For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மஹா காலபைரவருக்கு தசபைரவர் யாகம் - தேய்பிறை அஷ்டமியில் தரிசனம் பண்ணுங்க

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு இன்று மாலை 5.00 மணி முதல் 7.30 மணி வரை ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத சொர்ணாகர்ஷண பைரவர், அஷ்ட பைரவர் சகித மஹா காலபைரவருக்கு தசபைரவர் யாகத்துடன் பஞ்ச திரவியாபிஷேகமும், விசேஷ அர்ச்

Google Oneindia Tamil News

வேலூர் : பைரவ பூஜை மகத்தானது. மகிமை வாய்ந்தது. பெரிய பதவிகளையும் புகழையும் அளிக்கவல்லது. செவ்வரளி அல்லது சிவப்பு நிற பூக்களினால் ஞாயிற்றுக்கிழமை ராகு காலங்களில் பைரவரை ஆராதனை செய்வதும் பைரவருக்குப் பிடித்த கோதுமை பாயசம் படைத்து, வினியோகம் செய்வதும், இழந்த பொருளை மீட்டுத்தரும் என்று அகத்தியர் நாடி கூறுகிறது. தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவரை வணங்க கவலைகள் நீங்கி சந்தோஷங்கள் அதிகரிக்கும்.

பைரவர், சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவர் என்று புராண கதைகள் கூறுகின்றன. இவர் காவல் தெய்வம் என்பதால் பைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது. வெண்நிற மேனியுடன், கையில் அட்சய பாத்திரத்துடன், பக்தர்களுக்கு செலவத்தை அளிக்கும் விதமாக காட்சி கொடுப்பவர் சொர்ணாகர்ஷண பைரவர். செல்வத்தை அளிப்பதால் இவரை சொர்ண பைரவர் என்றும் பணம் தரும் பைரவர் என்றும் அழைக்கப்படுகிறது. இவரை வணங்கி வழிபடும் பக்தர்களுக்கு செல்வத்தையும், புகழையும் அளித்து வளமுடன் வாழ வழிகாட்டுபவர்.

Theipirai astamai sri danvantri arokya peedam Dhasa bairava Yagam

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு இன்று மாலை 5.00 மணி முதல் 7.30 மணி வரை ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத சொர்ணாகர்ஷண பைரவர், அஷ்ட பைரவர் சகித மஹா காலபைரவருக்கு தசபைரவர் யாகத்துடன் பஞ்ச திரவியாபிஷேகமும், விசேஷ அர்ச்சனையும் நடைபெற உள்ளது.

குரு பெயர்ச்சி 2019: தனுசுவில் ஆட்சி பெற்று அமரும் குருபகவான் - 12 ராசிக்கும் பலன்கள்குரு பெயர்ச்சி 2019: தனுசுவில் ஆட்சி பெற்று அமரும் குருபகவான் - 12 ராசிக்கும் பலன்கள்

எட்டு திக்குகளையும் காப்பதிற்கு மஹாபைரவர் எடுத்த அவதாமே அஷ்ட பைரவர்கள் ஆவார். இவர்கள் அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீக்ஷன பைரவர், சம்ஹார பைரவர் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார்கள்.

Theipirai astamai sri danvantri arokya peedam Dhasa bairava Yagam

இவர் காலத்தையும், கால மாற்றங்களைடும் கட்டுபடுத்த கூடியவர். நவக்கிரகங்களில் சனி பகவானின் குருவானவர். நவக்கிரகங்களை கட்டுப்படுத்தி காலத்தை தீர்மானம் செய்பவர். இவர் கபால மாலைகள் அணிந்து, நாய் வாகனத்துடன், நிர்வாண கோலத்தில் காட்சி தருபவர். பக்தர்களின் பயத்தினை போக்குவதினால் இவரை பைரவர் என்றும், க்ஷேத்திரங்களை காப்பதினால் க்ஷேத்திர பாலகர் என்றும், நிர்வாண கோலத்தில் காட்சி தருவதினால் நிர்வாணி என்றும், பிரம்மசிரேச்சிதர், உக்ர பைரவர், வடுகர், சட்டைநாதர், கஞ்சுகன், கரிமுக்தன், சித்தன், கபாலி, வாதுகன், வயிரவன் போன்ற பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

Theipirai astamai sri danvantri arokya peedam Dhasa bairava Yagam

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த தச பைரவர்களை வேண்டி நடைபெறும் இந்த யாகத்திலும், அபிஷேகத்திலும், விசேஷ ஆராதனைகளிலும் பக்தர்கள் அனைவரும் பங்கு பெறலாம். ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513. வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

English summary
Theipirai astami Dasha bairava yagam at Sri Dhanvantri peedam at Walajapet in Vellor district on October21,2019.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X