For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிள்ளை வரம் தரும் தை கார்த்திகை விரதம் - அனைத்து தடைகளும் நீங்கும்

தை கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும். உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகைவிரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்

Google Oneindia Tamil News

சென்னை: நாம் நினைத்த காரியம் தடையின்றி நடக்க வேண்டும் என்றால் அதற்கு இறைவன் அருள் தேவை. சிவனின் மைந்தன் முருகப்பெருமானை கார்த்திகை நாளில் விரதம் இருந்து வணங்கினால் நமக்கு ஏற்பட்ட தடைகள் நீங்கும் அனைத்து காரியங்களும் வெற்றிகரமாக நிறைவேறும். குழந்தை செல்வம் வேண்டுபவர்கள் தை கிருத்திகையில் அழகன் முருகனை மனமார நினைத்து ஓராண்டு விரதம் இருந்து வழிபட்டால், அவர்களின் வேண்டுதல் ஏற்கப்பட்டு, கட்டாயம் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. பிள்ளைச் செல்வம் பெற வேண்டிய பெண்கள், பத்தாவது மாதமான தை கிருத்திகையில் முருகனை மனமார நினைத்து ஏறக்குறைய ஓராண்டு விரதம் இருந்து வழிபட்டால், அவர்களுக்கு கட்டாயம் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. திருமண தடைகள், நிலப்பிரச்சினைகள் தீரும்

சஷ்டி திதி முருகனுக்கு உகந்தது. சஷ்டி விரதம் சக்தி வாய்ந்தது. அதுபோல 27 நட்சத்திரங்களில் கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. சரவணப் பொய்கையில் தாமரை மலரில் மிதத்து வந்த முருகனை ஆறு கார்த்திகைப்பெண்கள் எடுத்து வளர்த்தனர். ஈசன் அருளால் ஆறு நட்சத்திரங்களின் தொகுப்பாக, கிருத்திகை நட்சத்திரமாக வானில் இடம் பெற்றதாக கூறுகிறது ஸ்கந்த புராணம். கார்த்திகைப் பெண்களை சிறப்பிக்கும் வண்ணம் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு மாதத்திலும், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் மேற்கொள்வதால், முருகனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். வேலனை வணங்குவதே நமது முதல் வேலை என்று சொல்வது போல், வேல் முருகனை வணங்கினால் அனைத்து வகையான தோஷங்களும் நீங்கும். வேண்டியவை யாவும் அருளும் குணம் கொண்டவர் குமரன். ஞாயிறு இரவு 8.50 முதல் திங்கட்கிழமை இரவு 10.14 வரை கார்த்திகை நட்சத்திரம் உள்ளது.

முருகன் அருள்

முருகன் அருள்

ஒவ்வொரு மாதத்திலும், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் மேற்கொள்வதால், முருகனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆண்டுக்கு மூன்று கிருத்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறுகின்றன. அவை, உத்தராயண துவக்கமான தை மாத தை கிருத்திகை, கார்த்திகை மாதத்தில் வரும் பெரிய கிருத்திகை, தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. இந்த மூன்று கிருத்திகை முருகனுக்கு மிக உகந்த நாட்கள் ஆகும்.

தை கிருத்திகை விரதம்

தை கிருத்திகை விரதம்

கிருத்திகை விரதம் இருப்பவர்கள் பரணியில் இருந்தே விரதம் தொடங்குவது நல்லது. கிருத்திகை விரத நாளில் உப்பில்லாமல் உண்டு, பகலில் உறங்காமல் நோன்பிருந்து முருகப்பெருமானை தரிசிக்க வேண்டும். அடுத்த நாள் அதிகாலை ரோகிணி நட்சத்திரத்தில் முருகப் பெருமானை எண்ணி வழிபட்டு விரதம் முடிக்கலாம். மூன்று நாள்களும் விரதம் இருக்க முடியாவிட்டாலும், குறைந்தது கிருத்திகை நாளிலாவது விரதமிருப்பது நல்லது.

கிருத்திகை விரத பலன்கள்

கிருத்திகை விரத பலன்கள்

கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுபவர்கள் நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள குழந்தைகள் ஆகிய பேறுகளைப் பெற்று சிறப்பாக வாழ்வார்கள். இரவில் உறங்காமல் செய்யாமல் விழித்திருந்து கந்த மந்திரங்களை படித்து கந்தன் அடியார்களுக்கு அன்னதானம் செய்து அவர்களுடன் இணைந்து சாப்பிட வேண்டும். ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் மற்றும் அர்ச்சனைகளிலும் பங்கு கொண்டு முருகனின் அருளை பெறலாம்.

பிள்ளைச் செல்வம்

பிள்ளைச் செல்வம்


தை மாத கிருத்திகை அன்று பல முருகன் தலங்களில் மக்கள் தங்களின் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தி வருகின்றனர்.
தை கிருத்திகையில் விரதம் இருந்து வள்ளி மணாளனை வழிபட்டால் குறைகள் அனைத்தும் தீரும். நினைத்தது நடக்கும். தை கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும். உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள். பிள்ளைச் செல்வம் வேண்டுபவர்கள், தை கிருத்திகையில் அழகன் முருகனை மனமார நினைத்து ஓராண்டு விரதம் இருந்து வழிபட்டால், அவர்களின் வேண்டுதல் ஏற்கப்பட்டு, கட்டாயம் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.

பிரச்சினைகள் தீரும்

பிரச்சினைகள் தீரும்

ஜோதிட சாஸ்திரத்தின்படி செவ்வாய்க்கு அதிபதி முருகப்பெருமான் என்பதால் தை கிருத்திகை நாளில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்குச் சென்று தரிசித்து செவ்வாய் பகவானின் அருளைப் பெறலாம். செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம், மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்னைகள், சகோதரர்களால் சங்கடங்கள் குரு திசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தைக் கிருத்திகை தினத்தில் முருகனை நினைத்து விரதம் இருந்தால் கவலைகளும் பிரச்சினைகள் நீங்குவதோடு வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

English summary
Thai Krithigai festival falls in the month of January and February. February 02, 2020 Sunday to February 03,2020 Lord Muruga was born under the Karthigai Nakshatra
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X