For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தைப்பூசம் 2021: வடலூர் சத்திய ஞானசபையில் ஏழுதிரைகள் நீக்கி ஜோதி தரிசனம் - பக்தர்கள் பரவசம்

தைப்பூச திருவிழாவையொட்டி வடலூர் சத்திய ஞானசபையில் இன்று காலை 6 மணிக்கு ஜோதி தரிசனம் நடந்தது. அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Google Oneindia Tamil News

கடலூர்: வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய வள்ளலார் தோற்றுவித்த வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்தியஞான சபையில் தைப்பூசத்தை முன்னிட்டு இன்று காலை 6 மணிக்கு ஜோதி தரிசனம் நடைபெற்றது. 'அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்சோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி' மந்திரம் எங்கும் எதிரொலிக்க பக்தர்கள் பரவசத்துடன் ஜோதி ரூபமாக ஒளிர்ந்த இறைவனை தரிசனம் செய்தனர். இன்று காலை10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் காலை 5.30 மணி என்று 6 காலம் 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற இருக்கிறது.

Recommended Video

    வடலூர்: தைப்பூச திருவிழா... சத்திய ஞானசபையில் ஜோதி தரிசனம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!

    தைப்பூசத்திற்கு பல சிறப்புகள் இருந்தாலும், வடலூரில் நடைபெறும் தைப்பூச ஜோதி தரிசனம் விழா முதன்மையான ஒன்றாகும். வடலூரில் தைப்பூசம் வெகு சிறப்பாக ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.

    Thaipusam 2021: Devotees witness Jyoti Darshan at Vadalur Satya Gnanasabai

    கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மருதூரில் பிறந்தவர் ராமலிங்க அடிகளார். வள்ளலார் என போற்றப்பட்ட அவர், திருவருட்பா எழுதினார். இறைவன் ஒளி வடிவானவன் என்பதை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் வடலூரில் சத்திய ஞானசபையை வள்ளலார் நிறுவினார்.

    ஏழை, எளிய மக்களின் பசியை போக்க சத்தியஞான சபை அருகிலேயே தருமச்சாலையை நிறுவினார். அன்று முதல் இன்று வரை அந்த தருமச்சாலையில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பின்னர் வள்ளலார் வடலூர் அருகே உள்ள மேட்டுக்குப்பத்தில் சித்தி பெற்றார்.

    வள்ளலார் முக்தி அடைந்த பூசநட்சத்திரத்தன்று மாதந்தோறும் சத்திய ஞானசபையில் திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்று வருகிறது. தை மாதத்தில் வரும் பூசநட்சத்திரத்தன்று தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 150வது தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 5 மணிக்கு அகவல் பாராயணம் பாடப்பட்டு, 7.30 மணிக்கு தருமச்சாலை சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. இதை தொடர்ந்து வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபையில் காலை 10 மணிக்கு கொடியேற்றப்பட்டது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூச ஜோதி தரிசனம் சத்திய ஞானசபையில் இன்று காலை 6 மணிக்கு ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் ஞானசபையில் நிலை கண்ணாடிக்கு முன்பு கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன் நிறம், வெள்ளை, கலப்பு வண்ண திரை என்று 7 வண்ண திரைகள் உள்ளன. அந்த திரைகள் ஒவ்வொன்றாக விலக்கி நிலை கண்ணாடிக்குள் இருக்கும் ஜோதியை காண்பதே ஜோதி தரிசனமாகும்.

    அதன்படி காலை 6 மணிக்கு நடந்த முதல் ஜோதி தரிசனத்தை காண, சத்திய ஞானசபையின் முன்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். பின்னர் நிலை கண்ணாடி முன் காணப்பட்ட 7 திரைகளும் ஒவ்வொன்றாக விலக்கப்பட்டது. அப்போது நிலை கண்ணாடிக்கு பின் வள்ளலார் கரத்தால் ஏற்றி வைத்த தீபம் பிரகாசமாக காட்சி அளித்தது.

    இதை பார்த்த அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் 'அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்சோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி' என்ற மகா மந்திரத்தை உச்சரித்து ஜோதியை தரிசனம் செய்தனர். தொடர்ந்து காலை 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணி மற்றும் நாளை காலை 5.30 மணிக்கு ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.

    கொரோனா ஊரடங்கு விதிமுறையின் காரணமாக அன்னாதானம் வழங்கவும் கடைகள் மற்றும் ராட்டினம் அமைக்கவும் என எதற்கும் அனுமதி இல்லை. மேலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்களின் வருகை என்பது குறைவாகவே காணப்பட்டது.

    ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மனிதத்தன்மை என்ற ஒப்பற்ற ஒளி இருக்கிறது. ஆனால், ஆசை, கோபம், தன்னலம். பொய்மை போன்ற பொல்லாத குணங்கள் பல்வேறு திரைகளாகப் படர்ந்து, அந்த மனிதத் தன்மையை அமுக்கி மறைத்துவிடுகிறது. இந்தப் பொல்லாத குணங்கள் விலகி, நல்ல நெறியை அடையும்போது மனிதன் தனக்குள் இருக்கும் தெய்வத்தைக் காண்கிறான். ஜோதி தரிசனகாட்சி என்பதும் இது போலத் தான். ஏழு திரைகளை நீக்கிய பிறகுதான் தீபத்தின் ஜோதி ஒளியைக் காண இயலும்.

    English summary
    Jyothi Dharisanam was held at Vadalur Samarasa Sanmarkka Sathyanana Sabha at 6 am today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X