For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சங்கடம் தரும் சந்திராஷ்டமம்... அம்மாவை சரணடைந்தால் அச்சமில்லை

சந்திராஷ்டமம் என்றால் என்ன எல்லோரும் சந்திராஷ்டமத்தை கண்டு பயந்து நடுங்க காரணம்தான் என்ன? என்பதை அறிந்து கொள்வோம்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சென்னை: ஒருவர் பிறந்த ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் ராசிக்கு ஒவ்வொரு மாதமும், சந்திரன் எட்டாமிடமான அஷ்டமஸ்தானத்தை கடந்து செல்லும். இதையே சந்திராஷ்டமம் என்கிறோம்.

தற்காலங்களில் காலையில் எழுந்தவுடன் எதை செய்கிறார்களோ இல்லையோ! இன்று யாருக்கு சந்திராஷ்டமம் என்பதை பார்த்துவிட்டு தான் அடுத்தது காபி சாப்பிடலாமா வேண்டாமா என முடிவு செய்யுமளவிற்க்கு சந்திராஷ்டமத்தின் தாக்கம் அனைவரிடமும் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

சந்திராஷ்டமம் என்று தெரிந்தவுடன் யாரிடமும் சரியாக பேசமாட்டார்கள். உம் என்று முகத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். சந்திராஷ்டமம் முடிந்துவிட்டது என்று தெரிந்தவுடன் தான் "அப்பாடா" என நிம்மதி பெருமூச்சு விடுவார்கள்.

சந்திராஷ்டமம்:

சந்திராஷ்டமம்:

சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டேகால் நாட்களைத்தான் ‘சந்திராஷ்டம‘ காலம் என்கிறோம். இந்த இரண்டேகால் நாட்களிலும் சந்திரன் ஒருவருக்கு பிரச்சனையை தருமா என்றால் அதுதான் இல்லை. ஒருவர் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம்தான் சந்திராஷ்டம வேளையாகும்.
சந்திரன்+அஷ்டமம் = சந்திராஷ்டமம்.

பொதுவாக எட்டாம் இடம் என்பது சில தடைகள், மனசங்கடங்கள், மனச்சோர்வு, இடையூறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும் இடமாகும். மேலும் சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்து நேர்பார்வையாக தனம், வாக்கு, குடும்பம் எனும் இரண்டாம் இடத்தைப் பார்ப்பதால் அந்த ஸ்தான அமைப்புக்களும் பாதிப்படைகின்றன.

இந்த சந்திராஷ்டம தினத்தன்று முக்கிய சுபகாரியங்களை செய்யமாட்டார்கள். மணமகன், மணமகள் ஆகிய இருவருக்கும் சந்திராஷ்டமம் இல்லாத நாளில்தான் திருமண முகூர்த்தம் வைப்பார்கள்.

சந்திராஷ்டம் எப்படி ஏற்பட்டது?

சந்திராஷ்டம் எப்படி ஏற்பட்டது?

மனோகாரகனான சந்திரன் கால புருஷனுக்கு எட்டாம் வீடான விருச்சிகத்தில் நீசம் அடைகிறது. எனவே விருச்சிக ராசியில் சந்திரன் வரும்போது எண்ண அதிர்வுகளில் சில மாற்றம் ஏற்படுகிறது. பொதுவாகவே கால புருஷனுக்கு எட்டாம் வீட்டை எந்த கிரகம் கடந்தாலும் அது போகிர போக்கில் சில கெடுதல்களை செய்துவிட்டுதான் போகிறது. அந்த விதத்தில் சந்திரன் மனோகாரகன் மற்றும் பயண காரகன் என்பதால் மனதிலும் பிரயாணத்திலும் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதன் அடிப்படையில்தான் சந்திரன் எட்டாம் இடத்தில் வரும்போது சந்திராஷ்டமம் என அனுஷ்டிக்க ஆரம்பிக்கப்பட்டது.

தேய்பிறை சந்திரனும் சந்திராஷ்டமும்

தேய்பிறை சந்திரனும் சந்திராஷ்டமும்

வளர்பிறை காட்டிலும் தேய்பிறையில் சந்திர மறைவு தன்மை அதிக பலம் உள்ளது. சந்திரனை மனநிலைக்கு உரியவன் (மனோகாரகன்) என்றும் போக்குவரத்துகளுக்கு காரகன் என்றும் ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

கவனம் தேவை

கவனம் தேவை

மறைவுஸ்தானத்தில் சந்திரன் நிற்கும் காலத்தில் மனதில் தெளிவிண்மையால் மன உளைச்சல் ஏற்பட்டு அதன் காரணமாக கோபப்படுதல், பொறுமை இன்மையால் எரிச்சல், அடுத்தவரிடத்தில் தேவையற்ற கோபம், இல்லறத்தில் சண்டை போன்ற உணர்ச்சி சார்ந்த பிழறல்கள் நிகழும். மேலும் சந்திராஷ்டம காலத்தில் வெளியில் பயணம் செய்யும் பொழுது அதிக கவனம் தேவை.

கெடுபலன்கள் ஏற்படுமா?

கெடுபலன்கள் ஏற்படுமா?

சந்திரன் ஜெனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைந்து இருந்தாலும், உச்சம், ஆட்சி, நீச்சம் போன்ற அமைப்புக்களில் இருந்தாலும் சந்திராஷ்டமத்தால் கெடுபலன்கள் ஏற்படுவதில்லை என சில ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.

பாதிப்பு ஏற்படாது

பாதிப்பு ஏற்படாது

சந்திராஷ்டமம் ஒரு கெட்ட நாளாக அனைவராலும் பார்க்கப்படுகிறது. ஆனால் சந்திராஷ்டமம் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை என்பதுதான் உண்மை. சில நேரங்களில் முடிக்க முடியாத வேலைகள் கூட சந்திராஷ்டம தினங்களில் முடிவதை பார்க்கலாம்.

