For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தஞ்சை பெரியகோவில் அற்புத கட்டுமானம் - ஆச்சர்யமூட்டும் 80 டன் விமான ரகசியம்

தஞ்சை பெரிய கோவில் சுமார் 23 ஆண்டுகளுக்கு பின்பு கும்பாபிஷேகம் காணவிருப்பதால், தஞ்சை மாவட்டமே விழாக்கோலத்தில் மிதக்கின்றது.

Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: பெரிய கோவில் கட்டுமான அமைப்பானது, இலகு பிணைப்பு என்ற முறையில் உருவாக்கப்பட்டதாகும். அதாவது, இக்கோவிலின் கட்டுமானத்தின் போது, ஒவ்வொரு கல்லையும் பிணைக்கும் போது, ஒரு நூலளவு இடைவெளி விட்டு விட்டு பிணைத்துள்ளனர். அதாவது, இன்றைக்கும் கிராமப்புறங்களில் உள்ள வீடுகளில் பெரியவர்கள் கயிற்றுக் கட்டிலை பயன்படுத்துவதை அனைவரும் அறிவார்கள். அந்த கயிற்றுக் கட்டில் முறையைத் தான் பெரியகோவில் கட்டுமானத்திற்கும் பயன்படுத்தி உள்ளார்கள் என்பது ஆச்சரியம்.

பெரிய கோவில் என்று தஞ்சை தரணி மக்களாலும் இந்துக்களாலும் பெருமிதத்துடன் அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோவில் இன்னும் 2 நாட்களில் கும்பாபிஷேகம் காணவிருக்கிறது. கி.பி 1006ஆம் ஆண்டில் மாமன்னன் ராஜராஜசோழனின் ஆட்சியில் கட்டப்பட்டு, இன்றைக்கும் தமிழனின் கலை, அறிவியல் மற்றும் கட்டடக்கலைக்கு சான்றாக உள்ளதோடு, யுனெஸ்கோவின் பாரம்பரிய கலை மற்றும் பண்பாட்டு சின்னமாகவும் அரிய பொக்கிஷமாகவும் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

தஞ்சை பெரிய கோவில் சுமார் 23 ஆண்டுகளுக்கு பின்பு கும்பாபிஷேகம் காணவிருப்பதால், தஞ்சை மாவட்டமே விழாக்கோலத்தில் மிதக்கின்றது. கும்பாபிஷேகத்தை காண்பதற்கு வெளி மாவட்ட மக்களும், வெளி நாட்டவர்களும் வருகை தரவிருக்கிறார்கள். இக்கோவில் வெளிநாட்டவர்களை கவர்திழுப்பதற்கு முக்கிய காரணம் அதன் கட்டுமானம் தான். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் ஆராய்ச்சியாளர்களையும் இந்த அளவுக்கு கவர்ந்திழுப்பதற்கு காரணமே அதன் அற்புதமான கட்டமைப்புதான்.

எப்படித்தான் கட்டியிருப்பார்களோ

எப்படித்தான் கட்டியிருப்பார்களோ

பெரியகோவிலை ஆராய்ச்சி செய்யும் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள், இன்றைய அதி நவீன உத்திகளையும் விஞ்ஞானத்தின் துணையோடும், என்ன தான் தலைகீழாக நின்று அக்குவேறு ஆணிவேராக ஆராய்ச்சி செய்து பார்த்தாலும் அதன் கட்டுமான ரகசியம் இன்னும் பிடிபடாமல் தலையை பிய்த்துக்கொண்டுதான் உள்ளனர். இருந்தாலும் அவர்களாகவே ஒரு அனுமானத்திற்கு வந்து இப்படி கட்டியிருப்பார்கள், அல்லது அப்படி கட்டியிருப்பார்கள் என்று தீர்மானத்திற்கு வந்துவிடுகிறார்கள்.

