வெண்பா படி பார்த்தால் மழை குறைவு என்று கூறினாலும் சுக்கிரன் பலமாக இருப்பதால் பருவமழைகள் நன்றாக பெய்யும். புழுதி காற்று பலமாக தாக்கும். தானியங்கள் விலை குறையும். ஹோட்டல் உணவுப்பண்டங்களில் மாற்றங்கள் ஏற்படும். புதிய நோய்கள் தாக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

    சூறாவளி காற்று

    சூறாவளி காற்று

    வைகாசி மாதம் மேக கர்ஜனை ஏற்படும். ஆடி மாதம் அதிகமான சூறாவளி ஏற்படும். புரட்டாசியில் சூறாவளி காற்றால் மழையும் காற்றாலை, செல்போன் டவர்கள் பாதிக்கும். கார்த்திகை மாதம் நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு முக்கிய அணைகள் நிரம்பும். டிசம்பர் 15, 2018 உலகத்தில் மிகப்பெரிய பிரளயம் ஏற்படும். பனி உருகி இந்தியாவின் சீதோஷ்ணநிலை மாறும்.

    நீர், நெருப்பால் விபத்து

    நீர், நெருப்பால் விபத்து

    இந்த ஆண்டு பால் உற்பத்தி அதிகமாக இருக்கும். மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த சேது சமுத்திர திட்டம் நிறைவேறும். சதுரகிரி, மூணாறு, ஜவ்வாது மலை, மேகமலை,திருப்பதி ஏற்காடு மலைப்பகுதிகளில் தீ விபத்து ஏற்படும். புரட்டாசி மாதம் புஷ்கரணி நடக்கும் போது தாமிரபரணியில் வெள்ளம் ஏற்பட்டு உயிர்சேதம் ஏற்படும்.

    புதிய கட்சி

    புதிய கட்சி

    விளம்பி புத்தாண்டில் என்னென்ன மாற்றங்கள் என்பதை பார்த்தோம். 2019 ஜனவரி மாதம் புதிய அரசியல் கட்சி ஒன்றை பிரபல நடிகர் அறிவிப்பார். 2019 பிப்ரவரி மாதம் அதாவது மாசி மாதம் நிகழ உள்ள ராகு கேது பெயர்ச்சியால் தமிழக அரசியலிலும், இந்திய அரசியலிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

    புயல் காற்று வீசும்

    புயல் காற்று வீசும்

    காய்கறிகள், பருப்புகள் விலை சரியும், சூறாவளி மழை, திடீர் வெள்ளம் ஏற்படும். கடல் உள்வாங்கும் திடீர் என சுனாமி எச்சரிக்கையும் விட வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பொழியும் என்றும் பஞ்சாங்கம் கணித்துள்ளது. இது யாரையும் அச்சுறுத்தவோ, பீதி ஏற்படுத்தவோ எழுதப்பட்டதல்ல. மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே பஞ்சாங்கம் கணித்து கூறியுள்ளது.

    2017 கணிப்பு பலித்தது

    2017 கணிப்பு பலித்தது

    ஹேவிளம்பி வருடத்திய ஆற்காடு ஸ்ரீ சீதாராமஹனுமான் சர்வ முகூர்த்த பஞ்சாங்கத்தில் இந்த புயல், வெள்ளச் சேதம், பாதிப்பு பற்றியும், பூமி அதிர்வு, நிலநடுக்கம் பற்றியும் சில மாதங்களுக்கு முன்பே கணிக்கப்பட்டுள்ளது. ஓகி புயல் தென்மாவட்டங்களை புரட்டிப் போட்டது. கனமழை, சூறாவளிக் காற்றால் கன்னியாகுமரி மாவட்டம் உருக்குலைந்து போனது குறிப்பிடத்தக்கது.

    English summary
    An astrological panchangam predict important events and rain in TamilNadu and said rivers will flooded with hurricane.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X