For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தைபூசம் நாளில் சந்திரகிரகணம்... பழனியில் பகலில் தோரோட்டம் - கோவில்கள் பூஜை நேரம் மாற்றம்

சந்திரகிரணகத்தை முன்னிட்டு பழனியில் 31ஆம் தேதி தைப்பூச தினத்தன்று மாலை நேரத்தில் நடைபெறும் தேரோட்டம் பகல் 11.00 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

By Jeyarajaseker A
Google Oneindia Tamil News

Recommended Video

    பழனியில் பகலில் தோரோட்டம்- வீடியோ

    திண்டுக்கல்: சந்திரகிரகணம் ஜனவரி மாதம் 31ஆம் தேதி மாலை 6.22 மணி முதல் இரவு 8.41 மணி வரை நிகழவிருக்கிறது. இதனால் பழனி கோயிலில் தைபூச நாளில் நடைபெறும் தேரோட்டம் மாலையில் நடைபெறுவதற்கு பதிலாக பகலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக கூறப்படுகிறது. உலக சிருஷ்டியில் தண்ணீரே முதலில் படைக்கப் பெற்றது. அதிலிருந்தே பிரம்மாண்டம் உண்டானது எனும் ஐதீகத்தை உணர்த்துவதற்காகவே, கோயில்களில் தெப்ப உற்சவம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    தேவ குருவாகிய பிரகஸ்பதி பகவானுக்கு உகந்த தினம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.

    தைபூச திருவிழா

    தைபூச திருவிழா

    பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா வரும் 2018ம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 3ஆம் தேதி வரை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் ஜனவரி 30ஆம் தேதியும் தேரோட்டம் ஜனவரி 31ஆம் தேதி தைப்பூச தினத்தன்று நடக்கிறது. அன்றைய தினம் சந்திர கிரகணம் என்பதால் பூஜைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சந்திரகிரகணத்தில் தைபூசம்

    சந்திரகிரகணத்தில் தைபூசம்

    பழனி கோயிலில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் சாயரட்சை பூஜை, மதியம் 2.45 முதல் 3.45 மணி வரை நடைபெறும். அதன் பிறகு கோயில் நடை அடைக்கப்படும். தைப்பூசத்தில் மாலை நேரத்தில் நடைபெறும் தேரோட்டம், சந்திரகிரகணத்தால் பகல் 11.00 மணிக்கு நடக்கவுள்ளது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பும் இதேபோல தைப்பூசத்தில் சந்திரகிரகணம் வந்ததாகவும் அதனால் பகலில் தைப்பூசத் தேரோட்டம் நடந்ததாகவும் கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர்.

    தைபூச சாளில் கிரகணம்

    தைபூச சாளில் கிரகணம்

    ஜனவரி 31ஆம் தேதி தைப்பூசத் திரு விழா சிங்கப்பூர், மலேசியாவில் கொண்டாடப் படும். அந்நாளில் சந்திர கிர கணம் மாலை 6.51 மணிக்கு தொடங்கி இரவு 12.08 மணி வரை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால் ஆலயங்கள் முன்கூட்டியே மூடப்படும். அதனால், தைப்பூசக் கொண்டாட்டம் வழக்கத்தைவிட ஐந்தரை மணி நேரம் முன்னதாகவே முடிவுறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கிரகணத்திற்கு பரிகாரங்கள்

    கிரகணத்திற்கு பரிகாரங்கள்

    காவடிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட மாட்டாது என்று இரு ஆலயங்களும் கூட்டாகத் தெரிவித்தன. தைப்பூசத்தன்று ஆயிரக் கணக்கான பக்தர்கள் சிராங்கூன் சாலையில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலிலிருந்து 3.1 கிலோ மீட்டர் தூரம் கால்நடை யாக தேங் ரோடு அருள்மிகு தண்டாயுதபாணி கோயிலை அடைந்து தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றுவர். கிரகண நேரத்தில் கோவில் நடை அடைக்கப்பட்டு பின்னர் கிரகணம் முடிந்து கோவில் நடை திறக்கப்பட்டு பரிகார பூஜைகள் செய்யப்படும்.

    English summary
    After about 60 years, the annual car festival of Sri Dhandayuthapani Swamy Temple will take place in the forenoon instead of evening on January 31, 2018 in view of lunar eclipse. The Thai Poosam festival, which draws a large number of devotees from many parts of the world, including Singapore, Malaysia.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X