For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுட்டெரித்த அக்னி நட்சத்திரம்... இன்றோடு நிறைவு

தமிழகத்தை சுட்டெரித்த அக்னி நட்சத்திரம் இன்றோடு நிறைவடைகிறது!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

-அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சென்னை: அக்னி பகவானுக்கு நன்றி கூறும் விதமாக இன்று அக்னி நக்ஷத்திர நிவர்த்தியை முன்னிட்டு அனேக விதமான நிவர்த்தி வழிபாடுகள் நடைபெறுகின்றது. தமிழகத்தை சுட்டெரித்த அக்னி நட்சத்திரம் இன்றோடு நிறைவடைகிறது!.

பொதுவாக யாராவது விருந்தினர் வந்துவிட்டு செல்லும்போது பிரியாவிடை கொடுத்து அனுப்புவது மரபு. அதுபோல இன்று அக்னி நட்சத்திர நிறைவை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

கான்டாவனம் எனும் வனத்தைப் கிருஷ்ணணும் அர்ச்சுனும் அக்னி பகவானுக்கு எரிப்பதற்கு உதவி செய்த நாட்களே அக்னி நட்சத்திர தோஷ நாட்கள் என்பர்.

The period of Agni Nakshatram end on today

முன்னொரு காலத்தில் 12 வருடங்கள் இடைவிடாமல் நெய்யூற்றி சுவேதகி யாகம் செய்தார்கள். தொடர்ந்து நெய் உண்டதால் அக்னி தேவனுக்கு மந்த நோய் ஏற்பட்டது. அவன் உடம்பில் சேர்ந்த கொழுப்பைக் குறைக்க, ஒரு காட்டை அழித்து அந்த நெருப்பைத் தின்றால்தான் தீரும். எனவே அக்னி பகவான் காண்டவ வனத்தைத் தேர்ந்தெடுத்தான்.

அப்போது கிருஷ்ணர், 21 நாட்கள்தான் உனக்கு அவகாசம். அதற்குள் உன் பசியைத் தீர்த்துக் கொள்' என்றார். அதன்படி அக்னி காண்டவ வனத்தை அழித்து விழுங்கி, தன் பசி தணிந்த அந்த 21 நாட்கள்தான் அக்னி நட்சத்திர தினம் என்றும் கத்திரி வெயில் என்றும் கூறுகின்றனர்.

அதன்படி இந்த ஹேவிளம்பி ஆண்டில் அக்னி நட்சத்திரம் 04.05.2017 சித்திரை மாதம் 21 ஆம் நாள் வியாழக்கிழமை நாழிகை 19 - 59 (பகல் மணி 1.57) அளவில் ஆரம்பித்தது. வைகாசி 14. (28.05.2017) ஞாயிற்றுக்கிழமை நாழிகை 37 விநாடி 52 (முன்னிரவு 9.01) அளவில் அக்னி நக்ஷத்திரத் நிறைவடைகிறது.

பொதுவாக யாராவது விருந்தினர் வந்துவிட்டு செல்லும்போது பிரியாவிடை கொடுத்து அனுப்புது மரபு.
அக்னி நமக்கு வெம்மையை தவிர நன்மை ஏதும் செய்யவில்லையா?

1. பிறந்தது முதல் இறக்கும் வரை அக்னி இல்லாமல் எதுவுமே இல்லை. அக்னி இருக்கும் வரைதான் உயிர் தேகத்தில் இருப்பதாக பொருள். உயிர் நீங்கி விட்டால் உடலை அக்னியில் சேர்த்துவிடுவார்கள். அதாவது தகனம் செய்துவிடுவார்கள்.

2. வயிற்றில் அக்னி இருந்தால்தான் பசி எடுக்கும். அக்னி இருந்தால்தான் சாப்பிட்ட பொருட்கள் ஜீரணமாகும்.

3. அக்னியின் விளைவாகவே தாம்பத்யம் நடக்கிறது.

4. அக்னிம் தூதம் வ்ருணீமஹே' என்கிறது வேதம். அக்னி பகவானை தூதுவனாகக் கொண்டு இந்த ஹோமங்கள் நடத்தப்படுகின்றன. அதாவது, எந்தக் கடவுளை நினைத்து நாம் ஹோமத்தைச் செய்கிறோமோ, நாம் கொடுக்கும் ஆஹுதியை அவரிடம் சென்று சேர்க்கும் போஸ்ட்மேன் வேலையைத்தான் அக்னி பகவான் தன் மனைவி ஸ்வாஹா தேவியுடன் சேர்ந்து செய்கிறார்.

