• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ராகுவின் காரகமான வெங்காயத்தை விரதம் இருப்பவங்க ஏன் சாப்பிடக்கூடாது தெரியுமா?

|

சென்னை: காய்கறி மார்க்கெட்டிற்கு போய் வெங்காயத்தை வெறுமனே பார்த்து ஆசையாய் தடவி பார்த்து விட்டு மட்டுமே வரவேண்டியிருக்கிறது அந்த அளவிற்கு விலை ஏறி கிடக்கிறது. ஆனாலும் சிலர் ஆசைக்கு கால் கிலோ வாங்கினால் சமூகம் பெரிய இடமோ என்று கேட்கிறார்கள். வாங்கிய வெங்காயத்தை கூட பீரோவில் வைத்து எடுத்து கொடுப்பது போல டிக்டாக்கில் பகிர்ந்து காமெடி செய்கிறார்கள். உரிக்க உரிக்க உரியும் வெங்காயம், கடைசியில் ஒன்றும் இல்லாத வெறுமையை உணர்த்தும் தத்துவார்த்தமான காயாகும். அன்றாட சமையலுக்கு மட்டுமல்ல ஜோதிட ரீதியாகவும், மருத்துவரீதியாகவும் பயன்படுகிறது வெங்காயம். இதை விரதம் இருப்பவர்கள் சமையலில் சேர்த்துக்கொள்ளமாட்டார்கள் எல்லாம் காரணமாகத்தானாம்.

வெங்காயம் இல்லாமல் சமையலில் ருசியே இல்லை. சாம்பார், காரகுழம்பு, கூட்டு, பொரியல் என அனைத்திலும் ஒரு கைபிடி அளவு வெங்காயம் போட்டால்தான் சுவையே. ஆனால் இன்றைக்கு வெங்காயத்தின் விலையே உச்சத்தில் இருக்கிறது. கிலோ ரூ.150 கொடுத்து வாங்கி அதை வழக்கமான அளவில் பயன்படுத்த முடியாமல் திண்டாடுகின்றனர்.

வெங்காயம் உடலுக்கு தேவையான சத்துக்களை தருவதோடு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. பல நாடுகளில் வெங்காயத்தை மருந்தாக பயன்படுத்துகின்றனர். பாட்டி வைத்தியத்தில் வெங்காயத்திற்கு தனி இடம் உண்டு. தலைமுடியில் ஏற்படும் பிரச்சினைகளை வெங்காயம் தீர்க்கிறது. இன்றைக்கு வெங்காயம் விற்கிற விலையில் இந்த பில்டப் எதற்கு என்று கேட்கிறீர்களா? எல்லாம் விசயமாகத்தான்.

ராகுவின் காரகம் வெங்காயம்

ராகுவின் காரகம் வெங்காயம்

பாற்கடலில் அமிர்தம் கடையும் போது சுவர்ணபானு என்ற அசுரன் அமிர்தம் உண்டதால், விஷ்ணுவால் இரண்டாக வெட்டப்பட்டான். தலையான ராகுவாக மாறியது. அந்த தலையின் வாயிலிருந்து வெளிவந்த எச்சிலே பூண்டு மற்றும் ரத்தமே வெங்காயம் என விஷ்ணு புராணம், சிவ புராணம் கூறுகிறது. ஜோதிடத்தில் பூண்டு மற்றும் வெங்காயம் ராகுவின் காரகத்துவத்தில் வருகிறது. அதனாலே பூண்டு மற்றும் வெங்காயம் யோகி மற்றும் தபஸ்விகளாலும் தவிர்க்கப்படுகிறது.

விரதத்திற்கு நோ

விரதத்திற்கு நோ

வெங்காயம் இயற்கை வயாக்கரா என வர்ணிக்கப்படுகிறது. முருங்கைக்காயை விட வெங்காயத்திற்கு அதிகளவில் பாலியல் உணர்வு தூண்டும் சக்தியுள்ளது. அதனால் தான், விரதம் இருப்பவர்களும், துறவிகளும் உணவில் வெங்காயத்தை சேர்த்துக்கொள்ள மாட்டார்கள் அதற்கு காரணம் அது பாலியல் உணர்வை தூண்டிவிடும் என்பதால் தான்.

செய்வினை கோளாறு நீக்கும்

செய்வினை கோளாறு நீக்கும்

சின்ன வெங்காயமோ, பெரிய வெங்காயமோ சிவப்பு நிற வெங்காயத்திற்கு கண் திருஷ்டி கோளாறு, செய்வினை கோளாறுகளை போக்கும் சக்தி உள்ளது உங்கள் வீட்டில் அல்லது உடம்பின் மீது துர்நாற்றம் வீசினால் கண் கோளாறுகள் தாக்கியிருக்கக் கூடும். இதனால் பயப்பட வேண்டாம். இரவில் படுக்கும் முன்பு தலையணைக்கு அடியில் இரண்டு வெங்காயத்தை வைத்து படுத்து விட்டு காலையில் எழுந்து தூரமாக வீசி விட வேண்டும். இதனால் கண் திருஷ்டிகள் நீங்கும்.

