For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேய்பிறை அஷ்டமியில் சொர்ணாகர்ஷன பைரவரை வணங்கினால் செல்வம் பெருகும்

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் 02.10.2018 செவ்வாய்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பணம் தரும் பைரவர் யாகத்துடன் அஷ்ட மாத்ருகா பூஜை - அஷ்ட பைரவர் யாகம் நடைபெறுகிறது.

Google Oneindia Tamil News

வேலூர்: வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி 02.10.2018 செவ்வாய்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் சொர்ண கமல மஹாலக்ஷ்மி அருள் பெற பணம் தரும் பைரவர் யாகமும் மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை எண் திசை காக்கும் அஷ்ட பைரவர் யாகத்துடன் அஷ்ட மாத்ருகா பூஜை நடைபெறுகிறது.

சிவபெருமான் எடுத்த 64 அவதாரங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவ அம்சமே. ஸ்ரீ மஹா கால பைரவ பெருமான் அனைவரது வாழ்க்கைக்கும் துணை நின்றார். அவரை வந்து வணங்கும் அனைத்து பக்தர்களுக்கும் சகல விதமான வெற்றிக்கும் வாழ்க்கைக்கும் வழியமைத்து கொடுத்து ஆசிர்வதிப்பார்.

Theipirai astamai sri danvantri arokya peedam asta bairava yagam

அஷ்ட மாத்ருகா தேவியர்கள்:

பிரம்மனிடம் தேவர்களால் மரணமில்லா நிலையும், அமிர்த பலத்தையும், பிரம்ம தண்டத்தையும் பெற்று எல்லோரையும் துன்புறுத்திய மகிஷாசுரனை அழிக்க பராசக்தி தன் உடலிருந்து மஹேஸ்வரி-காமத்தை அழிக்கும் சிவன் அம்சம், வைஷ்ணவி-லோபத்தை அழிக்கும் விஷ்ணு அம்சம், ப்ராஹ்மீ-மதத்தை அழிக்கும் பிரம்ம அம்சம், கௌமாரி-மோகத்தை அழிக்கும் முருகன் அம்சம், இந்த்ராணி-மாச்சர்யத்தை அழிக்கும் இந்திரன் அம்சம், வராஹி-அசூயை குணத்தை அழிக்கும் விஷ்ணு அம்சம் ஆகிய அறுவர் தோன்றினர். மேலும் ஈசன் தன் நெற்றியிலிருந்து பத்ரகாளியைத் தோற்றுவித்தார். பார்வதி அவரை உருமாறக் கேட்க குரோதத்தை அழிக்கும் சிவன் அம்சமாக (சாமுண்டா-) தோன்றி அருள் பெற்று மற்ற அறுவருக்கும் முதல்வியாய் பெறுப்பேற்று போரிட்டாள். துர்க்கமன் என்ற அசுரனை கொன்றதால் துர்க்கை எனப் பெயர் பெற்றாள். மேற்கண்ட அஷ்ட மாத்ருகளுக்கு வருகிற தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.

அஷ்ட பைரவர்கள்:

மஹா பைரவர் எட்டு திசைகளை காக்கும் பொருட்டு அஷ்ட(எட்டு) பைரவர்களாகவும், அறுபத்து நான்கு யோகங்களையும் கலைகளையும் வழங்கும் பொருட்டு அறுபத்து நான்கு பைரவர்களாகவும் விளங்குகிறார்கள்.

அஷ்ட(எட்டு) பைரவர்கள்:

திசைக்கொன்றென விளங்கும் எட்டு பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சில கோவில்களில் பைரவிகளுடன் இணைந்து தம்பதி சகிதமாகவும் இந்த பைரவர்கள் காட்சிதருகிறார்கள்.

அசிதாங்க பைரவர்: அசிதாங்க பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர் ஆவார். இப்பைரவர் காசி மாநகரில் விருத்தகாலர் கோவிலில் அருள்செய்கிறார். அன்ன பறவையினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் குருவின் கிரக தோஷத்திற்காக அசிதாங்க பைரவரை வணங்குவது உத்தமம். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான பிராம்ஹி விளங்குகிறாள்.

ருரு பைரவர்:

ருரு பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் இரண்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார். ரிஷபத்தினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சுக்கிரனின் கிரக தோஷ நிவர்த்திற்காக இந்த பைரவரை வணங்குவது உத்தமம். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான மகேஸ்வரி விளங்குகிறாள்.

