For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாவங்கள் தீர எதிரிகள் தொல்லை ஒழிய பகவதாஷ்டமி விரதம் இருங்க

மனிதர்களை அதிகம் பாதிப்பது கடன் தொல்லையும் எதிரிகள் பிரச்சினையும்தான். பைரவரை நினைத்து விரதம் இருந்தால் பாவங்கள் தீரும் கடன் பிரச்சினை நீங்கும் எதிரிகள் தொல்லை ஒழியும். சனிக்கிழமையில் பைரவரை வழிபட்டால

Google Oneindia Tamil News

சென்னை: தேய்பிறை அஷ்டமி விரதம் இருந்தால் நம் கடன் பிரச்சினை தீரும். சனிக்கிழமையன்று தேய்பிறை வருகிறது. இது பகவாதாஷ்டமியாக கடைபிடிக்கப்படுகிறது. சனி பகவானுடைய குரு பைரவர். சனிக்கிழமையில் வரும் தேய்பிறை அஷ்டமியில் வழிபடுவதால் அஷ்டமச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டமச்சனி ஆகியவற்றின் தாக்கத்திலிருந்து விடுபட்டு நன்மைகளை அடையலாம்.

ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு ஒரு பெயர் உள்ளது. சித்திரை மாதம் சனாதன அஷ்டமி, வைகாசி மாதம் சதாசிவாஷ்டமி, ஆனி மாதம் பகவதாஷ்டமி, ஆடி மாதம் நீலகண்டாஷ்டமி, ஆவணி மாதம் சிவா அஷ்டமி, புரட்டாசி மாதம் சம்பு அஷ்டமி, ஐப்பசி மாதம் ஈஸ்வராஷ்டமி, கார்த்திகை மாதம் ருத்ராஷ்டமி,காலபைரவாஷ்டமி, மார்கழி மாதம் சங்கராஷ்டமி, தை மாதம் தேவ தேவாஷ்டமி, மாசி மாதம் மகேஸ்வராஷ்டமி, பங்குனி மாதம் திரியம்பகாஷ்டமி என்று அழைக்கப்படுகின்றன.

Theipirai ashtami viratham pooja on June 13th 2020

வைகாசி மாதம் முதல் நாளிலேயே சதாசிவாஷ்டமி கடைபிடிக்கப்பட்டு விட்டது என்பதால் வரும் சனிக்கிழமையன்று வரும் தேய்பிறை அஷ்டமி பகவதாஷ்டமியாக கடைபிடிக்கப்படுகிறது.

பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர் என்று பொருள். எவரொருவர் தேய்பிறை அஷ்டமி தோறும் பைரவ பகவானை வழிபடுகிறார்களோ அவர்களுக்கு எதிரிகளே இருக்கமாட்டார்கள். பில்லி, சூனியம் அகலும். வழக்குகளில் வெற்றி பெறலாம் என்பது ஐதீகம்.
செந்நிற மலர்கள், அரளி மாலை கொண்டு பைரவருக்கு அணிவித்து பிரார்த்தனை செய்ய வேண்டும். வெண் பொங்கல் நைவேத்தியம் செய்தால் கடன் தொல்லைகள் தீரும். எதிர்ப்புகள் அகலும். தீய சக்திகள் அண்டாது. வடைமாலை சார்த்தி வணங்குவார்கள் பக்தர்கள். மிளகு வடை நைவேத்தியம் செய்து வழிபடுங்கள்.

பக்தனுக்கு உதவிய திருப்பதி ஏழுமலையான் - மண்வெட்டியால் அடித்த பக்தன்பக்தனுக்கு உதவிய திருப்பதி ஏழுமலையான் - மண்வெட்டியால் அடித்த பக்தன்

சனி பகவனால் ஏற்படும் தோஷங்கள் நீங்கவும் ஏழரை சனி அஷ்டம சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனி தோஷம் நீங்க கால பைரவரை வணங்கலாம். தேய்பிறை அஷ்டமியில் விரதம் இருந்து பைரவரை வழிபட்டால் திருமணத் தடை நீங்கும். பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். எம பயம் அகலும். பைரவரை வழிபாடு செய்வதால் வறுமை, பகைவர்களின் தொல்லைகள் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும்.

English summary
Kalashtami or Kala Ashtami Theipirai astami is a ritual observed by the Devotees of Lord Bhairav during Ashtami Tithi of Krishna Paksha on every month.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X