சர்ப்ப கிரகங்கள்

சர்ப்ப கிரகங்கள்

ஒருவர் ராசிக்கு எட்டாமிடத்தில் புணர்பு தோஷத்தை தரும் சனைஸ்வரன், கிரஹன தோஷத்தை தரும் ஸர்ப கிரகங்களான ராகு கேது, சந்திரனுக்கு அஷ்டங்க தோஷத்தை ஏற்படுத்தி சந்திரபலம் இல்லாத அமாவாசை ஏற்படுத்தும் சூரியன் போன்ற கிரகங்களுடன் சேர்ந்து சந்திராஷ்டமம் ஏற்படும்போது மட்டுமே கெடுபலன்கள் ஏற்படுகின்றன.

சந்திராஷ்டமம் எப்போது கெடுதல் செய்யாது

சந்திராஷ்டமம் எப்போது கெடுதல் செய்யாது

1. ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசிக்கு எட்டாம் வீடு குருவின் வீடாகவோ அல்லது எட்டாம் வீட்டிற்க்கு குருவின் பார்வையோஅல்லது சேர்க்கையோ ஏற்பட்டால் சந்திராஷ்டம கெடுபலன் ஏற்படாது.

2.சந்திரனுக்கு எட்டாம் வீட்டில் சுக்கிரன் நின்று சந்திராஷ்டமம் ஏற்பட்டால் அப்போது தீமையை காட்டிலும் நன்மையை ஏற்படும். அதிலும் சுக்கிரன் ஆட்சிபலம் பெற்றுவிட்டால் உங்களுக்கு சந்திராஷ்டம தினத்தில் அதிக நற்பலன்கள் ஏற்படும்.

3.ஒருவர் ஜாதகத்தில் ஜெனன சந்திரன் குரு பார்வை பெற்ற நிலையில் அவருக்கு சந்திராஷ்டமம் கெடுதல் செய்யாது.

4. ஜெனன ஜாதகத்தில் சந்திரன் அதிக ஷட்பலம் பெற்று நின்றாலும், சந்திரன் பின்னாஷ்டகவர்க பரல்களாக 6 க்கு மேற்பட்ட பரல்கள் பெற்றுவிட்டாலும், சந்திரன் அதிக பாகை பெற்று ஆத்ம காரகனாக நின்றாலும் சந்திராஷ்டம பாதிப்புகள் ஏற்படுவதில்லை.

5. ஒருவர் சந்திராஷ்டமம் அடையும் நக்ஷத்திரம் குருவின் நக்ஷத்திரமாகவோ சுக்கிரனின் நக்ஷத்திரமாகவோ அமைந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் கெடுபலன் அளிப்பதில்லை.

சந்திராஷ்டமத்திற்கான பரிகாரங்கள்:

சந்திராஷ்டமத்திற்கான பரிகாரங்கள்:

•சந்திராஷ்டம தினங்களில் அபிராமி அந்தாதி எனும் பாடலை பாடிவர சந்திராஷ்டம தோஷங்கள் நம்மை அனுகாது. சந்திரபலம் குறைந்த அமாவாசை நாளில் தன்னை மறந்த நிலையில் அபிராமி பட்டர் பெளர்ணமி என கூறியதை மெய்பிக்கும் வகையில் அபிராமி அந்தாதி பாடியவுடன் வானில் நிலவினை தோற்றுவித்த சிறப்பு அபிராமி அந்தாதிக்கு உண்டு.

•சந்திராஷ்டம தினத்தில் சந்திரனின் காரகம் பெற்ற உப்பு, அரிசி ஆகிய பொருட்களை தானமாக வழங்குவது சந்திராஷ்டம தோஷத்தை குறைக்கும்.

•கடலும் கடல் சார்ந்த இடமுமான சந்திரனின் காரகம் பெற்ற கடற்கரையில் காற்று வாங்குவது மனதுக்கு அமைதி தருவதோடு சந்திராஷ்டம தோஷமும் நீங்கிவிடும்.

•சந்திராஷ்டம தினத்தில் குருவின் ஸ்வருபமான பிராமணர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஜோதிடர்களுக்கு வெற்றிலை பாக்குடன் இயன்ற அளவு தாம்பூலம் அளிப்பது.

•வினாயகர், அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு பால் அபிஷேக பொருளாக வழங்கினால் சந்திராஷ்டம கெடுபலன்கள் நேராது.

•சந்திரன் விருச்சிகத்திலிருந்து தனுசு ராசிக்கு வந்தவுடன் நீசத்தன்மை நீங்கிவிடுவதால் குருவின் ஆதிக்கம்பெற்ற விரளி மஞ்சளை கையில் காப்பாக கட்டிக்கொண்டால் சந்திராஷ்டம தோஷம் பலம் இழந்துவிடும்.

•சந்திரன் மாத்ரு காரகன் என்பதால் சந்திராஷ்டம தினங்களில் அம்மாவிடம் ஆசிபெற்றுக்கொண்டால் சந்திராஷ்டம தோஷம் தாக்காது, அம்மா இல்லாதவர்கள் அவர்களின் படத்தின் முன் சிறிது நேரம் அமர்ந்து மெளனமாக கண்களை மூடி தியானம் செய்தால் சந்திராஷ்டம தோஷத்தை பற்றி கவலை பட வேண்டாம்.

English summary
The general effects when Moon transits the 8th sign from her natal position are misery, ill-health, depressive tendencies, and fear from unexpected sources.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X