For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கண் திருஷ்டி கோளாறுகள் - தேய்பிறை அஷ்டமியில் திருஷ்டி துர்கா ஹோமம்

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் நாளை புதன்கிழமை தேய்பிறை அஷ்டமியில் திருஷ்டி துர்கா ஹோமம் - சூலினி துர்கா ஹோமம் – சொர்ணாகர்ஷண பைரவர் யாகத்துடன் அஷ்ட பைரவர் யாகம் நடைபெறுகிறது.

Google Oneindia Tamil News

வேலூர்: வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் தேய்பிறை அஷ்டமியில் திருஷ்டி துர்கா ஹோமம் - சூலினி துர்கா ஹோமம் – சொர்ணாகர்ஷண பைரவர் யாகத்துடன் அஷ்ட பைரவர் யாகம் நடைபெறுகிறது.

திருஷ்டியின் பிடியில் அகப்பட்டுக் கொண்ட ஒருவருக்கு எதனால் தான் அவஸ்தைப்படுகிறோம் என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் போய் விட்டால், என்னதான் பரிகாரம் செய்தும், நிவர்த்தி கிடைக்காமல் இருப்பது பெரும் சோகமே! இதன் பின், தொட்ட காரியம் எதுவும் துலங்காது. பணத்துக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு விடும். வாழ்க்கை முழுக்க அவஸ்தைகள்தான் அடுத்தடுத்து தொடர்ந்து கொண்டே இருக்கும். இதனைப் போக்க தேய்பிறை அஷ்டமியில் திருஷ்டி துர்கா ஹோமம்சூலினி துர்கா ஹோமம் நடத்தப்படுகிறது.

Theipirai ashtami homam at dhanvanthiri peedam

இன்றைக்கு வியாதி, பணப் பிரச்னை, வேலை இல்லாமல் இருப்பது, கணவன் - மனைவிக்குள் பிரச்னை, சொத்துப் பிரச்னை, நேர்மையாகக் கிடைக்க வேண்டியது கிடைக்காமல் இருப்பது, குடும்பத்துக்குள் தகராறு போன்ற பல பிரச்னைகளுக்குத் திருஷ்டியும் ஒரு மாபெரும் காரணமாக இருந்து வருவது பலருக்கும் தெரியாமலேயே இருக்கிறது.

பிறரது மோசமான கண் பார்வை உங்கள் மீது விழுந்து விட்டால், அந்த திருஷ்டியை உடன் களைவதுதான் முக்கியம். ஒருவருக்குக் கண் திருஷ்டி என்பது இருக்கவே கூடாது. திருஷ்டி என்பது மற்றவர்களின் தீய எண்ணங்களாலும் பொறாமைத்தன்மையாலும் சம்பந்தப்பட்டவருக்கு ஏற்படும் பாதிப்பே ஆகும். 'த்ருஷ்’ என்றால் பார்த்தல் என்று பொருள். ஒருவரது அசுரத்தனமான வளர்ச்சியைக் கண்டு அவரைச் சுற்றி இருப்பவர்கள் பார்த்துப் பொறாமைப்பட்டால், அது சம்பந்தப்பட்டவரைப் பாதிக்கும். இதனால், தீய விளைவுகளே ஏற்படும்.

திருஷ்டியை விஞ்ஞானபூர்வமாகவும் நிரூபித்துள்ளார்கள். ஒருவரிடம் இருந்து புறப்பட்டு வரும் எண்ண அலைகள் மற்றவரின் சிந்தனைகளில் இயல்பு முறையில் அன்றாட நடவடிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தினால் அதுவே திருஷ்டி எனப்படும்.

எனவே, பார்ப்பவர்களுடைய ஒட்டுமொத்த சிந்தனையும் கவனமும் வேறு எதிலாவது படும்படி ஒரு பொருளை வீட்டிலோ, அலுவலகத்திலோ, தொழிற்சாலையிலோ வைத்து விட்டால், பார்ப்பவர்களின் கவனம் முழுக்க அங்கே செல்லும். இதனால் திருஷ்டியின் பாதிப்பு ஓரளவு குறைய வாய்ப்பு உண்டு.

திருஷ்டியின் பாதிப்புகளை கருத்தில் கொண்டு வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் புதன்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை 'திருஷ்டி துர்கா ஹோமத்துடன் சூலினி துர்கா ஹோமம் மற்றும் சொர்ணாகர்ஷண பைரவர் யாகம் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் தலைமையில் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து மாலை 5.00 மணியளவில் அஷ்ட பைரவர் யாகமும், மஹா அபிஷேகமும் நடைபெறுகிறது. இந்த 'திருஷ்டி துர்கா ஹோமத்தில்’ 108 பூசணிக்காய்களை ஹோம குண்டத்தில் சமர்ப்பித்து, பலருக்கும் உள்ள திருஷ்டியைக் களையும் வண்ணம் பிரமாண்ட அளவில் ஹோமம் நடைபெற இருக்கிறது.

இந்த திருஷ்டி துர்கா ஹோமத்துக்காக ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள 12 அடி ஆழமுள்ள பிரமாண்டமான யாக குண்டம் பயன்படுத்தப்பட இருக்கிறது. இதில் 108 பூசணிக்காய்கள் தவிர அக்னியில் ஆஹுதியாகச் சமர்ப்பிக்கப்படும் பல திரவியங்களும் 108 என்கிற எண்ணிக்கையில் அமைய இருக்கின்றன என்பது விசேஷம்.

பொதுவாக துர்கா ஹோமம் - பில்லி, சூன்யம், செய்வினை, பொறாமை போன்றவற்றை அகற்றுவதற்கும், கோபத்தைக் குறைப்பதற்கும், ஜாதக ரீதியிலான தோஷங்களைக் களைவதற்கும், கிரகப் பெயர்ச்சியால் ஏற்படும் தோஷங்களுக்குப் பரிகாரமாகவும், மாத்ரு - பித்ரு தோஷம் அகலுவதற்கும், கெட்ட சகவாசங்கள் நம்மை விட்டு நீங்குவதற்கும், விஷ ஜந்துக்கள் நம்மைத் தாக்காமல் இருப்பதற்கும், திருஷ்டி தோஷத்தில் இருந்து மீள்வதற்கும் செய்யப்படுகிறது.

இந்த துர்கா ஹோமத்தில் சூலினி துர்கா ஹோமமும் இடம்பெறுகிறது. தவிர ராகு-கேது பரிகாரங்கள், சனி சாந்தி போன்றவற்றிற்கு இதே ஹோமத்தில் சங்கல்பம் செய்யப்படுகிறது தொடர்புக்கு : ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை. வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

English summary
A special pooja for Bairavar with Ashtami yaagam conducted on October 30, 2018, Peedam founder Kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X