For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காரிய வெற்றி தரும் தைப்பூசம் திருநாள் - விரதம் இருந்தால் என்ன பலன் தெரியுமா

தமிழ் கடவுள் முருகப்பெருமான், மனிதர்கள், தேவர்கள், கடவுள்கள் என அனைவரையும் காட்டிலும் வலிமையானவன், அனைவரையும் காட்டிலும் எளிமையானவன். அதனால் தான் சிறுவர் முதல் பெரியவர்கள் வரையில் அனைவருக்கும் மிகவும

Google Oneindia Tamil News

மதுரை: தைப்பூச திருநாள் தான் முருகப்பெருமானுக்கு நடைபெறும் திருவிழாக்களிலேயே புகழ்பெற்ற உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் முதல் வெளிநாட்டவர்கள் வரை மனம் விரும்பி கொண்டாடும் திருவிழாவாகும். தைப்பூச திருநாள் அன்று சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் தமிழர்களோடு வெளிநாட்டவர்களும் அலகு குத்திக்கொண்டும் காவடி எடுத்துக்கொண்டும் வந்து முருகனை தரிசிப்பதுண்டு. தைப்பூச திருநாளில் பழனி முருகனுக்கு காவடி எடுத்தால் எந்த தீய சக்திகளும், மாந்த்ரீகமும், பில்லி, சூனியம், ஏவல் என எதுவும் நம்மை நெருங்காது என்பதுடன், அவை அனைத்துமே அஞ்சி நடுங்கி, நமக்கு அடிபணிந்து நமக்கு ஏவல் செய்யும் செய்யும் என்பது ஐதீகம்.

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பது இந்துக்கள் அனைவருக்கும் தெரியும். தன்னை சரணடைந்து கரம் கூப்பி வணங்கினால், அடுத்த கனமே யாமிருக்க பயமேன் என்று நேரில் காட்சி கொடுப்பான் கலியுக வரதனான கந்தன். முருகனை வணங்கினால் அனைத்து கடவுள்களையும் வணங்கியதாக அர்த்தமாகும்.

யாவர்க்கும் வலியன் நீ, யாவர்க்கும் எளியன் நீ, யாவர்க்கும் ஆனோய் நீ என்பதற்கு ஏற்ப, முருகப்பெருமான், மனிதர்கள், தேவர்கள், கடவுள்கள் என அனைவரையும் காட்டிலும் வலிமையானவன், அனைவரையும் காட்டிலும் எளிமையானவன். அதனால் தான் சிறுவர் முதல் பெரியவர்கள் வரையில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான கடவுளாக முருகப்பெருமான் உள்ளார். இந்த தத்துவத்தை உணர்த்தவே, அறுபடை வீடுகளிலும் ஆறு கோலத்தில் காட்சி கொடுத்து அருள்பாலிக்கிறார்.

பிப் 1ல் ரத சப்தமி 2020 : திருமலையில் ஒரே நாளில் ஏழு வாகனங்களில் உலாவரும் மலையப்பசுவாமிபிப் 1ல் ரத சப்தமி 2020 : திருமலையில் ஒரே நாளில் ஏழு வாகனங்களில் உலாவரும் மலையப்பசுவாமி

முருகனுக்கு பிடித்த திருநாள்

முருகனுக்கு பிடித்த திருநாள்

தமிழ்க்கடவுளான முருகனுக்கு மிகவும் உகந்த திருவிழாக்களாக, வைகாசி விசாகம், ஐப்பசி சஷ்டிவிரதம், கார்த்திகை திருநாள், தைப்பூச திருநாள் மற்றும் பங்குனி உத்திர திருநாள் ஆகியவை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தைப்பூச திருநாள் உலகம் முழுவதுமே வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

முருகன் சக்திவேல் வாங்கிய நாள்

முருகன் சக்திவேல் வாங்கிய நாள்

இதில் வைகாசி விசாக திருநாள் என்பது, முருகன் சிவபெருமான் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளாக அவதரித்த நாள் ஆகும். ஐப்பசி மாதத்தில் வரும் சஷ்டி திருநாள் அசுரரகளை வேல் கொண்டு அழித்த திருநாள் ஆகும். திருக்கார்த்திகை நாள் என்பது கார்த்திகைப் பெண்களிடம் அறுவராக வளர்ந்து வந்த முருகப்பெருமானை அன்னை பார்வதி தேவி அனைத்து ஒரு முகக் கடவுளாக ஆக்கிய திருநாள். தைப்பூச நாள் என்பது, அன்னை சக்தியிடம் முருகன் சக்திவேல் வாங்கிய திருநாளாகும். பங்குனி உத்திர நாள் என்பது வள்ளிக்குறத்தியை கடிமணம் புரிந்த திருநாள் ஆகும்.

உலகத்தமிழர்களின் திருநாள்

உலகத்தமிழர்களின் திருநாள்

மற்ற திருவிழாக்களை விட தைப்பூச திருநாள் தான் முருகப்பெருமானுக்கு நடைபெறும் திருவிழாக்களிலேயே புகழ்பெற்ற உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் முதல் வெளிநாட்டவர்கள் வரை மனம் விரும்பி கொண்டாடும் திருவிழாவாகும். தைப்பூச திருநாள் அன்று சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் தமிழர்களோடு வெளிநாட்டவர்களும் அலகு குத்திக்கொண்டும் காவடி எடுத்துக்கொண்டும் வந்து முருகனை தரிசிப்பதுண்டு.

