• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குரு பெயர்ச்சி: குரு பார்க்க கோடி நன்மை...

By Staff
|

-அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சென்னை: பலவித கஷ்டங்களில் உழன்றுக்கொண்டிருக்கும் மக்கள் குருபெயற்சி நாளை நோக்கி ஆவலுடன் காத்திருக்கின்றனர். பல கோயில்களில் குருபெயர்ச்சி யாகங்கள் சிறப்பு பூஜைகள் செய்ய பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனர்.

உத்தமமான குருவானவர், தன் சிஷ்யர்களை மட்டுமில்லை, சாமான்யமாக அவர்களுடைய திருஷ்டியில் படும், வஸ்துக்கள் அனைத்தையும் தன் பார்வையால் கடாக்ஷிப்பது. அந்த கடாக்ஷத்தை உள்வாங்கிக் கொள்ளும் பக்குவம் நமக்கு இருக்கிறதோ இல்லையோ, அந்த கடாக்ஷமே தன் வேலையை செய்ய ஆரம்பித்து விடும்.

மீன், தன் குஞ்சுகளை பார்வையாலேயே ரக்ஷிப்பது போன்றது மஹான்களின் திருஷ்டி. அதனால்தான் நம் குழந்தைகளை மஹான்களின் சன்னிதானத்திற்கு அழைத்துப் போவது.

The most awaiting Jupiter's transit 2017

அக்குழந்தைகளுக்கு மஹான்கள் யாரென்று கூட புரிந்து கொள்ளும் பக்குவம் இருக்கிறதோ இல்லையோ, அவர்களின் மேல் சூழ்ந்துள்ள தோஷங்களை நிவர்த்திக்கும் சக்தி அந்த திருஷ்டிக்கு உண்டு.

காஞ்சி மகாபெரியவாளிடம் ஆழ்ந்த பக்தி கொண்ட ஒரு பெண் இருந்தாள். அவளுடைய புருஷனுக்கோ, கடவுள், மஹான்கள், கோவில் என்று எதிலுமே நம்பிக்கை இல்லை. அதிலும் மஹான்கள் எல்லோருமே நம்மை போல் சாதாரண மனிதர்கள்தான்! என்ற ஒரு பேதைமை உண்டு.

ஒருமுறை அந்த அம்மாவின் வற்புறுத்தலின் பேரில் பெரியவாளை தரிசனம் பண்ண ஒப்புக் கொண்டார். ஆனால் அவர் போட்ட நிபந்தனை "நா அங்க வருவேன். பேன்ட், ஷர்ட் தான் போட்டுப்பேன். பஞ்சகச்சம் விபூதி எதுவும் கெடையாது. அவரை நமஸ்காரம் பண்ண மாட்டேன். உனக்காக வரேன் ஆனா,அவரைப் பாக்க மாட்டேன். தள்ளிதான் நிப்பேன்".

பாவம் அந்த அம்மா ஒத்துக் கொண்டாள். போனார்கள். அவர் காலில் போட்டிருந்த ஷூவைக் கூட கழற்றவில்லை.அந்த அம்மா மானசீகமா பெரியவாளிடம் பிரார்த்தனை பண்ணினாள் கணவருக்கு நல்ல புத்தி வேண்டி.

நம்ம பெரியவா சாக்ஷாத் காமாக்ஷித் தாயாரில்லையா? "நீ பாக்காட்டா என்ன? நான் ஒன்னைப் பாக்கறேன்" என்று சொல்லுவதுபோல், மேனாவுக்குள் இருந்து லேசாக எட்டி அந்த மனுஷனைப் பார்த்தார்.

அவ்வளவுதான்! கொஞ்ச நாள் கழித்து கணவர் "வாயேன்...போய் மடத்ல ஸ்வாமியை பார்த்துட்டு வருவோம்". சாதாரண வேஷ்டி, ஷர்ட், லேசான விபூதி கீற்று! கொஞ்சநாள் கழித்து, பஞ்சகச்சம், குடுமி வைத்துக் கொள்ள ஆரம்பித்து, நாட்கள் செல்ல செல்ல, அந்த அம்மாவை விட பெரியவா மேல் பித்தாகிப் போனார்.