Theipirai astamai sri danvantri arokya peedam asta bairava yagam

சண்ட பைரவர்:

சண்ட பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் மூன்றாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் துர்க்கை கோவிலில் அருள்செய்கிறார். மயிலை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் செவ்வாய் கிரக தோஷ நிவர்த்திக்காக இந்த பைரவரை வணங்குவது உத்தமம். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான கௌமாரி விளங்குகிறாள்.

குரோதன பைரவர்:

குரோதனபைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் நான்காவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார். கருடனை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சனி கிரஹ தோஷ நிவர்த்திக்காக இந்த பைரவரை வணங்குவது உத்தமம். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான வைஷ்ணவி விளங்குகிறாள்.

உன்மத்த பைரவர்:

உன்மத்த பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஐந்தாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பீம சண்டி கோவிலில் அருள்செய்கிறார். குதிரையை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் புதன் கிரக தோஷ நிவர்த்திக்காக இந்த பைரவரை வணங்குவது உத்தமம். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான வராகி விளங்குகிறாள்.

கபால பைரவர்:

அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஆறாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் லாட் பசார் கோவிலில் அருள்செய்கிறார். புறாவை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சந்திர கிரக தோஷ நிவர்த்திற்காக இந்த பைரவரை வணங்குவது உத்தமம். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான இந்திராணி விளங்குகிறாள்.

பீஷண பைரவர்:

அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஏழாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பூத பைரவ கோவிலில் அருள்செய்கிறார். சிங்கத்தை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் கேது கிரக தோஷ நிவர்த்திற்காக இந்த பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான சாமுண்டி விளங்குகிறாள்.

சம்ஹார பைரவர்:

சம்ஹார பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் எட்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் த்ரிலோசன சங்கம் கோவிலில் அருள்செய்கிறார். நாயை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் ராகு கிரக தோஷ நிவர்த்திற்காக இந்த பைரவரை வணங்குவது உத்தமம். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான சண்டிகை விளங்குகிறாள்.

எண் திசை காக்கும் அஷ்ட பைரவர் யாகத்தின் சிறப்பு :

எட்டு திசைகளை காத்து, நம்மை வழி நடத்தும் மாபெரும் காவல் தெய்வம் தான் கால பைரவராகும். தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அஷ்ட பைரவர்களையும் பூஜித்து யாகத்தில் கலந்து கொண்டால் தொல்லைகள் அகலும் மற்றவர் செய்த ஏவல், பில்லி, சூனியம் போன்ற அபிசார தோஷங்கள் விலகும், மருத்துவர்களை தோல்வியுறச் செய்யும் கர்ம வியாதிகளில் இருந்து விடுபடும், அஷ்ட தரித்திரம் நம்மை விட்டு விலகி பெருஞ்செல்வம் சேர்ந்திடும், தங்கம் நம்மோடு எந்நாளும் தங்கியிருக்கும், வம்பு வழக்குகளில் வெற்றி கிட்டும், பொறாமை, கண்திருஷ்டி அகன்று சுகம் பெற்றிடலாம், தொட்டது துலங்கும், எதிரிகளும், தடைகளும் மறைந்து எதிலும் வெற்றி பெற்றிட வாய்ப்பு கிடைக்கும், இத்தகைய சிறப்பு வாய்ந்த அஷ்ட திக்கும் காக்கும் அஷ்ட பைரவர் யாகத்தில் கலந்து கொண்டு பைரவரை துதிப்பது மிகவும் அவசியமாகும்.

Theipirai astamai sri danvantri arokya peedam asta bairava yagam

பணம் தரும் பைரவர் எனும் ஸ்ரீ மஹா சொர்ணாகர்ஷன பைரவர் ஹோமத்தின் சிறப்பு :

