For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பங்குனி தேய்பிறை அஷ்டமி : நவக்கிரக தோஷம் நீக்கும் நவபைரவர் யாகம்

12 ராசிகாரர்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்கவும், நினைத்த காரியங்கள் விரைவில் தடையில்லாமல் நிறைவேறவும், தொழில் ரீதியாக வெளிநாடு சென்று வாழும் பக்தர்களுக்கு ஏற்படும் தடைகள் நீங்கவும் தேய்பிறை அஷ்டமியில்

Google Oneindia Tamil News

வேலூர்: வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 28.03.2019 வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சொர்ண பைரவர் யாகமும் தொடர்ந்து மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை தச பைரவர் யாகத்துடன் பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள அஷ்ட பைரவர் சகித மஹா காலபைரவருக்கு அபிஷேகமும் சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது.

சிவபெருமானைப் போலவே பைரவருக்கும் 64 வடிவங்கள் உண்டு அவற்றில் ஒன்றுதான் கால பைரவர் அம்சம். காலத்தை வென்றவர், கால சக்கரத்தை இயக்குபவர் இந்த கால பைரவர். இவரது உடலில் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும், 9 கோள்களும் அமைந்திருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. இவரது மூச்சுக் காற்றில் இருந்து தான் திருவாக்கியம் மற்றும் திருக்கணிதம் ஆகிய பஞ்சாங்கங்கள் உண்டானதாக கூறப்படுகிறது. இவற்றில் இருந்து மற்ற காலக் கணித முறைகள் தோன்றியதாம்.

Theipirai Ashtami nava bhairavar Homam Pooja

கால பைரவர் மற்ற பைரவர்களைக் காட்டிலும் உக்கிரமானவர். ஆனால் தன்னை நம்பியவர்களை கண்ணின் இமைபோல் காப்பவர். இவரே சிவ ஆலயங்களின் காவல் தெய்வம். இவரின் அருள் இன்றி சிவ வழிபாடு முழுமை பெறாது. சிவவழிபாட்டில் முன்னேற்றம் காண கால பைரவரின் அருள் மிகவும் அவசியம் ஆகும்.

இந்தியாவில் பல இடங்களில் பைரவருக்கென்று பல்வேறு பெயர்களில் திருச்சன்னதிகள் உண்டு. குறிப்பாக சில இடங்களில் பைரவருக்கென்று தனி ஆலயமும் உள்ளது. கால பைரவர் என்றால் நமக்கு நினைவிற்கு வரும் கோவில் காசியில் அமைந்துள்ள தக்ஷிண கால பைரவர் கோவில் பைரவர் தான் அனைவரின் மனதிலும் முதல் இடத்தில் உள்ளது. அடுத்ததாக தச பைரவர் என்றால் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடம் பக்தர்கள் அனைவரும் மனதிலும் மிகக் குறுகிய காலத்தில் இடம்பெற்றுள்ளது என்றும் கூறலாம்.

இப்பீடத்தில் உள்ள தசபைரவரை தரிசிக்கவும், இங்கு நடைபெறும் யாகங்களில் பங்கேற்கவும் உள்ளூர் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். இப்பீடத்தில் சென்ற ஆண்டு 74 பைரவருக்காக 74 யாககுண்டங்கள் அமைத்து, 74 சிவாச்சார்யர்கள் அமர்ந்து நடைபெற்ற யாகத்தில் பல்லாயிர கணக்கான மக்கள் பங்கேற்று பயன் பெற்றனர் என்று அனைவரும் அறிந்ததே. மேலும் அவ்வப்பொழுது 64 பைரவர் யாகம், அஷ்ட பைரவர் யாகம், தச பைரவர் யாகம், என்ற வரிசையில் யாகங்கள் நடைபெற்று வருகின்றன. ஆதியும் அந்தமுமான இவரை பல்வேறு மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

இந்த 64 பைரவர்களில் அஷ்ட பைரவர்கள் மிகவும் முக்கியத்துவம் பெருகின்றனர். இப்பீடத்தில் அஷ்டகாலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அன்று நடைபெறும் யாகம் மிகவிமர்சையாகவும் விழாவாகவே கொண்டாடப்படுகிறது. காலை சொர்ண கால பைரவருக்கும், மாலை அஷ்ட பைரவர்களுக்கும், மஹா காலபைரவருக்கும் யாகங்கள், அபிஷேகங்கள் நடைபெறு வருகின்றன. அந்த வகையில் வருகிற 28.03.2019 வியாழக்கிழமை காலை சொர்ண பைரவருக்கும், மாலை அஷ்ட பைரவர் சகித மஹா கால பைரவருக்கும் அஷ்டமி யாகத்துடன் அபிஷேகங்களும், 1008 அர்ச்சனையும், சதுர் வேதபாராயணமும், உபசார பூஜைகளுடன் மஹா மங்கள ஆரத்தியும் நடைபெற உள்ளது.

இப்பூஜைகள் 12 ராசிகாரர்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்கவும், நினைத்த காரியங்கள் விரைவில் தடையில்லாமல் நிறைவேறவும், தொழில் ரீதியாக வெளிநாடு சென்று வாழும் பக்தர்களுக்கு ஏற்படும் தடைகள் நீங்கவும், வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி பெறவும், நவக்கிரகங்களால் ஏற்படும் சோதனைகள் அகலவும், போன்ற பல்வேறு காரணங்களுக்காக நடைபெறுகிறது.

இதில் பங்கேற்க விரும்பவர்கள் பூசணிக்காய், சிவப்பு அரளி, உலர் திரட்சை பழங்கள், மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், நெய், மிளகு, நல்லெண்ணை, எலுமிச்சம் பழம், பழங்கள், மாதுளம் பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள், மளிகை பொருட்கள் கொடுத்து பங்கேற்கலாம்.

தொடர்புக்கு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513. வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

English summary
Theipirai Ashtami day, is the most auspicious day dedicated to Lord Kala Bhairava. Lord kala Bhairava is a manifestation of Lord Shiva. Ashtami after Poornima, the eighth day after full moon, is considered the ideal day to propitiate Kala Bhairava.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X