பாதயாத்திரை வரும் பக்தர்கள்

பாதயாத்திரை வரும் பக்தர்கள்

தமிழ்நாட்டிலும், அறுபடை வீடுகளை நோக்கி பக்தர்கள் அலகு குத்திக்கொண்டும், காவடி எடுத்துக்கொண்டும் தங்கள் கிராமங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக பாதயாத்திரையாக வந்து முருகனை தரிசித்து செல்வார்கள். அதிலும் அறுபடை வீடுகளில் மூன்றாவது படைவீடாக விளங்கும் பழனி முருகனை தரிசிக்க தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருவதுண்டு. பக்தர்களின் பசியாற வழிநெடுகிலும் தன்னார்வத் தொண்டர்கள் அன்னதானம் வழங்கி வருவார்கள்.

காரிய ஜெயமாகும் தைப்பூச திருநாள்

காரிய ஜெயமாகும் தைப்பூச திருநாள்

பொதுவாக எந்த ஒரு நல்ல காரியத்தையும் நல்ல நாளில் செய்தால் அந்த காரியம் வெற்றி பெரும் என்பது உறுதி. அந்த நல்ல நாள் தைப்பூச திருநாளாகும். அன்றைக்கு முருகப்பெருமானை மனதில் நினைத்து மனமுருக வேண்டிக்கொண்டு தொடங்கினால் காரிய ஜெயமாகும் என்பது ஐதீகம். அதனால் தான் தை பிறந்தால் வழிபிறக்கும் என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். திருமணத் தடை உள்ளவர்கள், வரன் தேடுபவர்கள் தைப்பூச நன்னாளில் வரன் தேடினால் கிடைக்கும். திருமணப் பேச்சை ஆரம்பித்தால் நல்லவிதமாக முடியும்.

பக்தர்களை காக்கும் முருகன்

பக்தர்களை காக்கும் முருகன்

கல்வி கற்கும் வயதுவந்த சிறு குழந்தைகளை அதுவரையிலும் பள்ளியில் சேர்க்காதவர்கள் கூட, இந்த தைப்பூச திருநாளில் தங்கள் வீட்டிலேயே கல்வி கற்றுக்கொடுக்க தொடங்குவார்கள். அப்படி செய்தால், அந்த தமிழ்க்கடவுள் முருகனைப் போலவே அறிவாற்றலில் சிறந்து விளங்கும் என்பது பெரியோர்களின் நம்பிக்கை. மற்ற கடவுள்கள் எல்லாம் பக்தர்களின் மனதில் தான் இருப்பார்கள். ஆனால்,

தமிழ்க்கடவுளான முருகனோ தன்னுடைய பக்தர்களை தன் நெஞ்சில் வைத்திருக்கிறார். அவர் என்னதான் பக்தர்களை சோதித்தாலும், ஆபத்து நேரும்போது, முருகா என்று அவனை நினைத்து கூப்பிட்டாலே, தாமதிக்காமல் மயில் மீதேறி வந்து காப்பாற்றுவார்.

பழனி முருகனுக்கு காவடி

பழனி முருகனுக்கு காவடி

தைப்பூச திருநாளில் பழனி முருகனுக்கு காவடி எடுத்தால் எந்த தீய சக்திகளும், மாந்த்ரீகமும், பில்லி, சூனியம், ஏவல் என எதுவும் நம்மை நெருங்காது என்பதுடன், அவை அனைத்துமே அஞ்சி நடுங்கி, நமக்கு அடிபணிந்து நமக்கு ஏவல் செய்யும் செய்யும் என்பது ஐதீகம். அதனால் தான் சுக்குக்கு மிஞ்சுன மருந்தும் இல்லை, அந்த சுப்ரமணியனுக்கு மிஞ்சுன கடவுளும் இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள். தைப்பூச திருநாளில் தான் உலகம் தோன்றியதாக ஐதீகம். எம்பெருமான் ஈசன் அன்னை பார்வதியுடன் இணைந்து தில்லையம்பலம் என்னும் சிதம்பரத்தில் ஆனந்த திருநடனம் புரிந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்த நாள் இந்த நாள் தான்.

சிவபெருமான் காட்சியளித்த தைப்பூசம்

சிவபெருமான் காட்சியளித்த தைப்பூசம்

இரணியவர்மன் என்ற அரசன், தில்லையம்பலத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து சிவபெருமானை நேரில் தரிசித்ததும் தைப்பூச திருநாள் தான். இதனால் தான், தைப்பூசத் திருநாளன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடு மற்றும் அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. மேலும், தேவர்களின் குருவான பிரகஸ்பதி எனப்படும் குருபகவானின் நட்சத்திரம் பூசம் என்பதால், தைப்பூச தினத்தில் குரு வழிபாடு செய்து சிறப்பான பலனை அளிக்கும்.

English summary
Thaipoosam Day is a famous festival celebrated for Lord Murugan from Tamilians to foreigners all over the world.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X