• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பஞ்சமி நாளில் சிவன் கோவிலில் சிவப்பு திரி போட்டு விளக்கேற்றுங்க - இழந்த பணம் திரும்ப வரும்

|

சென்னை: விளக்கேற்று விளக்கேற்று வெள்ளிக்கிழமை என்ற பாடலே உள்ளது. வெள்ளிக்கிழமை மட்டும்தான் விளக்கேற்ற வேண்டும் என்று இல்லை. தினசரியும் விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கேற்றினால் மனம் அமைதியடையும். வீடே மங்களகரமாக இருக்கும். விளக்கேற்றுவதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும். இழந்த சொத்துக்களும், செல்வமும் கூட மீட்கப்படலாம் என்கின்றனர் ஜோதிடர்கள். பஞ்சமி திதியில் பஞ்சதீப எண்ணெய் ஊற்றி ஐந்து முகம் ஏற்றி வடக்குப் பக்கம் பார்த்து தீபம் ஏற்றி வந்தால் எல்லாக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். துன்பங்கள் நீங்கும். வரவேண்டிய பண பாக்கிகள் வந்து சேரும்.

வேத புராணங்களும்கூடவிளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.

சொத்துக்களை இழந்தோரும், ஏமாற்றி பிடுங்கப்பெற்றோரும்,வர வேண்டிய நியாயமான சொத்துக்கள் வராமல் தவிப்போரும், திரும்ப கிடைக்கும் என நினைத்து கொடுத்த பணத்தை இழந்தோரும், தங்களின் நிலை மாற, தொடர்ந்து 27 பஞ்சமிகள், மாலை வேளையில் சிவன் சன்னதியில் சிகப்பு திரி கொண்டு மண் அகலில் இலுப்பெண்ணெய் தீபம் 9 ஏற்றி மனமுருகி வேண்டி வர, பரிகாரம் முடிவதற்குள் பலன் கை மேல். இந்த பரிகாரம் செய்யும் நாள் அசைவம் முட்டை உட்பட தவிர்க்க வேண்டும்.

விநாயகருக்கு தேங்காய் எண்ணெய், மகாலட்சுமிக்கு பசுநெய், குலதெய்வத்துக்கு வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய், பைரவருக்கு நல்லெண்ணெய், அம்மனுக்கு விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த 5 கூட்டு எண்ணெய் ஏற்றலாம். பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்களுக்கு ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும்.

கார்த்திகை மாதம் முழுதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது, அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும். கார்த்திகை மாதத்தின் தொடக்கத்திலும் முடிவிலுமாக இரு நாட்களில் கார்த்திகை நட்சத்திரம் வருமாயின், இரண்டாவதாக வரும் நாளில் கொண்டாடுவது மரபு.

தீபம் ஏற்றும் நேரம்

தீபம் ஏற்றும் நேரம்

அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரையிலும் தீபம் ஏற்றலாம்.

காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். மாலையில் 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம் மற்றும் வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள்.

வறுமை விலகி செல்வம் பெருகும்

வறுமை விலகி செல்வம் பெருகும்

வீட்டின் சுவாமி அறை மட்டுமல்லாது நடு முற்றம், சமையல் அறை, துளசி மாடம் போன்ற இடத்திலும் தீபங்களை ஏற்றலாம் மாலை நேரம் நடு முற்றத்தில் மாக்கோலம் போட்டு மஞ்சள் திரி வைத்து நெய் தீபம் ஏற்றினால் அந்த குடும்பம் வறுமையின் ஆழத்தில் கிடந்தாலும் மிக கண்டிப்பாக செல்வ செழிப்பின் உச்சத்திற்கு வருமென்று சாஸ்திரங்கள் உறுதியாக சொல்லுகின்றன.

விளக்கை துலக்குவதற்று ஏற்ற நாள்

விளக்கை துலக்குவதற்று ஏற்ற நாள்

குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் துலக்குவது நல்லது. இதற்கு காரணம் உண்டு. திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி குபேரனின் பிரதிநிதியான பதுமநிதியின் துணைவி குடியிருக்கிறாள். செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கை கழுவினால் இவள் வெளியேறிவிடுவாள் என்பது ஐதீகம். வியாழன் நள்ளிரவு முதல் வெள்ளி நள்ளிரவு வரை விளக்கில் குபேர சங்கநிதி யட்சணி குபேரனின் பிரதிநிதியான சங்கநிதியின் துணைவி குடியேறுகிறாள். எனவே வெள்ளிக்கிழமை துலக்குவதைத் தவிர்த்து, வியாழன் முன்னிரவில் துலக்குவது நல்லது.

