For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தைப்பூசம் 2021: பழனியில் இன்று திருக்கல்யாணம் - முருகனின் அறுபடை வீடுகளிலும் கோலாகலம்

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, திருத்தணி, பழமுதிர்ச்சோலை, சுவாமிமலை முருகன் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக குவிந்துள்ளனர்.

Google Oneindia Tamil News

பழனி: தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமான் ஆலயங்களிலும் சிவபெருமான் ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, திருத்தணி, பழமுதிர்ச்சோலை, சுவாமிமலை கோவில்களில் மட்டுமல்லாது தமிழகம் முழுவதிலும் உள்ள முருகன் கோவில்களிலும் சிவ ஆலயங்களிலும் திருவிழாக்கள் களைகட்டியுள்ளன. பழனியில் 306 நாட்களுக்குப் பிறகு தங்கத்தேரோட்டம் நடைபெற்றது. இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

ஆறுமுகக்கடவுளான முருகப் பெருமானுக்கு தமிழ் மாதப்பிறப்பு, வைகாசி விசாகம், ஆடிக் கிருத்திகை, சூரசம்ஹாரம், தைப்பூசம், மாசி மகம் மற்றும் பங்குனி உத்திரம் என மாதந்தோறும் திருவிழாக்கள் நடைபெறுவது வாடிக்கை. அதிலும் அறுபடை வீடுகளில் ஒவ்வொரு படைவீடுகளிலும் ஒவ்வொரு திருவிழா விமரிசையாக நடைபெறும். குறிப்பாக, முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகத் திருவிழா, இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் சூரசம்ஹாரத் திருவிழா, மூன்றாம் படைவீடான பழனியில் தைப்பூச திருவிழா மற்றும் பங்குனி உத்திர திருவிழா என ஒவ்வொரு படைவீடும் ஒவ்வொரு விதமான திருவிழாவுக்கு பிரசித்து பெற்று விளங்குகிறது.

தைப்பூசம் திருவிழா நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு மாநிலம் முழுவதிலும் உள்ள முருகன் ஆலயங்களில் மட்டுமல்லாது சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட ஆலயங்களிலும் திருவிழாக்கள் களைகட்டியுள்ளன. அறுபடைவீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில், தைப்பூச விழாவைக் காண பாதயாத்திரையாக வரும் பக்தர்கள், கடலில் நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் வருகையால் திருச்செந்தூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

தைப்பூசம் கோலாகலம்

தைப்பூசம் கோலாகலம்

தமிழர் திருவிழாவான தைப்பூசத் திருவிழா அறுபடைவீடுகளிலும் ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் அறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும் கடந்த வாரம் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தைப்பூச திருவிழாவை நாளை நடைபெறுவதை முன்னிட்டு பழநி, மற்றும் திருச்செந்தூருக்கு முருக பக்தர்கள் மாலையணிந்து விரதமிருந்து பாதயாத்திரையாக சென்று கொண்டுள்ளனர்.

தங்க ரத புறப்பாடு

தங்க ரத புறப்பாடு

மூன்றாம் படைவீடான பழனியில் நாளை தேரோட்டம் நடைபெறுவதைக் காண்பதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பழநியை நோக்கி பாதயாத்திரை செல்கின்றனர். கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தங்க ரத புறப்பாடு 306 நாட்களுக்குப் பிறகு நேற்று நடைபெற்றது.

தைப்பூச தேரோட்டம்

தைப்பூச தேரோட்டம்

இன்றைய தினம் வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து வெள்ளித் தேரோட்டம் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் நாளை நடைபெறுகிறது. பழனி முருகனைக் காணவும் தைப்பூச தேரோட்டத்தைக் காண ஏராளமான பக்தர்கள் பாதையாத்திரை வந்து கொண்டிருக்கின்றனர்.

காவடி சுமந்த பக்தர்கள்

காவடி சுமந்த பக்தர்கள்

முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூருக்கு விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த முருக பக்தர்கள் அனைவரும் பாதயாத்திரையாக சென்று கொண்டுள்ளனர். தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற நீளமான அலகுகள் குத்திக்கொண்டும், காவடி எடுத்துக்கொண்டும் பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூரை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

முருகனை காண வரும் பக்தர்கள்

முருகனை காண வரும் பக்தர்கள்

திருத்தணி முருகன் கோவிலில் இன்று தைப்பூச திருவிழாவையொட்டி, மலைக்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால் பல மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்துச் சென்றனர். இதேபோல திருப்பரங்குன்றம், சுவாமிமலை,பழமுதிர்சோலையிலும் பக்தர்கள் அலைகடலென திரண்டுள்ளனர். தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நாளைய தினம் அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முருகப்பெருமான் ஆலயங்களில் சாமி தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Thaipusam festival tomorrow celebration in all murugan temple. Special worships are held at the temples of Lord Murugan and Lord Shiva on the eve of the Thaipusam festival. Festivals are held not only at the sacrificial houses of Lord Murugan at Thiruparankundram, Thiruchendur, Palani, Thiruthani, Palamudirsholai and Swamimalai temples but also at Murugan temples and Shiva temples across Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X