1000 ஆண்டுகளுக்கு முன்பு கிரானைட் கற்கள்

1000 ஆண்டுகளுக்கு முன்பு கிரானைட் கற்கள்

கரிகால் சோழனால் கட்டப்பட்ட கல்லணையைப் பற்றிய முழுமையான ரகசியம் எப்படி பிடிபடவில்லையோ, அதே போல் தான் பெரிய கோவிலின் கட்டுமான ரகசியமும் இன்னமும் யாருக்கும் விளங்கவில்லை என்பது தான் உண்மை. காரணம் இக்கோவில் கட்டப்பட்ட விதமும், அதற்கு பயன்படுத்தப்பட்ட தூய்மையான கிரானைட் கற்களும் தான். கிரானைட் கற்கள் என்பது 20ஆம் நூற்றாண்டில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது என்று அனைரும் நினைத்துக்கொண்டிருக்கையில், சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பே கிரானைட் கற்கள் கொண்டு இக்கோவில் பயன்படுத்தப்பட்டுள்ளது ஆச்சரியம் தான்.

எல்லாமே 80 டன்கள்

எல்லாமே 80 டன்கள்

மற்றொரு ஆச்சர்யம், கோவிலின் கருவறை மேல் உள்ள விமானம். இதன் மொத்த எடையானது 80 டன். பிரமாந்திரக்கல் என்றழைக்கப்படும் ஸ்தூபிக் கல் முழுக்க ஒரே கல்லால் உருவாக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அது மட்டுமல்ல, இந்த விமானத்தை தாங்கும் சதுர வடிவிலான அடிக்கல்லும் கூட 80 டன் எடை கொண்டது. அதோடு, இந்த சதுர வடிவிலான கல்லின் நான்கு புறத்திலும் இரண்டு லிங்கங்கள் என 8 லிங்கங்கள் உள்ளன. ஒவ்வொரு லிங்கத்தின் எடையும் தலா 10 டன்கள் என இதன் மொத்த எடையும் 80 டன்களாகும்.

கோவிலின் அஸ்திவாரம்

கோவிலின் அஸ்திவாரம்

கருவரையின் மேலுள்ள விமானம், அதனைத் தாங்கும் சதுர வடிவிலான கற்கள், அதோடு சுற்றிலும் உள்ள 8 லிங்கங்கள் என இந்த மூன்றும் தான் ஒட்டு மொத்த கோவிலையும் தாங்கும் அஸ்திவாரமாக இருக்கின்றது என்பது தான் ஆச்சரியத்தின் உச்சமாகும். பொதுவாக அஸ்திவாரம் என்பது ஒரு கட்டிடத்தின் பாரத்தை தாங்கும் ஆதார சக்தியாகும். கட்டிடம் எந்த அளவுக்கு உயரமாக கட்டப்படுகிறதோ, அந்த அளவுக்கு அதன் அஸ்திவாரமும் ஆழமாகவும், வலுவாகவும் இருக்கவேண்டும் என்பது கட்டுமான விதியாகும். இல்லாவிட்டால் கட்டுமானம் ஆட்டம் காணும்.

அஸ்திவாரம் எத்தனை அடி ஆழம்

அஸ்திவாரம் எத்தனை அடி ஆழம்

உதாரணமாக நாம் ஒரு வீட்டையோ அலுவலகத்தையோ கட்ட வேண்டுமென்றால், அந்தந்த நிலத்தின் தன்மைக்கு ஏற்ப, குறைந்த பட்சம் 5 அடியாவது அமைக்கவேண்டும். அது போலவே, 216 அடி உயரத்துடனும், முழுக்க முழுக்க அதிக எடைகொண்ட கிரானைட் கற்களைக்கொண்டு கட்டப்பட்ட பெரிய கோவிலுக்கு எந்த அளவுக்கு அஸ்திவாரம் அமைத்திருக்க வேண்டும் என கற்பனை செய்து பாருங்கள். இன்றைய கட்டுமான வல்லுநர்களை கேட்டால், உடனடியாக கையில் மொபைல் ஃபோனை வைத்து தோராயமாக 50 அடி ஆழத்திலும், 50 அடி அகலத்திலும் போட்டால் போதும் என்று சொல்வார்கள்.