இத்தகைய அக்னி பகவானுக்கு நன்றி கூறும் விதமாக இன்று அக்னி நக்ஷத்திர நிவர்த்தியை முன்னிட்டு அனேக விதமான நிவர்த்தி வழிபாடுகள் நடைபெறுகின்றது.

ஜோதிட ரீதியான அக்னி நக்ஷத்திர தோஷ நிவர்த்தி:

1. ஜோதிடத்தில் மேஷம், சிம்மம் தனுசு ஆகிய மூன்று ராசிகளும் நெருப்பு ராசிகள் என்றும் அதன் அதிபதிகளாகிய செவ்வாய், சூரியன், குரு மூவரும் நெருப்பு கிரகங்கள் எனப்படுகின்றது.

2. மேஷம் காலபுருஷனுக்கு லக்னம் மற்றும் ஆத்மாவை குறிக்கும் கிரகமாகும். சிம்மம் வயிற்றினை குறிக்கும் கிரகமாகும். தனுசு கருதரித்தலை குறிக்கும் கிரகமாகும். இவை மூன்றும் ஒன்றுக்கொன்று பாவாத்பாவ முறையில் ஐந்துக்கு ஐந்தாகவும் ஒன்பதிற்க்கு ஒன்பதாகவும் அமைந்துள்ளது.

3. குருவின் காரகம் நிறைந்த பிராமணர்களை கொண்டு ஹோம வழிபாடுகள் அனேக சைவ ஆகம கோயில்களில் இன்று அக்னி நகஷத்திர நிவர்த்தி ஹோமங்கள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.

4. அதேப்போன்று சூரியன் மற்றும் செவ்வாய் காரகம் நிறைந்த "தீமிதி திருவிழா" அக்னி சட்டி எடுத்தல் போன்றவையும் நடைபெறுகின்றன.

5. அக்னி பகவான் செவ்வாயின் அதிதேவதையாகும் அக்னி மற்றும் செவ்வாயின் வாகனம் ஆடு. மாரியம்மன் செவ்வாயின் காரகம் நிறைந்த தெய்வமாகும். ரேணுகா தேவி செங்கல் சூளையில் தீயில் விழுந்ததால் மாரியம்மன் என அழைக்கப்படுகிறாள். கணவனை இழந்தவர்களை மாரியம்மன் ஸ்வருபமாக பார்ப்பது மரபு.

ஜோதிடத்தில் விதவை தன்மையை குறிக்கும் கிரகம் செவ்வாய் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மாரியம்மன் கோயில்களில் கிடாவெட்டு எனும் ஆட்டை பலியிடும் நேர்த்திகடனும் நடைபெருகிறது.

6. மேலும் அனேக கோயில்களில் ஆத்மாவை துன்புறுத்தும் விதமாக அலகு குத்துதல் போன்ற நேர்த்தி கடன்களையும் அக்னி பகவானுக்காக நிறைவேற்றி வருகின்றனர்.

7. குருவின் காரகம் நிறைந்த முளைப்பாரி எடுத்தல், மஞ்சள் நீராட்டு போன்ற நேர்த்தி கடன்களும் அக்னி நக்ஷத்திர நிறைவை ஒட்டி செய்துவருகின்றனர்.

8. இதை தவிர நீர்மோர் வழங்குதல், தன்னீர் பந்தல்கள் போன்ற சந்திரன் மற்றும் சுக்கிரன் காரகம் நிறைந்த நேர்த்தி கடன்களை சாத்வீக பக்தர்கள் நிறைவேற்றிவருகின்றனர்.

கிளம்ப தயாராகிவிட்ட அக்னி பகவான் இவற்றையெல்லாம் ஏற்றுக்கொண்டு மகிழ்வடைந்து கடந்த மூன்று நாட்களாக தன் வெம்மையை குறைத்துக்கொண்டு மழைப்பொழிய வழிவகுத்ததால் தமிழ்நாட்டின் அநேக இடங்களில் கடந்த மூன்றுநாட்களாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

பை பை அக்னி பகவான்!
பை பை அக்னி நக்ஷத்திரம்

English summary
The period of Agni Nakshatram marks the onset of summer season and corresponds to the month of Agni Nakshatram Ends on May 28,2017 on Sunday. Thousands of Hindu devotees flock to this place during this period.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X