For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தை அமாவாசை 2020: தில ஹோமம் செய்து கொடுக்கும் பிண்டங்களை முன்னோர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா?

முன்னோர்களுக்கு தில ஹோமம் செய்து முடித்து பிண்டங்களை கடல் நீரில் கரைக்கும் சமயத்தில், அதற்கு நேர் மேலே வானில் கருட பகவான் வட்டமிடவேண்டும். அப்படி நடந்தால் தான், பித்ருக்கள் நம்முடைய தர்ப்பணத்தை ஏற்றுக

Google Oneindia Tamil News

மதுரை: ஒருவர் தன்னுடைய முற்பிறவியில், தனது சகோதர சகோரிகளை கொடுமைப்படுத்தி, அவர்களை ஏமாற்றி அவர்களுக்கு முறையாக சேரவேண்டிய சொத்துக்களை அபகரித்திருந்தால், மறுபிறவியில், அந்த பாவம் நம்மை பற்றிக்கொண்டு, உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலமாக கொடுமைக்கு ஆளாக நேரிடும். ஒருவர் தனது முற்பிறவியில், தெரிந்தோ தெரியாமலோ கருச்சிதைவு செய்திருந்தாலும் சரி, இப்பிறவியில் என்னதான் கோவில் குளம் என்று சுற்றி வந்தாலும் கூட சந்ததி விருத்தி ஏற்படாமல், தான் ஆண்டு அனுபவிக்கும் தன்னுடைய சொத்துக்களை எல்லாம், உறவினர்களுக்கோக அல்லது, கோவிலுக்கோ எழுதிவைக்க வேண்டிய நிலை ஏற்படும்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று முது மொழியும், பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தானே வரும் என்ற திருக்குறளும் எடுத்துரைக்கின்றன. இதில் முற்பகல் என்பது நம்முடைய இந்த பிறவி மட்டுமல்லாது, முற்பிறவியில் நாம் செய்த நற்செயல்களும், பாவச் செயல்களும் நம்மை நிழல் போல் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கும்.

இப்பிறவியில் நாம் உயிரோடு இருக்கும் வரையிலும் கூடுமானவரை, நல்ல செயல்களையே செய்ய வேண்டும் என்று சான்றோர்கள் கூறியிருக்கிறார்கள். அப்படி இல்லாவிட்டால், நாம் செய்த பாவங்கள் அனைத்தும், நம்முடைய வாழ்க்கைக்கு பின்பு, நமது சந்ததிகளுக்கு பித்ரு தோஷமாக மாறி அவர்களின் வாழ்க்கையை அலைக்கழிக்கக் கூடும். அதனால் தான், நாம் முற்பிறவியில் செய்த பாவங்களாலும், நமது முன்னோர்கள் செய்த பாவச் செயல்களாலும் பித்ரு தோஷம் ஏற்படுகிறது என்று புராணங்கள் கூறுகின்றன. ஒருவர் எவ்வாறான பாவச் செயல்களை செய்தால் பித்ரு தோஷமாக மாறும் என்பதையும் புராணங்கள் தெளிவாக விளக்கியுள்ளன.

ஏழரை சனி ஆரம்பிக்குதா? விரைய சனி காலத்தில் வீடு சொத்து வாங்குங்க நிரந்தரமாக தங்கும்ஏழரை சனி ஆரம்பிக்குதா? விரைய சனி காலத்தில் வீடு சொத்து வாங்குங்க நிரந்தரமாக தங்கும்

இப்பிறவியிலும் தொடரும் பாவம்

இப்பிறவியிலும் தொடரும் பாவம்

ஒரு திருமணமான ஆண்மகன், முற்பிறவியில் கட்டிய மனைவியை சரிவர கவனிக்காமல், மைனராக மாறி தான் தோன்றித்தனமாக சுற்றிக்கொண்டும், பிற பெண்களின் மீது விரக தாபத்தில் மோகம் கொண்டு, அவர்களே கதி என்று அலைந்து திரிந்தால், இப்பிறவியில், அப்படியே உல்டாவாக மாறி கட்டிக்கொண்ட மனைவியின் மூலமாக பிரச்சனைகள் ஏற்பட்டு நிம்மதி இழந்து தவிப்பான். அதே போல், மணமான பெண் ஒருத்தி, முற்பிறவியில் தாலி கட்டிய கணவனை மதிக்காமல், பிற ஆண்களை நாடிச் சென்றாலும், இப்பிறவியில் அந்த பாவம் தொடர்ந்து வந்து, கணவனின் மூலமாக பிரச்சனைகள் தொடரும்.

பெற்றவர்களின் சாபம்

பெற்றவர்களின் சாபம்

ஒரு ஆண் மகன், முற்பிறவியில் தன்னை பெற்ற தாய் தந்தையரை சரிவர கவனிக்காமல், கட்டிய மனைவியின் பேச்சைக் கேட்டு அவர்களை வெளியில் துரத்திவிட்டால், அவ்வளவு தான், அவர்கள் கோபம் சாபமாக மாறி, மறுபிறவியில் பித்ரு தோஷமாக நம்மை அலைக்கழிக்கும். அதனால் தான், யாருடைய சாபத்திற்கு ஆளானாலும் பெற்றவர்களின் சாபத்திற்கு மட்டும் ஆளாக கூடாது என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

