For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தை கடைசி திங்கட்கிழமை : இழந்த செல்வத்தை மீட்டுத்தரும் சிவ தரிசனம்

ஏழரை சனி அஷ்டமசனி,ஜென்ம குரு ,ராகு,கேது தீவினைகள் என எல்லாவித கிரக தோஷங்களையும் விலக்கும் ஒரே தினம் தை மாதம் கடைசி திங்கட்கிழமை. அனைத்து ராசியினரும் இன்றைய தினம் சிவனை சந்தனத்தால் அபிஷேகம் செய்தால் க

Google Oneindia Tamil News

சென்னை: திங்கட்கிழமை சிவனுக்கு உகந்த நாள். கார்த்திகை மாத சோமவார விரதம் இருந்து சிவ ஆலயம் சென்று வணங்கினால் திருமணமான தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். அதே போல தை கடைசி சோமவார நாளான இன்று சிவ ஆலயம் சென்று வணங்கினால் சனிபகவானால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். இன்றைய தினம் அனைத்து ராசியினரும் இன்றைய தினம் சிவனை சந்தனத்தால் அபிஷேகம் செய்தால் கடன்,நோய், விலகும் சொல் வாக்கு செல்வாக்கு திரும்ப கிடைக்கும். மனம் அமைதி பெறும்.

சனிப்பெயர்ச்சி ,குரு பெயர்ச்சி , ராகு கேது பெயர்ச்சி கேள்விபட்டுள்ளோம். அதே போல சிவபெருமான் தனது கோபத்தை குறைத்து சாந்த ரூபாமாக மாறியிருக்கிறார். அந்த நாள் தை மாதம் கடைசி திங்கட்கிழமையாகும்.

Thai Somavara Viratham benefits and importance

சிவன் ஆலகால விஷத்தை உண்டு ருத்ர தாண்டவம் ஆடியபோது பிரளயம் உண்டாகியது. ருத்ர மூர்த்தியாக சிவன் கோபம் கொண்டு ஆடியதை கண்ட பார்வதி மனமுருகி ஸ்வாமியை வேண்டி கோபத்தை குறைத்து சாந்த ஸ்வரூபனாக பகவான் சகல உயிர்களையும் காக்க வேண்டும் என வேண்டினாள்

பகவான் அம்பாளின் வேண்டுதலை ஏற்று கோபமார ருத்ர ரூபத்திலிருந்து சாத்வீகமான சதாசிவ ரூபத்திற்கு மாறிய தினமே தை கடைசி திங்கட்கிழமையாகும். தை மாதம் கடைசி திங்கட்கிழமை சிவனை வணங்கினால் பகவானின் அருள் என்பது மிகப்பெரிய தடைகளை விலக்கும்

இன்றைக்கு எத்தனையோ பேர் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். கடன் பிரச்சினை, நோய்கள், அக்கம் பக்கத்தினருடன் சண்டை என பலரும் பலவிதமான பிரச்சினைகளில் சிக்கி கோபத்திற்கு ஆளாகின்றனர். இந்த கோபம் தீரவும் அன்பு கருணை சாந்தம் ஏற்படவும் தை மாத கடைசி திங்கட்கிழமையன்று சிவ ஆலயம் சென்று வணங்கலாம்.

Thai Somavara Viratham benefits and importance

ஏழரை சனி அஷ்டமசனி,ஜென்ம குரு ,ராகு,கேது தீவினைகள் என எல்லாவித கிரக தோஷங்களையும் விலக்கும் ஒரே தினம் தை மாதம் கடைசி திங்கட்கிழமை. அனைத்து ராசியினரும் இன்றைய தினம் சிவனை சந்தனத்தால் அபிஷேகம் செய்தால் கடன்,நோய், விலகும் சொல் வாக்கு செல்வாக்கு திரும்ப கிடைக்கும். மனம் அமைதி பெறும். கோபம் குறையும் , வீட்டில் அமைதி தங்கும்

Thai Somavara Viratham benefits and importance

பிப்ரவரி மாதம் 10 தேதி இன்றைய தினம் தை கடைசி திங்கட்கிழமை இன்றைய தினம் அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று சிவனுக்கு சந்தன அபிஷேகம் செய்யுங்கள்.மயிலாடுதுறை அருகில் உள்ள முட்டம் குளத்தங்கரை கிராமத்தில் உள்ள ஸ்ரீமஹாபலீஸ்வரர் சிவன் கோவில்
பல ஆயிரம் வருட பழமையான சிதிலமடைந்த சிவஸ்தலம். மஹாபலிச்சக்கரவர்த்தி இழந்த செல்வம் புகழ் சொல்வாக்கு என அனைத்தையும் மீட்டெடுத்த தலம். வாய்ப்பு கிடைக்கும் போது இந்த சிவ ஆலயத்திற்கு சென்று வழிபட்டு வாருங்கள் நன்மைகள் நடைபெறும்.

English summary
Young unmarried girls observe this vrata to get good husbands. Married couples also observe the vrata and pray the divine couple of Shiva and Parvati and ask for peaceful family life.somavara viratham importance, somavara viratham benefits, சோமவார விரத மகிமை, சோமவார விரத நன்மைகள்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X