அஸ்திவாரம் 5 அடிதான்

அஸ்திவாரம் 5 அடிதான்

அப்படி 50 அடி ஆழத்திற்கு குழி தோண்டினால், தண்ணீர் தான் வரும், இல்லாவிட்டால் புழுதி மண்டலமாக இருக்கும். ஆனால், இவ்வளவு பெரிய பிரமாண்டமான பெரிய கோவிலுக்கு தோண்டப்பட்ட அஸ்திவாரம் வெறும் 5 அடி ஆழம் தான். அதெப்படி, நாங்கள் நம்ப மாட்டோம் என்று சொன்னாலும், அது தான் அறிவியல் உண்மையாகும். அங்கு தான் நம் தமிழனின் அறிவியல் திறமை வெளிப்பட்டிருக்கிறது.

கயிற்றுக் கட்டில் ரகசியம்

கயிற்றுக் கட்டில் ரகசியம்

பெரிய கோவில் கட்டுமான அமைப்பானது, இலகு பிணைப்பு என்ற முறையில் உருவாக்கப்பட்டதாகும். அதாவது, இக்கோவிலின் கட்டுமானத்தின் போது, ஒவ்வொரு கல்லையும் பிணைக்கும் போது, ஒரு நூலளவு இடைவெளி விட்டு விட்டு பிணைத்துள்ளனர். அதாவது, இன்றைக்கும் கிராமப்புறங்களில் உள்ள வீடுகளில் பெரியவர்கள் கயிற்றுக் கட்டிலை பயன்படுத்துவதை அனைவரும் அறிவார்கள். அந்த கயிற்றுக் கட்டில் முறையைத் தான் பெரியகோவில் கட்டுமானத்திற்கும் பயன்படுத்தி உள்ளார்கள் என்பது ஆச்சரியம்.

கயிற்று கட்டிலும் பெரிய கோவில் கட்டுமானமும்

கயிற்று கட்டிலும் பெரிய கோவில் கட்டுமானமும்

கயிற்றுக் கட்டிலில் பயன்படுத்தப்பட்ட கயிறானது பார்ப்பதற்கு இலகுவானதாக இருக்கும். ஆனால், அந்த கட்டிலில் ஆட்கள் உட்கார்ந்த உடனேயே பாரம் தாங்காமல் உள்வாங்கிக் கொண்டு, இறுக ஆரம்பிக்கும். இதனால், கயிறுகளின் பிணைப்பானது வலுவாகிவிடும். அந்த சூட்சமத்தை தான் பெரிய கோவில் கட்டுமானத்திற்கும் பயன்படுத்தி உருவாக்கியிருக்கிறார்கள். கோவிலின் கட்டுமானத்தில் அடியிலிருந்து கற்களை ஒவ்வொன்றாக நூலளவு இடைவெளி விட்டு மிகவும் இலகுவாக அடுக்கும்போது, கற்கள் பாரம் தாங்காமல் இறுக ஆரம்பித்து விடும்.

தோற்று ஓடிய நிலநடுக்கம்

தோற்று ஓடிய நிலநடுக்கம்

முழு கட்டுமானத்தையும் முடித்து கருவறை உச்சியில், மிகப்பிரமாண்டமான 80 டன் எடைகொண்ட, சதுர வடிவ கல், நந்தி, விமானம் என 240 டன் எடையை அழுந்தச் செய்வதன் மூலமாக பெரிய கோவிலின் ஒட்டுமொத்த கட்டுமானமும் பலம் பெற்றுவிடும். இப்படித்தான் பெரிய கோவிலின் அஸ்திவாரத்தை ஒட்டுமொத்தமாக கருவறை உச்சியில் கொண்டுபோய் வைத்தார்கள் அன்றைய நம் தமிழர்கள். இது வரையிலும் எத்தனையோ பூமி அதிர்ச்சி, நில நடுக்கம் என உருவாகி அசைக்க முயன்றாலும் கூட அவை அத்தனையும் பெரிய கோவில் கட்டுமானத்தின் முன்பு தோற்று மண்டியிட்டு வணங்கி சென்றது தான் மிச்சம். ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியவில்லை என்பது தான் அறிவியல் ஆச்சரியம்.

English summary
Thanjavur Brihadeeswara Temple structure was created as a lightweight bond. This means that during the construction of the Temple, each stone is tied together, leaving a gap of yarn size.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X