சந்ததி விருத்தி இல்லை

சந்ததி விருத்தி இல்லை

ஒருவர் தன்னுடைய முற்பிறவியில், தனது சகோதர சகோரிகளை கொடுமைப்படுத்தி, அவர்களை ஏமாற்றி அவர்களுக்கு முறையாக சேரவேண்டிய சொத்துக்களை அபகரித்திருந்தால், மறுபிறவியில், அந்த பாவம் நம்மை பற்றிக்கொண்டு, உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலமாக கொடுமைக்கு ஆளாக நேரிடும். ஒருவர் தனது முற்பிறவியில், தெரிந்தோ தெரியாமலோ கருச்சிதைவு செய்திருந்தாலும் சரி, இப்பிறவியில் என்னதான் கோவில் குளம் என்று சுற்றி வந்தாலும் கூட சந்ததி விருத்தி ஏற்படாமல், தான் ஆண்டு அனுபவிக்கும் தன்னுடைய சொத்துக்களை எல்லாம், உறவினர்களுக்கோக அல்லது, கோவிலுக்கோ எழுதிவைக்க வேண்டிய நிலை ஏற்படும்.

சிசிடிவி போல் கண்காணிக்கும் கர்மா

சிசிடிவி போல் கண்காணிக்கும் கர்மா

இவ்வாறான பித்ரு தோஷங்கள் தன்னையும், தன்னை நம்பி இருக்கும் ரத்த சம்பந்தம் உள்ளவர்களையும் சேர்த்தே பாதிக்கும். தீராத நோய்கள், தேவையற்ற வீண் வம்புகள், குடும்பத்திற்குள் சண்டை, சச்சரவுகள் என பிரச்சனைகளை தூண்டிவிட்டுக்கொண்ட இருக்கும். இதைத்தான் கர்மா என்றும், அந்த கர்மா உங்களுக்கு எதிராக எந்த செயலையும் செய்யவில்லை. நீங்கள் முற்பிறவியில் செய்த வினைகளை ஒரு சிசிடிவி போல் படம் பிடித்து, கால புருஷனிடம் கொடுத்து, நீங்கள் முற்பிறவியில் செய்த வினைக்கு தான் எதிர்வினை ஆற்ற சிறிதும் தவறுவதில்லை என்றும் வேதங்களும் சொல்கின்றன.

மூன்று தலைமுறைக்கு பாதிப்பு தான்

மூன்று தலைமுறைக்கு பாதிப்பு தான்

பித்ரு தோஷங்கள் குறைந்தது மூன்ற தலைமுறைகளுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் வலிமை கொண்டதாகும். பித்ரு தோஷங்களை போக்க வேண்டுமானால், அமாவாசை நாட்களில் கடல், ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளுக்கு பித்ருக்களுக்கு தர்ப்பணம் மற்றும் தான தர்மங்களை செய்தால், பித்ரு தோஷங்கள் அனைத்தும் நீரில் பிண்டம் கரைவது போல் கரைந்து விடும். மற்ற அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள், தை அமாவாசை நாளிலாவது பித்ரு தர்ப்பணம் செய்வது அவசியமாகும்.

தில ஹோமம்

தில ஹோமம்

மிகக் கடுமையான பித்ரு தோஷம் உடையவர்கள், ராமேஸ்வரம் சென்று திலா ஹோமம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும். திலா ஹோமம் வேதங்கள் நன்கு கற்றறிந்த வேத பண்டிதர்களால் மட்டுமே செய்ய முடியும். திலா ஹோமம் என்பது நெல்லும் எள்ளும் கலந்து செய்யப்படும் ஹோமம் ஆகும். திலம் என்றால் எள் என்று அர்த்தமாகும். திலா ஹோமம் செய்பவர்கள் அன்றிரவு ராமேஸ்வரத்தில் தங்கியிருக்க வேண்டும். ஹோமம் முடிந்த உடனேயே நேராக வீட்டுக்கு செல்லக்கூடாது.

மஹாவிஷ்ணுவின் அருளாசி

மஹாவிஷ்ணுவின் அருளாசி

தில ஹோமம் செய்து முடித்து பிண்டங்களை கடல் நீரில் கரைக்கும் சமயத்தில், அதற்கு நேர் மேலே வானில் கருட பகவான் வட்டமிடவேண்டும். அப்படி நடந்தால் தான், பித்ருக்கள் நம்முடைய தர்ப்பணத்தை ஏற்றுக்கொள்வதோடு, மஹாவிஷ்ணுவும் நம்மை ஆசீர்வதிப்பதாக அர்த்தம். வைணவ மார்க்கத்தை கடைபிடிப்பவர்கள், ராமேஸ்வரம் அருகில் உள்ள திருப்புல்லாணி கரையில் தில ஹோமம் செய்த பித்ருக்களின் ஆசீர்வாதத்தையும், மஹாவிஷ்ணுவின் அருளையும் பெறலாம். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யாமல் நாம் செய்யும் எந்த விதமான பூஜையோ, தான தர்மமோ பலனளிக்காது. அது கடலில் கரைத்த பெருங்காயம் தான் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். எனவே இந்த தை அமாவாசை நாளில் தாய் தந்தையை இழந்த அனைவரும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து அவர்களின் நல்லாசியை பெறுவது அவசியம்.

English summary
If a person, in his Past-life, had abused his brothers and sisters, deceived them and forfeited the property which they owed to him, in the reincarnation, the sin would overtake us, and they would be persecuted by their brothers and sisters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X