For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தைப்பூசம் திருவிழா: முருகப்பெருமான் ஆலயங்களில் கோலாகல கொடியேற்றம் - பக்தர்கள் தரிசனம்

தமிழகம் முழுவதும் முருகப்பெருமான் ஆலயங்களில் தைப்பூசம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. தினசரியும் அலங்கார ரூபமாக வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளும் முருகப்பெருமானை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Google Oneindia Tamil News

மதுரை: மதுரை அருகே அழகர்மலையில் உள்ள சோலைமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி கொடியேற்றத்துடன் தொடங்யது இதில் கோவில் நிர்வாக அதிகாரி அனிதா உள்பட பலர் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் உள்ள முருகப்பெருமான் ஆலயங்களில் தைப்பூச திருவிழா கொடியேற்றதுடன் தொடங்கியுள்ளது.

மதுரை அருகே அழகர்மலைமேல் உள்ள 6வது படைவீடு எனும் சோலைமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி கொடியேற்றத்துடன் தொடங்யது இதில் கோவில் நிர்வாக அதிகாரி அனிதா உள்பட பலர் பங்கேற்றனர்.

Thaipusam Festival flag hoisting at Murugan temples in Tamil Nadu

மதுரை அருகே அழகர்மலை உச்சியில் முருகப்பெருமானின் 6ஆவது படைவீடான சோலைமலை முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் தைப்பூச திருவிழாவும் ஒன்றாகும்.

இந்த விழா வருகிற 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலை 10.40 மணிக்கு தங்க கொடி மரத்தில் மேள தாளம் முழங்க கொடி ஏற்றப்படும். பின்னர் உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு விசேஷ பூஜைகள், சரவிளக்கு தீபாராதனைகள் நடைபெறும். தொடர்ந்து மூலவர் சன்னதியில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவார்.

அன்று மாலையில் பூத வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். 20ஆம் தேதி காலை யாக சாலை பூஜைகள் நடைபெறும். பின்னர் உற்சவருக்கு மகா அபிஷேகமும், யாக சாலை பூஜைகளும், மாலை 6 மணிக்கு அன்ன வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும். 21ஆம் தேதி காலை வழக்கம் போல் பூஜைகளும், மாலை 6 மணிக்கு காமதேனு வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும்.

22ஆம் தேதி காலையில் வழக்கம் போல் பூஜைகளும், மாலையில் ஆட்டு கிடாய் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். 23ஆம் தேதி மாலையில் பூச்சப்பர விழா, 24ஆம் தேதி மாலையில் யானை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.

25ஆம் தேதி மாலையில் பல்லக்கு வாகனத்தில் சாமி புறப்பாடும், 26ஆம் தேதி மாலையில் குதிரை வாகனத்தில் சாமி புறப்பாடு, 27ஆம் தேதி மாலை வெள்ளி மயில் வாகனத்தில் சாமி புறப்பாடு நடைபெறுகிறது.

28ஆம் தேதி காலையில் யாகசாலை பூஜைகள், தீர்த்தவாரியும், உற்சவ மூர்த்திக்கு மகா அபிஷேகமும், பூஜைகளும் கொடி இறக்கமும் நடைபெறும். பின்னர் சாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை, இருப்பிடம் சேருவதும் நடைபெறும்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி திருமலை குமார சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் காலையில் சுவாமி வீதி உலாவும், இரவில் சப்பர உலாவும் நடைபெறும்.

விழாவின் 5ஆம் நாள் சட்டதேர் நிகழ்ச்சியும், 7ஆம் நாள் முருகர் - சண்முகர் எதிர்சேவை காட்சியும், 9ஆம் நாள் தேரோட்டமும், 10ஆம் நாள் தைப்பூச திருவிழாவும் நடைபெறுகிறது. 11ஆம் நாள் சுவாமி மலைக்கோயிலுக்கு திரும்பும் வைபவம் நடைபெறும். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து உள்ளனர்.

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே அரியநாயகிபுரத்தில் அமைந்துள்ள அரியநாயகி அம்பாள் உடனுறை கைலாசநாதர் கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். 10 நாட்கள் வரை நடைபெறும் விழா நாட்களில் தினமும் சுவாமி மற்றும் அம்பாளுக்கு காலை, மாலை மற்றும் இரவில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றது.

English summary
The flag hoisting ceremony for the Thaipusam festival at the Sholaimalai Murugan Temple in Alagharmalai near Madurai was attended by many including the temple administrator Anita. The Thai pusam festival has started with the flag hoisting at Murugapperuman temples across Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X