வேலையை விட்டார். பெரியவா படத்தை வைத்துக் கொண்டு சதா பஜனை, தியானம் என்று பரம பக்தராக மாறிவிட்டார்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால்......பெரியவா அன்று ஒரே ஒரு தடவை அவரை கடாக்ஷித்ததுதான்! அப்புறம் ஒரு வார்த்தை பேசக் கூட இல்லை!

ஜோதிடத்தில் குருபார்வை:

ஜோதிடத்தில் பிரஹஸ்பதி எனும் குருபகவானின் பார்வை பற்றி விசேஷமாக கூறப்படுகிறது. குருபார்க்க கோடி நன்மை என கூறுவர்.

ஒருவர் ஜாதகத்தில் எத்தனை கொடுமையான தோஷம் இருந்தாலும் அவருக்கு குருபார்வை இருந்துவிட்டால் அனைத்து தோஷங்களும் விலகி சுபிக்ஷம் ஏற்படும்.

அதை சமயம் ஒருவர் ஜாதகத்தில் எத்தனை கிரகங்கள் பலமாக இருந்தாலும் குரு மட்டும் பலமிழந்துவிட்டால் அவர் எதையுமே அனுபவிக்க முடியாது.

மரணத்திற்கு ஒப்பான கெண்டங்கள் ஒருவருக்கு ஜாதக ரீதியாக இருந்தால் கூட குருவின் அருள்பார்வை மட்டும் இருந்துவிட்டால் எமலோகத்தின் வாசல் வரை சென்றவர் கூட மீண்டு எழுவர். குருவின் பார்வை அவ்வளவு விஷேஷமானது.

ஒருவருக்கு திருமணமாக வேண்டும் என்றால் வியாழ நோக்கம் (குருபார்வை) வேண்டும் என்பார்கள். அத்தனை சிறப்பு வாய்ந்த குருதான் புத்திரகார கனாகவும் இருக்கிறார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த குருவானவர் இந்த ஆண்டு வாக்கிய பஞ்சாங்கப்படி ஆவணி 17ஆம் தேதி செப்டம்பர் 2லும், திருக்கணித பஞ்சாங்கபடி ஆவணி மாதம் 27ஆம் தேதி (12-09-2017) செவ்வாய்கிழமை காலை 6.51 மணிக்கு கன்னி ராசியிலிருந்து துலாராசிக்கு இடம் பெயர்கிறார்.

கால புருஷனுக்கு 6ம் இடத்தில் கன்னி ராசியில் இருந்துக்கொண்டு தனது ஐந்து, ஏழு ஒன்பது பார்வையால் மகரம், மீனம், ரிஷபம் ஆகிய ராசிகளை பார்த்து நன்மையும் தீமையும் கலந்த பலன்களை வழங்கிய குருபகவான் தற்போது ஜென வசிய ராசிக்குள் ப்ரவேசிக்க போகிறார்.

குரு தனது பகை வீட்டிற்கு சென்றாலும் குரு சுக்கிர சேர்க்கை பல உன்னதமான பலன்களை அளிக்கும். மேலும் தனது பார்வையால் கும்பம், மேஷம், மிதுனம் ஆகிய ராசிகளை பார்க்கவிருக்கிறார். அவருடைய பெயர்சிக்கு முன்பாகவே கேது கும்பத்திலிருந்து மகரத்திற்கு சென்றுவிடுவார்.

எனவே கும்பத்தை குரு பார்ப்பதால் குழந்தைக்கு முயற்சித்து வந்தவர்களெல்லாம் கருதரிப்பார்கள். திருமணமாகாத காளையர்களுக்கெல்லாம் திருமணம் நடைபெறும். காலபுருஷனின் லக்னத்தை சம சப்தமமாக பார்பதால் ஆரோக்யம் மேம்படும்.

பொதுவாக ஆண்களின் கௌரவமும் அந்தஸ்மும் உயரும் வருடமாகும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Jupiter transit in Libra 2017 will commence on September 12, 2017. This significant celestial development is going to trigger several important astrological changes in the lives of people.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more