மருந்தாகும் வெங்காயம்

மருந்தாகும் வெங்காயம்

ஆயுர்வேத மருந்துக்களில் அதிகம் பயன்படுத்தப்படும் வெங்காயம் தாம்பத்ய விசயத்திற்கு அதிக நன்மையை தருகிறது. விரத நாட்களில் வெங்காயம், வெள்ளைப்பூண்டு போன்றவைகளை சேர்ப்பதில்லை. இறைவனைப் பற்றிய சிந்தனை மாறாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே அரிசி சாதத்தையும், வெங்காயம், பூண்டு இவற்றையும் தவிர்த்து விட வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. அரிசி, வெங்காயம், பூண்டு இவற்றைச் சாப்பிட்டால் தூக்கம் வரும். இதனால் தான் இவற்றை வேண்டாம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன

உலகம் முழுவதும் வெங்காயம்

உலகம் முழுவதும் வெங்காயம்

கல் நெஞ்சக்காரர்களின் கண்களையும் குளமாக்கும் தன்மை கொண்டது வெங்காயம். சமையலில் வெங்காயம் பயன்படுத்தப்படுவது இன்றைய நேற்றைய சமாச்சாரமில்லை கிட்டத்தட்ட 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வெங்காயத்தை பயிரிட்டு சமைத்து சாப்பிட்டு வந்திருக்கின்றனர். காரணம் அதன் நன்மைகள்தான். பண்டைய ரோம, கிரேக்க, எகிப்து, இந்திய, சுமேரிய,சீனர்கள் வெங்காயத்தை பயன்படுத்தியத்தற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. வெங்காயத்தில் எளிதில் ஆவியாகும் எண்ணெய், கந்தகம் கலந்துள்ளது. அல்லிசின் அல்லீன் ஆகியவை உள்ளன. இவை காற்றில் பரவி வெங்காயத்தை உரிக்கும் பொழுதும் நறுக்கும் பொழுதும் கண்களில் நீரை வரவழைக்கின்றன. மேலும், ஃபிளேவனாய்டுகள், பினோலிக் அமிலம் மற்றும் ஸ்டிரால்கள் போன்றவை காணப்படுகின்றன.

சின்ன வெங்காயம்

சின்ன வெங்காயம்

யூனியோ என்ற இலத்தின் வார்த்தையில் இருந்து தோன்றியது ஆனியன். இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம். வெங்காயத்தில் பெர்முடா வெங்காயம், வெள்ளை வெங்காயம், சிப்போலினி வெங்காயம், எகிப்த் வெங்காயம், பச்சை வெங்காயம், லீக்ஸ் வெங்காயம், மாவி வெங்காயம், முத்து வெங்காயம், ஊறுகாய் வெங்காயம், ஸ்பானிஷ் வெங்காயம், மஞ்சள் வெங்காயம், வெல்ஷ் வெங்காயம் என பட்டியல் நீள்கிறது. இவற்றில் சிகப்பு வெங்காயம் மற்றும் ஷேலட்ஸ் எனப்படும் சின்ன வெங்காயம்தான் நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய வெங்காய வகைகள்.

ஆண்மை அதிகரிக்கும்

ஆண்மை அதிகரிக்கும்

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது. மேலும் சிறந்த பால் உணர்வுத் தூண்டுவியாகவும் இது செயல்படுகிறது. பல நூறு ஆண்டுகளாகவே வெங்காயம் பால் உணர்வு தூண்டுவியாக கருதப்படுகிறது. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு பின்னர் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

தாம்பத்ய உறவு

தாம்பத்ய உறவு

வெங்காயத்தை தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் குதிரை பலம் கிடைக்கும் என ஈரானில் நடைபெற்ற மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதற்கு காரணம் வெங்காயத்தில் உள்ள செலினியம் என்னும் தாது உப்புதானாம். செலினியம் உப்பு ஆண்களின் ஆன்டிஆக்ஸிடென்ட் என்ற ஹார்மேனை அதிகமாக்கி டென்டோஸ்டிரான் என்ற ஹார்மேன் உற்பத்தியை அதிகப்படுத்துகிறது. தம்பதியரின் காதல் உணர்வுகள் அதிகரித்து குழந்தை பேறு இல்லாதவர்களுக்கும் குழந்தை பேறு கிடைக்கும் என்கிறது அவ்வறிக்கை.

தாம்பத்ய வாழ்க்கை சீராகும்

தாம்பத்ய வாழ்க்கை சீராகும்

இதனால் ஈரானியர்கள், எகிப்தியர்களும் பல ஆண்டுகளாகவே வெங்காய ஜீஸ் குடித்து தங்களது படுக்கை அறையை அமைத்துக்கொள்கிறார்களாம். இஞ்சி சாறு ஒரு தேக்கரண்டி எடுத்து, அதனுடன் வெங்காயச் சாறு சேர்த்து ஒரு நாளுக்கு மூன்று முறை எடுத்துக் கொண்டால், லிபிடோ மற்றும் பாலியல் உணர்ச்சியானது அதிகரிக்க தொடங்கி,தாம்பத்ய வாழ்க்கை சீராக இருக்கும். இன்றைய சூழ்நிலையில் வெங்காயத்தின் விலை அதிகம்தான். அதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அதற்காக மருத்துவ குணம் கொண்ட வெங்காயத்தை சமையலில் தவிர்க்காமல் பயன்படுத்துங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

 
 
 
English summary
If you notice some black magic done to your home, where an object has been placed in your home, then press the red onion and drip the juice on the totka to remove its ill effects. People who are afraid while sleeping should keep some onion next to their pillows to remove fear.Onion is known as one of the greatest aphrodisiac foods, it helps increase libido and also strengthens the reproducing organs. Onions also increase the testosterone levels in the body and can help in increasing the sexual stamina.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X