For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் யாக சாலை பூஜையுடன் தொடக்கம் - குவியும் பக்தர்கள்

தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி இன்று மாலை 6.30 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது. 13 அடி உயர பெருவுடையாருக்கு இன்று அ‌‌ஷ்டபந்தன மருந்து சாத்தும் பணி நடக்கிறது.

Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி கோவிலில் உள்ள 338 சாமிகளுக்கும் அ‌‌ஷ்டபந்தன மருந்து சாத்தும் பணி கடந்த மாதம் 2ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இந்த பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. 13 அடி உயர பெருவுடையாருக்கு இன்று அ‌‌ஷ்டபந்தன மருந்து சாத்தும் பணி நடக்கிறது. கும்பாபிஷேகத்தையொட்டி இன்று மாலை 6.30 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது.

புத்தம் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் தஞ்சை பெருவுடையார் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தயாராக உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகத்தின் பூர்வாங்க பூஜைகள் கடந்த 27ஆம் தேதி தொடங்கியது. நேற்று காலை கோபூஜை, கஜ பூஜை, அஸ்வபூஜை நடந்தது. மாலையில் அங்குரார்ப்பணம் நடந்தது.
இன்று மாலை 6.30 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது. இதற்காக யாகசாலைகள் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டுள்ளன.

யாகசாலை பூஜை தொடங்கும் நாளான இன்றில் இருந்து 5 நாட்களிலும் 10 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்காக பல சிறப்பு ஏற்பாடுகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

புனித நீர் கும்பாபிஷேகம்

புனித நீர் கும்பாபிஷேகம்

யாகசாலை பூஜைக்காக திருவையாறு காவிரி ஆற்றில் இருந்து கலசத்தில் புனிதநீர் எடுத்து வரப்பட்டு வெண்ணாற்றங்கரையில் உள்ள தஞ்சபுரீஸ்வரர் கோவிலில் வைக்கப்பட்டது. அங்கு நேற்று காலையில் புனிதநீர் வைக்கப்பட்ட கலசம் சிறப்பு பூஜை செய்ய கும்பகோணத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட யானையின் மீது வைக்கப்பட்டு ஊர்வலமாக பெரிய கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. இதையடுத்து யானை மீது வைக்கப்பட்டிருந்த புனிதநீர் கலசத்தை சிவாச்சாரியார்கள் பெருவுடையார் சன்னதிக்கு எடுத்து சென்று பூஜை செய்தனர். இதேபோல் கங்கை, யமுனா, கோதாவரி, தாமிரபரணி உள்ளிட்ட பல்வேறு புண்ணிய ஆறுகளில் இருந்தும் புனிதநீர் கொண்டு வரப்பட்டு பெரியகோவிலில் வைக்கப்பட்டுள்ளது. இந்த புனிதநீர் அனைத்தும் கலக்கப்பட்டு கலசங்களில் ஊற்றப்பட்டு யாகசாலையில் வைக்கப்படுகிறது.

புனித நீர் கலசம்

புனித நீர் கலசம்

நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு 2ஆம் கால யாகசாலை பூஜையும், மாலை 6 மணிக்கு 3ஆம் கால யாகசாலை பூஜையும், 3ஆம் தேதி காலை 9 மணிக்கு 4ஆம் கால யாகசாலை பூஜையும், மாலை 5 மணிக்கு 5ஆம் கால யாகசாலை பூஜையும், 4ஆம் தேதி காலை 8 மணிக்கு 6ஆம் கால யாகசாலை பூஜையும், மாலை 5 மணிக்கு 7ஆம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது. 5ஆம் தேதி காலை 4.30 மணிக்கு 8ஆம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. அதனைத்தொடர்ந்து காலை 7.25 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்று காலை 9.30 மணிக்கு அனைத்து விமானம் மற்றும் ராஜகோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.

300 சிவாச்சாரியர்கள்

300 சிவாச்சாரியர்கள்

காலை 10 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகி அம்மன் மற்றும் அனைத்து மூலவர்களுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. யாக பூஜைக்காக 110 குண்டங்களும், 22 வேதிகைகளும் அமைக்கப்பட்டுள்ளன. பூஜையில் 300 சிவாச்சாரியார்களும், 60 ஓதுவார்களும் பங்கேற்கின்றனர்.

சிறப்பு ரயில்கள்

சிறப்பு ரயில்கள்

வயதானவர்கள், முதியோர்களை அழைத்துச்செல்ல 30 பேட்டரி கார்களும் இயக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு 125 சக்கர நாற்காலியும் பயன்படுத்தப்படுகிறது. கும்பாபிஷேகத்தையொட்டி 225 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சிறப்பு ரயில்களும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 5ஆம் தேதி அதிகாலை 3 மணி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். 5ஆம் தேதி மட்டும் இது நடைமுறையில் இருக்கும். யாகசாலை நடைபெறும் நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் 4ஆம் தேதியில் இருந்து இது நடைமுறைப்படுத்தப்படும்.

English summary
Thanjavur big temple Kumbabishekam Yagasalai Pooja begins from Today. Yaga salai where 110 yaga kundams and 28 vedigais were planned to be set up for performing rituals relating to consecration without obtaining permission from the Centre.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X