For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீராத நோய் தீர்த்து ஆரோக்கிய வாழ்வு தரும் ஸ்ரீ தன்வந்திரி பகவான்

ஆரோக்கியம் அருளி நோய் தீர்க்கும் ஸ்ரீதன்வந்திரி பகவானை வழிபட்டால் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மனிதர்களில் நோய்களில் இருந்து காத்து ரட்சித்து ஆரோக்கிய வாழ்வு தரும் ஸ்ரீ தன்வந்திரி பகவான் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்துள்ள கீழ்புதுப்பேட்டையில் எழுந்தருளியிருக்கிறார்.

மக்களைக் காக்கும் பொருட்டு திருமால் எடுத்த 24 அவதாரங்களில் மிக முக்கியமான பத்து அவதாரங்களை தசாவதாரங்கள் என்று போற்றுகிறோம். மத்ஸ்ய, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண மற்றும் கல்கி அவதாரங்கள் தசாவதாரங்களாகும். இவற்றைத் தவிர, தத்தாத்ரேயர், வியாசர், கபிலர், தன்வந்திரி போன்ற வேறு பல அவதாரங்களையும் திருமால் எடுத்துள்ளார்.

ஸ்ரீதன்வந்திரி பகவான் அவதாரம் பற்றி ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீ விஷ்ணுபுராணம் மற்றும் பிரம்மாண்ட புராணத் தில் குறிப்புகள் உள்ளன. திருப்பாற்கடலில் தேவர்களும், அசுரர்களும் அமுதம் கடைந்தபோது கடலில் இருந்து பல்வேறு பொருட்களும், பல தெய்வங்களும் வெளிவந்தன. அப்போது அண்டமே பிரமிக்கும் வண்ணம் ஜோதி ஒன்று எழுந்தது.அந்த ஜோதியில் பிறந்த மகாபுருஷர் தான் தன்வந்திரி. கற்பனைக்கு எட்டாத அழகுடன், திருக்கரங்களில் சங்கு,சக்கரம், அட்டைப்பூச்சி, அமிர்தகலசம் ஆகியவற்றை ஏந்தி நின்றார். அவர் தான் தன்வந்திரி என்ற தெய்வீக மருத்துவர்.

நோய் தீர வழிபடலாம்

நோய் தீர வழிபடலாம்

நோயின்றி வாழ வேண்டும் என்பதே பலரது விருப்பம். பணம், சொத்து இருந்தாலும் அதை அனுபவிக்க ஆரோக்கியமான உடல் வேண்டும். நிம்மதியான மனம் வேண்டும். இப்பூவுலகில் விஷ்ணு எடுத்த அவதாரங்களில் ஒன்றாக கருதப்படும் தன்வந்திரி பகவான்நோய் தீர்க்கும் தெய்வமாக போற்றப்படுகிறார். இவரை வழிபடுவதால் நோய்கள் தீரும்.

மருத்துவ கடவுள்

மருத்துவ கடவுள்

தன்வந்திரி ஆயுர்வேத மருந்துகளின் அதிபதி. மருத்துவக்கலையின் முதல்வரான இவரை வேண்டியே தேவர்கள் அமரவாழ்வைப் பெற்றனர். மனிதர்களுக்கு நோய்நொடிகள் அவரவர் கர்மவினைப்படி வந்துதான் தீரும். இதிலிருந்து நம்மை தன்வந்திரி வழிபாடு ஒன்றே காப்பாற்றவல்லது. இவரை வழிபட்டால் நோய்நொடிகள் நீங்குவதோடு ஆரோக்கியமும் உண்டாகும்.

ரங்கநாதருக்கு வைத்தியம்

ரங்கநாதருக்கு வைத்தியம்

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆலயத்தில் உள்ள தாயார் சன்னிதிக்கு செல்லும் வழியில் தன்வந்திரி பகவான் சன்னிதி உள்ளது. இத்தலத்தில் அருள்பாலிக்கும் அரங்கனுக்கே வைத்தியம் செய்யும் விதமாக, ஸ்ரீமன் நாராயணனே இங்கு தன்வந்திரியாக திகழ்வதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் கோவில்

தமிழகத்தில் கோவில்

கேரளா மாநிலம், ஆலப்புழா மாவட்டம், சேர்த்தலா அருகிலுள்ள மருத்தோர் வட்டம் தன்வந்திரி கோவில் அமைந்திருக்கிறது. உடுப்பி ஆலயத்தில் உள்ள தன்வந்திரியை கடந்த 750 ஆண்டுகளாக வழிபட்டு வருகின்றனர். தமிழகத்தில் தன்வந்திரி பகவானுக்கு தனி ஆலயம் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையில் அமைந்துள்ளது.

