நோயற்ற வாழ்வு தரும் தைப்பூச வழிபாடு - காவிரியில் நீராடினால் பாவங்கள் தொலையும்
மதுரை: தைப்பூசம் நாளன்று விளைபொருட்களை முருகப் பெருமானுக்கு படைத்து வழிபடும் பழக்கம் பழங்காலந்தொட்டே இருந்து வருகிறது. குறிஞ்சி நிலக்கடவுளான முருகப் பெருமானுக்கு மலையில் விளைந்த பலா, வாழை போன்றவற்றை படைத்து வழிபட்டு வந்துள்ளனர் என்று புறநானூற்று பாடல்களிலேயே குறிப்பிட்டுள்ளனர்.
தைப்பூச விரதம் இருப்பவர்களுக்கு கேட்ட வரம் எல்லாம் கிடைக்கும். ஆரோக்கியமான திடகாத்திரமான உடல் உண்டாகும். நினைத்த காரியங்கள் கைகூடும். தைப்பூசத் திருநாள் அன்று நல்ல காரியங்கள் எதுவானாலும் துவங்க சிறந்த பலனை கொடுக்கும் இந்த நாளில் குரு பகவானையும், சிவபெருமானையும், முருகப் பெருமானையும் வழிபடுவது விசேஷம். இறைவன் ஒளி வடிவில் இருக்கிறார் என்பதை உணர்த்திய ஜீவ ஜோதியில் இரண்டர கலந்த வள்ளலார் பெருமானையும் தைப்பூசத்தில் வணங்குபவர்களுக்கு ஆயுள் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

வாசங் கமழ்மா மலர்ச்சோ லையில் வண்டே
தேசம் புகுந்துஈண் டியொர்செம் மைஉடைத்தாய்ப்
பூசம் புகுந்து ஆடிப்பொலிந்து அழகாய
ஈசன் உறைகின் றஇடை மருதுஈதோ
அதாவது தைப்பூசம் நன்னாளில், காவிரியில் புனித நீராடிவிட்டு, திருவிடைமருதூரில் வீற்றிருக்கும் ஸ்ரீமகாலிங்கேஸ்வரரை வணங்கி வழிபட்டால், நம்முடைய பாவங்கள் அனைத்தும் நீங்கப் பெற்று மனம் அழகாகும் என்று, சமயக்குரவர்களில் முதலாமவரான திருஞானசம்பந்தர் தன்னுடைய தேவரப் பாடலில் அவ்வளவு சிறப்பாக பாடியுள்ளார். ஆகவே, தைப்பூசத் திருநாளன்று, காவிரியில் நீராடினால் நம்முடைய பாவங்கள் அனைத்தும் தொலையும் என்பது நம்பிக்கை.
நம்மைப் படைத்த இறைவனை எப்போது வேண்டுமானாலும் வணங்கலாம். அதே சமயம் ஒரு குறிப்பிட்ட நாளில் வணங்கினால் நம் வாழ்க்கை சிறப்பாகும் என்று புராணங்களும், சாஸ்திரங்களும் நிரூபித்திருக்கின்றன.
ஓர் ஆண்டின் பன்னிரெண்டு மாதங்களிலும் பூசம் நட்சத்திரம் வந்தாலும், தைமாதம் வரும் பூசம் நட்சத்திரமும் பௌர்ணமியும் இணைந்து வரும். அன்றைய நாளில் பூரண ஒளிவீசும் சந்திரன் மிகுந்த மனவலிமையைத் தரும். இதனால் தான் தைப்பூசம் நாளை வெகுசிறப்பு வாய்ந்ததாக புராணங்களும் ஆகமங்களும் குறிப்பிட்டுள்ளன.
மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தன்று எம்பெருமான் தனித்து நின்று நடராஜராக களிநடனம் ஆடி பக்தர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துவார். ஆனால், தைப்பூசம் நன்னாளில் அன்னை பார்வதியுடன் இணைந்து நடனமாடி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
கி.பி 6ஆம், 7ஆம் நூற்றாண்டுகளில் தைப்பூசம் என்பது சிவவழிபாடு நாளாகவே இருந்துள்ளது. தேவர்களை அடக்கி கொடுமைப்படுத்தி வந்த அசுரர்களை அழிக்க அன்னை பார்வதி, முருகப் பெருமானுக்கு வேல் தந்ததும் இந்த தைப்பூசம் அன்றுதான். மற்றொரு சிறப்பு என்னவென்றால், தைப்பூச நாளில் தான், கார்த்திகைப் பெண்களிடம் ஆறு குழந்தைகளாக வளர்ந்து வந்த கார்த்திகேயனை, அன்னை பார்வதி ஒன்றாக் முருகப்பெருமானாக்கிய நாள். அதோடு, இத்தைப்பூசத் திருநாளில் தான் முருகப் பெருமான் வள்ளியை கடிமணம் புரிந்தார். எனவே தான் முருக பக்தர்கள் அனைவருக்கும் இந்த நாள் மிகவும் சிறப்பு வாய்ந்த நன்னாளாகும்.
இந்நாளில் முருகப் பெருமானை வணங்கி வழிபட்டால் ஞானம் பெருகும். இதனால் தான் பெருவாரியான முருக பக்தர்கள் அறுபடை வீடுகளுக்கும் பாதயாத்திரையாக வந்து தைப்பூச நன்னாளில் முருகப் பெருமானை தரிசிக்கின்றனர்.
தை மாதம் என்பது அறுவடை மாதம் என்றும் சொல்வார்கள். தைப்பூசம் நாளன்று விளைபொருட்களை முருகப் பெருமானுக்கு படைத்து வழிபடும் பழக்கம் பழங்காலந்தொட்டே இருந்து வருகிறது. குறிஞ்சி நிலக்கடவுளான முருகப் பெருமானுக்கு மலையில் விளைந்த பலா, வாழை போன்றவற்றை படைத்து வழிபட்டு வந்துள்ளனர் என்று புறநானூற்று பாடல்களிலேயே குறிப்பிட்டுள்ளனர். கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் உள்ள முருகன் சந்நிதியில் வாழை, பலாவை தலையில் சுமந்துவரும் பக்தர்களை சிலையாகவே வடித்து வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஸ்ரீராமபிரானின் சகோதரனான பரதன் பூசம் நட்சத்திரத்தில் தான் பிறந்தார். அத்தனை உத்தம குணங்களுடன் பேரும் புகழும் பெற்றார். பதவி ஆசை துளியும் இல்லாமல் தன்னுடைய அண்ணன் ஸ்ரீராமபிரானின் பாதுகையை அரியணையில் வைத்துகொண்டு, அவரின் பிரதிநிதியாகவே பதினான்கு ஆண்டுகாலம் நாட்டை கவனித்து வந்தான்.
நட்சத்திர மண்டலத்தில் உள்ள 27 நட்சத்திரங்களின் வரிசையில் எட்டாவதாக வருவது பூசம் நட்சத்திரம் ஆகும். எட்டு என்பது சனிபகவானுக்கு உரிய எண். அதோடு, பூசம் நட்சத்திரத்தின் அதிபதியும் சனிபகவானே. மேலும் தைமாதம் தான் சூரியன் தெற்கு நோக்கி பயணத்தை தொடங்கும் மாதமாகும். ஆகவே, இந்த தைப்பூச நன்னாளில் சூரியனை வழிபட்டு நோயற்ற வாழ்வைப் பெறலாம் என்பது ஐதீகம்.
உங்களால் எங்களுக்கு வேலை கிடக்கலை.. ஆத்திரத்தில் வடமாநில இளைஞரை கத்தியால் வெட்டிய 4 பேர் கைது
தில்லை நடராசருக்கும் இந்தப் பூச நன்னாள் உகந்தது. இவர் பார்வதியுடன் நடத்திய ஆனந்த நடனத்தை தில்லை சிதம்பரத்தில், பதஞ்சலி முனிவர் வியாக்ர பாதர் இவர்களும் தில்லை வாழ் அந்தணர் மூவாயிரவர்களும் முப்பத்து முக்கோடி தேவர்களும் இந்த தைப்பூச நன்னாளில்தான் ஆனந்த நடனம் கண்டு களித்தனர்.