For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தைப்பூச திருநாள் வரலாறு - தீயவைகளை அழிக்கும் முருகனின் ஞானவேல்

தேவர்களின் படைத் தளபதியாக பொறுப்பேற்று, தேவர்களை சம்ஹாரம் செய்ய முருகப் பெருமான் பயன்படுத்திய ஞானவேலை தைப்பூச திருநாளில் வணங்கி வழிபட்டால், மாந்திரீகம், ஏவல், பில்லி, சூனியம் என எந்த கெட்ட சக்தியும் ந

Google Oneindia Tamil News

மதுரை: முருகன் ஆண்டிக்கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் போது அன்னை பார்வதி தேவி, அசுரர்களை அழிப்பதற்காக, ஞானவேல் வழங்கிய திருநாள் தான் தைப்பூச திருநாள் ஆகும். இந்த ஆண்டு வரும் பிப்ரவரி 8ஆம் தேதியன்று தைப்பூச திருவிழா கொண்டாடப்படுகிறது. தேவர்களின் படைத் தளபதியாக பொறுப்பேற்று, தேவர்களை சம்ஹாரம் செய்ய முருகப் பெருமான் பயன்படுத்திய ஞானவேலை தைப்பூச திருநாளில் வணங்கி வழிபட்டால், மாந்திரீகம், ஏவல், பில்லி, சூனியம் என எந்த கெட்ட சக்தியும் நம்மை அனுகாது என்பது நிச்சயம்.

நாம் அனைவருமே இறைவனால் படைக்கப்பட்ட பொம்மைகள். அவன் ஆட்டுவிக்கும் தன்மைக்கு ஏற்பதான் நாம் ஆடவேண்டுமே தவிர, நம் இஷ்டத்திற்கு ஆட ஆரம்பித்ததால், அவ்வளவு தான், இறைவன் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டார். இது மனிதர்களுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் மேலான தேவர்களுக்கும், முனிவர்கள், ரிஷிகளுக்குமே மிகச் சரியாகப் பொருந்தும்.

Thai Poosam 2020: History of Thai Pusam

எப்பொழுதெல்லாம், கடவுள் இருப்பதையே மறந்து தேவலோக வாசிகளான தேவர்கள் தாங்கள் தான் பெரியவர்கள், தங்களை மிஞ்சிய சக்தி ஏதும் கிடையாது, என்ற நினைப்பில் அளவுக்கு அதிகமாக மமதையில் திளைக்கிறார்களோ, அப்போதெல்லாம், அவர்களுக்கு புத்திமதி சொல்வதற்காக, மறுபக்கம் ஏதாவது ஒரு திருவிளையாடலை நடத்தி அவர்களை நல்வழிப்படுத்துவதுண்டு.

தேவர்களின் குணநலன்களை நன்கு அறிந்த அசுரர்களும் அவ்வப்போது, தேவர்களுடன் போரிட்டு, அவர்களை இந்திரலோகத்தில் இருந்து துரத்தி விட்டு, அதை தாங்கள் கைப்பற்றி ஆட்சி செய்வதுண்டு. தேவர்களோ, அசுரர்களை எதிர்க்க துணிவில்லாமல் ஓடி ஒளிந்து கொள்வார்கள். கூடவே தங்களை காப்பாற்ற வேண்டும் என்று முதலில் பிரம்ம தேவரை அனுகி கதறுவார்கள். பிரம்மாவும், என்னால் எதுவும் செய்ய முடியாது, நீங்கள் ஸ்ரீமன் நாராயணனை அனுகி ஐடியா கேளுங்கள் என்று ஒதுங்கிக் கொள்வார்.

Thai Poosam 2020: History of Thai Pusam

1010 ஆண்டுகளை கடந்து கம்பீரமாக நிற்கும் ராஜராஜேஸ்வரம்... படையெடுத்து வந்தவர்கள் பட்டபாடு1010 ஆண்டுகளை கடந்து கம்பீரமாக நிற்கும் ராஜராஜேஸ்வரம்... படையெடுத்து வந்தவர்கள் பட்டபாடு