ஸ்ரீ தன்வந்திரி பகவான்

ஸ்ரீ தன்வந்திரி பகவான்

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்துள்ள அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில்ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு தனிக்கோயில் உள்ளது. கலி காலத்தில் அழியாமல் இருக்க ஐம்பத்திநான்கு கோடி தன்வந்திரி மஹா மந்திர ஒலிகளுடன் தோன்றிய மகத்தான தலம் என்ற பெருமை இத்தலத்திற்கு உண்டு. இந்த பீடம் ஒளஷத பீடமாக அமைந்து ஸ்ரீ தன்வந்திரி பெருமாள் என்ற பெயருடன் இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இறைவியின் நாமம் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி என்பதாகும்.

ஆரோக்கிய பீடம்

ஆரோக்கிய பீடம்

இங்குள்ள தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் வலம் தரும் வாஸ்து பகவான் முதல் சஞ்சலம் போக்கும் சஞ்சீவிராயர் வரை ஒரே இடத்தில் தனித்தனி சன்னதியில் 75க்கும் மேற்பட்ட பரிவார தெய்வங்களும் இருப்பதும் ஒரு தனி நபராக பீடத்தை நிறுவி இருப்பது தமிழகத்தை ஏன் ஒட்டுமொத்த உலகமே வாலஜாவை திரும்பி பார்ப்பது ஆச்சர்யமே. இங்கு யோகா மற்றும் இயற்கை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையம் உள்ளது.

தினசரியும் யாகம்

தினசரியும் யாகம்

தன்வந்திரியே மூலவராக அருள்பாலிப்பது இத்தலத்தின் சிறப்பாகும். தன்வந்திரி பகவான் சிலை எட்டு அடி உயரம். ஒரே கல்லால் செய்யப்பட்டது. சுமார் இரண்டு டன் எடையுள்ளது. பத்ம பீடத்தில் நின்ற கோலத்தில் அருள் புரிகின்றார். நான்கு திருக்கரங்கள். பகவானின் திருமார்பில் வலது பக்கம் தங்கத்தால் ஆன ஸ்ரீலட்சுமியின் உருவம் இருக்கிறது. சற்றுக் கீழே கஜலட்சுமி தேவி காட்சி தருகிறாள். வலது மேற்கரத்தில் சக்கரம். வலது கீழ்க்கரத்தில் அமிர்த கலசம். இடது மேற்கரத்தில் சங்கு. இடது கீழ்க்கரத்தில் சீந்தல் கொடி. வலது தொடையில் வெள்ளியால் செய்யப்பட்ட அட்டைப் பூச்சி. வெள்ளியால் ஆன ஸ்டெதஸ்கோப்பும், கைக்கடிகாரமும் வைத்து, கத்தியும் இடுப்பில் பெல்ட் அணிந்து தலைமை அலோபதி மருத்துவாகத் தரிசனம் தருகிறார்.

கோவிலுக்கு செல்லும் வழி

கோவிலுக்கு செல்லும் வழி

46 லட்சம் பக்தர்கள் கைபட எழுதிய 54 கோடி தன்வந்திரி மந்திரங்களுடன் நின்ற கோலத்தில் உள்ளார் தன்வந்திரி பகவான். ஷண்மதங்களுக்கு உரிய தலமாகவும் இது விளங்குகிறது. கோவிலுக்கு செல்ல ரயில் மார்க்கமாவும், சாலை மார்க்கமாகவும் செல்லாலாம். ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம் அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை வாலாஜாப்பேட்டை. தொடர்புக்கு - 9443330203. வாலாஜாபேட்டையிலிருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ளது.

English summary
Lord Dhanvantari is believed to be the Vedic God of medicine. He is the family doctor to all Vedic deities. Danvantri Arogya Peedam is a place of healing, of and for the people.Lord Danvantri has been sanctified in the garbagraha on the double-decker structure. A copper pipe, about seven inches diameter, has been placed at the centre of the hole and the 54 crore mantras have been tightly packed around this pipe.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X