விளக்கு துலக்கும் நாட்களுக்குரிய பலன்

விளக்கு துலக்கும் நாட்களுக்குரிய பலன்

ஞாயிறு விளக்கு துலக்கினால் கண் நோய் குணமாகும் பார்வை பிரகாசம் அடையும். திங்கள் மனசஞ்சலம், குழப்பம் நீங்குதல், மன அமைதி, தீர்க்கமாக முடிவெடுக்கும் பண்பு வளரும். வியாழன் விளக்கு துலக்கினால் குருபார்வையால் கோடி நன்மை, மன நிம்மதி கிடைக்கும். சனிக்கிழமை விளக்கு துலக்கினால் வீட்டிலும், பயணத்திலும் பாதுகாப்பு கிடைக்கும் இழந்த பொருள் கிடைக்கும்.

தீபம் ஏற்ற என்ன எண்ணெய்

தீபம் ஏற்ற என்ன எண்ணெய்

விளக்கு எண்ணெய் ஊற்றி விளக்கேற்றினால் தாம்பத்திய சுகம், புகழ் தேவதை வசியம் கிடைக்கும். பொதுவாக சுத்தமான, கலப்படமில்லாத நல்லெண்ணை ஏற்றி வீட்டில் விளக்கேற்றினாலே போதும். சிறிய வெள்ளி காமாட்சி விளக்கு வாங்கி அதில் நெய் ஊற்றி காலையிலும், மாலையிலும் ஏற்றி வைப்பது நல்லது.

கடன்கள் தீரும்

கடன்கள் தீரும்

ஆலயத்தில் இலுப்ப எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி சிவனை வழிபட்டால் கடன்கள் தீரும். இலுப்ப எண்ணெய் கோவில்களில் மட்டும்தான் பயன்படுத்தலாம். வீட்டில் விளக்கேற்ற இலுப்பை எண்ணெய் பயன்படுத்தக்கூடாது. கணபதிக்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றலாம். மகாலட்சுமிக்கு பசு நெய் ஊற்றி விளக்கேற்றலாம்.

அம்மன் அருள் கிடைக்கும்

அம்மன் அருள் கிடைக்கும்

மகாவிஷ்ணுவுக்கு நல்லெண்ணை ஊற்றி விளக்கேற்றலாம். எல்லா தேவதைகளுக்கும் நல்லெண்ணை விளக்கு ஏற்றலாம். விளக்கிற்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் கடலை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றவே கூடாது. அப்படி ஏற்றி வைத்தால் கடன்கள் பெருகும். தீயவிளைவுகள்தான் ஏற்படும்.

பஞ்சமி திதியில் பஞ்ச தீப எண்ணெய்

பஞ்சமி திதியில் பஞ்ச தீப எண்ணெய்

பசுநெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய இந்த ஐந்தும் கலந்த பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி ஐந்து முகம் ஏற்றி பஞ்சமி திதியில் தேவியை வழிபட்டால் அம்மனின் அருள் கிடைக்கும். பஞ்சதீப எண்ணெய் ஊற்றி ஐந்து முகம் ஏற்றி வடக்குப் பக்கம் பார்த்து தீபம் ஏற்றி வந்தால் எல்லாக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். துன்பங்கள் நீங்கும். வரவேண்டிய பண பாக்கிகள் வந்து சேரும்.

தீபத்தை குளிர வைக்கும் முறை

தீபத்தை குளிர வைக்கும் முறை

பொதுவாக தீபம் ஏற்றினால் எண்ணெய் முழுவதும் தீர்ந்து, தீபம் தானாக அணையும் வரை விட்டு விடக் கூடாது. இது கெடுதலைக் கொடுக்கும். தீபம் ஏற்றியதிலிருந்து தீபத்தை குளிர வைக்கும் வரை விளக்கில் எண்ணெய் இருந்து கொண்டே இருக்க வேண்டும். விளக்கை குளிர்விக்கும் போது, கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது. வாயால் ஊதி அணைக்கக்கூடாது. பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம். இதற்கென பித்தளை குச்சிகள் கடைகளில் கிடைக்கின்றன. தீபத்தை குளிர வைக்க, திரியின் அடிப்பகுதியை ஓம் சாந்த ஸ்ரூபிணே நம என்று சொல்லி பின்புறமாக இழுக்க வேண்டும். அப்பொழுது தீச்சுடர் சிறிது சிறிதாக குறைந்து திரி எண்ணெயில் அமிழ்ந்து தீபம் குளிரும். விளக்கேற்றலாம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
One of the practices that are famous among people is of burning the lamp. These lights are lit during evening and morning at the time of performing Puja. The biggest benefit of lighting a lamp is related to health. By lighting the, beauty of your worship gets increased
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more