ஸ்ரீசொர்ணகால பைரவரை வழிபடுவதினால் பலன் வாஸ்து பகவானுக்கு குரு என்பதால் நிலம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் விலகும். சனி பகவானுக்கு குரு என்பதால் சனி பகவான் தொல்லையிலிருந்து விடுபடலாம். திருமணத்தடை, பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வர். பில்லி சூனியம் விலகும். வியாபார அபிவிருத்தி, வீட்டில் சண்டை சச்சரவுகள் விலகும். பூர்வீக தோஷம் அனைத்தும் நிவர்த்தி ஆகும். முன்னோர்களின் சாபமும், பெற்றோர்களின் பாவமும், பிறப்பின் கர்ம வினைகள் அகலும். குழந்தைகள் நன்றாக படிப்பர். கடன் பிரச்சினை விலகும். மனநிலை பாதிப்பு விலகும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். மனதுக்கு நிம்மதி கிடைக்கும். அஷ்ட தரித்திரம் விலகும். பிள்ளைப்பேறு உண்டாகும். வழக்குகளில் வெற்றி பெறலாம். வியாபாரத்தில் லாபம் அடையலாம். இழந்த பொருட்களை திரும்ப பெறலாம். சிறந்த குருநாதர் அல்லது சித்தர் அருள் தானாகவே கிடைக்கும்.

தன்வந்திரி பீடத்தில் சொர்ண ஆகர்ஷண பைரவர் அமைப்பு :

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் அமைந்துள்ளவாறு ஸ்ரீசொர்ணகால பைரவருக்கு தனி பைரவர் பீடம், அஷ்ட பைரவர், கால பைரவருடன் வேறு எங்கும் இதுபோன்று கிடையாது எனலாம். முன்பு வடுக பைரவரே கால பைரவர் ஆகி அவரே அஷ்ட பைரவரும் ஆகி பின்பு அஷ்டாஷ்ட பைரவர் ஆகி அசுரர்களை அழித்து நான்முகனின் ஐந்தாவது தலையை கிள்ளி அதனால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டு அங்குமிங்கும் காடு மேடும் அலைந்து கடைசியில் காசியில் விலகிய பின் சாந்தம் அடைந்த பைரவரே சொர்ணகால பைரவர் ஆவார். ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சொர்ணாகர்ஷண பைரவர், சொர்ண கவசத்துடன் பொன் நிறமாக சர்வானந்த கோலாகலராக கற்பக விருட்சத்தின் மேல் கங்கா ஜடா முடியுடன், சந்திர பிரபை சூடி, திருக்கழுத்தில் நாகபரணம் அணிந்து திருக்கரங்களில் சங்க நிதி பத்ம நிதியுடனும் மடியில் பூரண கும்பத்துடன் பத்ர பீடத்தில் அமர்ந்திருக்க அதன் பின்னே சொர்ண பைரவி ஸ்ரீமஹா சொர்ணகால பைரவப் பெருமானின் அருகில் வந்து அமர்ந்து ஒரு திருக்கரத்தால் ஸ்ரீமஹா சொர்ணகால பைரவப் பெருமானின் இடையை தழுவியவாறு மற்றொரு திருக்கரத்தில் சொர்ண கும்பத்துடன் அருகில் வந்து அமர்ந்து புன்னகை தவழும் திருமுகத்துடன் உலகிற்கு பொன்னையும் பொருளையும் அள்ளித்தரும் கோலத்துடன் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் திருக்கோலம் கொண்டு தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் மனதில் உதித்தபடி பிரதிஷ்டை ஆகி உள்ளார். வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுபேட்டை எனும் குபேரபுரியில் உறைந்து உலக மக்களுக்கு அருள்மழை பொழிந்துக் கொண்டிருக்கிறார்கள்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த சொர்ணாகர்ஷண பைரவருக்கு வரும் தேய்பிறை அஷ்டமியில் காலையில் நடைபெறும் சொர்ண பைரவர் யாகத்தில் கலந்து கொண்டால் சொர்ணாம்பிகை சமேத சொர்ண பைரவர் அருள் கிடைக்கும்.

இதில் பங்கேற்க விரும்பவர்கள் பூசணிக்காய், சிவப்பு அரளி, உலர் திரட்சை பழங்கள், மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், நெய், மிளகு, நல்லெண்ணை, எளுமிச்சம் பழம், பழங்கள், மாதுளம் பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள், மளிகை பொருட்கள் கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்று தன்வந்திரி பகவான், அஷ்ட பைரவர்கள் மற்றும் சொர்ண கால பைரவர் அருள் பெற்று நீண்ட ஆயுள், நிலையான செல்வம் பெறலாம்.

English summary
Theipirai astamai sri danvantri arokya peedam asta bairava yagam on october 2nd,2018.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X