For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொரோனா வைரஸ் லாக் டவுன் - தஞ்சை, திருவண்ணாமலை கோவில் சித்திரை திருவிழா ரத்து

கொரோனா வைரஸின் தாக்கம் குறையாததால் தஞ்சை பெரிய கோவிலில் நடைபெற இருந்த சித்திரைத் திருவிழா மற்றம் தேரோட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள

Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: கொரோனா வைரஸின் தாக்கம் குறையாததால் தஞ்சை பெரிய கோவிலில் நடைபெற இருந்த சித்திரைத் திருவிழா மற்றம் தேரோட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவு கடந்த ஏப்ரல் 14ஆம் தேதியோடு முடிவடைந்துவிடும் என்று எண்ணியிருந்த சூழ்நிலையில், வரும் மே மாதம் 3ஆம் தேதி வரையிலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், சித்திரைத் திருவிழா மற்றும் தேரோட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தஞ்சை பெரிய கோவில் முன்பு, அரண்மனை தேவஸ்தானம் சார்பாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

தமிழர்களின் கலை, அறிவியல் மற்றும் கட்டிடக்கலை திறமைக்கு சான்றாகவும், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய கலை மற்றும் பண்பாட்டு சின்னமாகவும் போற்றி பாதுகாக்கப்பட்டு வருவது தஞ்சை பெருவுடையார் எனப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில். இக்கோவிலின் கும்பாபிஷேகம் சுமார் 23 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்பு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

Thanjavur temple Chithirai festival cancelled due to Coronavirus

தமிழர்களின் கட்டிடக்கலைத் திறமை பற்றியும், தஞ்சை பெரிய கோவிலைப் பற்றிய பிரமிப்பூட்டும் உண்மைகளும், சமூக ஊடகங்கள் மூலமாக இன்றைய இளைஞகளுக்கு தெரிந்த பின்பு, சமீக காலமாக அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர். அதிலும் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற குடமுழுக்கு விலாவுக்கு பின்னர் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர்.

இக்கோவிலின் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். காரணம், சித்திரைத் திருவிழா மற்றும் தேரோட்டமானது சுமார் 100 ஆண்டுகளுக்கு பின்னர், கடந்த 2015ஆம் ஆண்டு முதல் மீண்டும் தொடர்ந்து, கடந்த ஐந்து ஆண்டுகளாக வெகு விமரிசையாக நடந்து வருகிறது. அதே போல், இந்த ஆண்டு குடமுழுக்கு விழா நடந்து முடிந்ததால், சித்திரைத் திருவிழாவை மிக பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

அதன்படி, இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா மற்றும் தேரோட்ட விழாவுக்கான கொடியேற்ற நிகழ்ச்சியும், தொடர்ந்து வரும் மே மாதம் 2ஆம் தேதியன்று சித்திரைத் தேரோட்டமும் நடைபெறுவதாக இருந்தது. இத்திருவிழாவிற்காகவே, கும்பாபிஷேகம் முடிந்து, அதைத் தொடர்ந்து வழக்கமாக 48 நாட்கள் நடைபெறுவதாக இருந்த மண்டல பூஜையும் 24 நாட்களாக குறைக்கப்பட்டது.

Thanjavur temple Chithirai festival cancelled due to Coronavirus

இந்நிலையில், யாருமே எதிர்பார்க்காமல், சீனாவில் உருவான கொரோனா வைரஸ் நோயின் தாக்கம் உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த, 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் தற்காலிகமாக மூடிவிட மத்திய அரசு உத்தரவிட்டது.

மத்திய அரசின் உத்தரவை அடுத்து கடந்த மார்ச் 18ஆம் தேதி முதல் இந்தியாவிலுள்ள அனைத்து கோவில்களும், பிற வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டன. கோவில்களில் வழக்கமா நடைபெறும் பூஜைகள் மட்டுமே தடையின்றி நடந்து வருகின்றன.

தஞ்சை பெரிய கோவிலிலும் பக்தர்களுக்கு அனுமதியின்றி வழக்கமான பூஜைகள் மட்டுமே நடந்து வருகின்றன. இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் குறையாததால், ஊரடங்கு உத்தரவு மேலும் 18 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இதனால், தஞ்சை பெரிய கோவிலில் நடைபெற இருந்த சித்திரைத் திருவிழா மற்றம் தேரோட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன

ஊரடங்கு உத்தரவு கடந்த ஏப்ரல் 14ஆம் தேதியோடு முடிவடைந்துவிடும் என்று எண்ணியிருந்த சூழ்நிலையில், வரும் மே மாதம் 3ஆம் தேதி வரையிலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், சித்திரைத் திருவிழா மற்றும் தேரோட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தஞ்சை பெரிய கோவில் முன்பு, அரண்மனை தேவஸ்தானம் சார்பாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று கோவிலில் நடைபெறுவதாக இருந்த கொடியேற்ற விழாவும் நடைபெறவில்லை.

Thanjavur temple Chithirai festival cancelled due to Coronavirus

வழக்கமாக கோடை விடுமுறை காலமான ஏப்ரல் மற்றம் மே மாதங்களில் தமிழ்நாட்டில் பெரும்பாலான கோவில்களில் சித்திரைத் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா வைரஸின் தாக்கத்தால் அனைத்து கோவில்களிலும் நடைபெறவிருந்த சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்துமே ரத்து செய்யப்பட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
In this situation, as lockdown has been imposed as a preventive action against the spreading of the raging coronavirus pandemic, on behalf of the Thanjavur temple Devasthanam administration endowment has announced that the Chithirai festival is being canceled.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X