தேவர்களும் வேறு வழியில்லாமல், ஸ்ரீமன் நாராயணனை நாடி, அசுரர்களின் கொடுமையிலிருந்து தங்களை காக்க வேண்டும் என்று மன்றாடுவார்கள். ஆனால், ஸ்ரீமன் நாராயணனோ, என்னால் எதுவும் செய்ய முடியாது, நீங்கள் எல்லாம் எல்ல ஈசனையே நாடி அவரை சரணாகதி அடையுங்கள். அவர் உங்களுக்கு நல்வழி காட்டுவார் என்று அவரும் ஒதுங்கிக் கொள்வார். இறுதியில் எம்பெருமான் ஈசனை நாடி தங்களை காத்தருள வேண்டும் என்று சரணடைவார்கள். வேறு வழியில்லாமல், ஈசனும் தேவர்களை காத்தருள, திருவிளையாடலை நடத்தி சுபம் போட்டு முடித்து வைப்பார். இது மெகா சீரியல் போல் தொடர்ந்து நடக்கும் விளையாட்டாகும்.

தைப்பூச திருவிழா உருவான விதமும் அப்படித்தான். என்னதான் தேவர்களும் அசுரர்களும் சகோதரர்களாக இருந்தாலும், அசுரர்கள் அதிக பலம் பெற்றவர்களாக இருந்ததால், அவர்களை எதிர்த்து தேவர்கள் போரிட முடியவில்லை. என்ன தான் போரிட்டு அசுரர்களை அழித்துக்கொண்டே வந்தாலும், திரும்பத் திரும்ப வந்துகொண்ட இருந்தனர். இதனால் தேவர்கள் களைத்துபோய்விட்டனர்.

Thai Poosam 2020: History of Thai Pusam

தங்களால் தேவர்களை எதிர்த்து வெல்ல முடியாது என்று மூளைக்கு உறைத்த உடனே, தங்களை வழிநடத்தவும், அசுரர்களுக்கு எதிரான போரில் தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல்மிக்க ஒரு தலைவனை உருவாக்கு தரவேண்டும் என்று எம்பெருமான் ஈசனிடம் முறையிட்டனர். முக்காலமும் உணர்ந்த எம்பெருமான், தேவர்களின் மனக்குறையை நிவர்த்தி செய்யவேண்டி, தன்னுடைய சக்தியில் இருந்து உருவாக்கிய அவதாரம் தான் கருணைக்கடலான கந்தவேல்.

சிவபெருமான் தன்னுடைய நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்படுத்திய ஆறு தீப்பொறிகளையும், சரவணப்பொய்கையில் விழுமாறு செய்தார். சரவணப்பொய்கையில் விழுந்த ஆறு தீப்பொறிகளும் அழகிய ஆறு குழந்தைகளாக உருமாறின. உடனே அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்தனர். கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்ததால் கந்தன், கார்த்திகேயன் என்று அழைக்கப்பட்டார்.

கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்த கார்த்திகேயனை, அன்னை பார்வதி தேவியார் சேர்த்து அனைத்து ஆறு குழந்தைகளையும் ஒன்றாக்கினார். ஆறு முகங்களையும் ஒன்றாக்கியதால் முருகன் என்றழைக்கப்படுகிறார். முருகன் ஆண்டிக்கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் போது அன்னை பார்வதி தேவி, அசுரர்களை அழிப்பதற்காக, ஞானவேல் வழங்கிய திருநாள் தான் தைப்பூச திருநாள் ஆகும். இதன் காரணமாகவே, அறுபடைவீடுகளில், மற்ற இடங்களை விட , பழனி மலையில் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

தேவர்களின் படைத் தளபதியாக பொறுப்பேற்று, தேவர்களை சம்ஹாரம் செய்ய முருகப் பெருமான் பயன்படுத்திய ஞானவேலை தைப்பூச திருநாளில் வணங்கி வழிபட்டால், மாந்திரீகம், ஏவல், பில்லி, சூனியம் என எந்த கெட்ட சக்தியும் நம்மை அனுகாது என்பது நிச்சயம். இந்த ஆண்டு வரும் பிப்ரவரி 8ஆம் தேதியன்று தைப்பூச திருவிழா கொண்டாடப்படுகிறது. அந்நாளில் முருகப்பெருமானை வழிபட்டு, அவனருள் பெறுவோம்.

வந்தவினையும், வருகின்ற வல்வினையும்
கந்தனென்று சொல்லக் கலங்கிடுமே
செந்தில்நகர் சேவகா என திருநீரு
அணிவோர்க்கு மேவ வாராதே வினை

English summary
When Lord Murugan sits on Palani Hill in Aandi Kolam, Annai Parvathi Devi offered the Gnanavel to destroy the Asuras, is the day of the Thaipusam. The Thaipusam Festival is celebrated on 8th February this year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X