• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆபத்தில் இருந்து காக்கும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு - மரண பயம் நீங்கும் அஷ்டபைரவ யாகம்

|

வேலூர்: சிவபெருமான் எடுத்த 64 அவதாரங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவ அம்சமே. ஸ்ரீ மஹா கால பைரவ பெருமான் அனைவரது வாழ்க்கைக்கும் துணை நின்றார். அவரை வந்து வணங்கும் அனைத்து பக்தர்களுக்கும் சகல விதமான வெற்றிக்கும் வாழ்க்கைக்கும் வழியமைத்து கொடுத்து ஆசிர்வதிப்பார்.

அஷ்டமி வழிபாடு ஆபத்திலிருந்து காக்கும் வழிபாடு ஆகும். அஷ்டமி வழிபாடு பைரவருக்கு இஷ்டமானது. அதிலும் தேய்பிறை அஷ்டமி என்பது மரண பயத்தை நீக்கும் அற்புதமான வழிபாடு. எட்டு தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவ வழிபாடு செய்தால் எந்தத் துன்பமானாலும் விலகி வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும் என்பது ஆன்றோர்கள் வாக்கு.

Theipirai astamai sri danvantri arokya peedam Kalabairav yagam

நாளைய தினம் சனிக்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை மஹாலக்ஷ்மி அருள் பெற பணம் தரும் பைரவர் யாகமும் எண் திசை காக்கும் அஷ்ட பைரவர் யாகங்கள் நடைபெறுகிறது.

அஷ்ட பைரவர்கள்: மஹா பைரவர் எட்டு திசைகளை காக்கும் பொருட்டு அஷ்ட(எட்டு) பைரவர்களாகவும், அறுபத்து நான்கு யோகங்களையும் கலைகளையும் வழங்கும் பொருட்டு அறுபத்து நான்கு பைரவர்களாகவும் விளங்குகிறார்கள்.

அஷ்ட(எட்டு) பைரவர்கள்: திசைக்கொன்றென விளங்கும் எட்டு பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சில கோவில்களில் பைரவிகளுடன் இணைந்து தம்பதி சகிதமாகவும் இந்த பைரவர்கள் காட்சிதருகிறார்கள். எண் திசை காக்கும் அஷ்ட பைரவர் யாகத்தின் சிறப்பு : எட்டு திசைகளை காத்து, நம்மை வழி நடத்தும் மாபெரும் காவல் தெய்வம் தான் கால பைரவராகும்.

Theipirai astamai sri danvantri arokya peedam Kalabairav yagam

தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அஷ்ட பைரவர்களையும் பூஜித்து யாகத்தில் கலந்து கொண்டால் தொல்லைகள் அகலும் மற்றவர் செய்த ஏவல், பில்லி, சூனியம் போன்ற அபிசார தோஷங்கள் விலகும், மருத்துவர்களை தோல்வியுறச் செய்யும் கர்ம வியாதிகளில் இருந்து விடுபடும், அஷ்ட தரித்திரம் நம்மை விட்டு விலகி பெருஞ்செல்வம் சேர்ந்திடும், தங்கம் நம்மோடு எந்நாளும் தங்கியிருக்கும், வம்பு வழக்குகளில் வெற்றி கிட்டும், பொறாமை, கண்திருஷ்டி அகன்று சுகம் பெற்றிடலாம், தொட்டது துலங்கும், எதிரிகளும், தடைகளும் மறைந்து எதிலும் வெற்றி பெற்றிட வாய்ப்பு கிடைக்கும், இத்தகைய சிறப்பு வாய்ந்த அஷ்ட திக்கும் காக்கும் அஷ்ட பைரவர் யாகத்தில் கலந்து கொண்டு பைரவரை துதிப்பது மிகவும் அவசியமாகும்.

பணம் தரும் பைரவர் எனும் ஸ்ரீ மஹா சொர்ணாகர்ஷன பைரவர் ஹோமத்தின் சிறப்பு: ஸ்ரீசொர்ணகால பைரவரை வழிபடுவதினால் பலன் வாஸ்து பகவானுக்கு குரு என்பதால் நிலம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் விலகும். சனி பகவானுக்கு குரு என்பதால் சனி பகவான் தொல்லையிலிருந்து விடுபடலாம். திருமணத்தடை, பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வர். பில்லி சூனியம் விலகும். வியாபார அபிவிருத்தி, வீட்டில் சண்டை சச்சரவுகள் விலகும். பூர்வீக தோஷம் அனைத்தும் நிவர்த்தி ஆகும்.

Theipirai astamai sri danvantri arokya peedam Kalabairav yagam

முன்னோர்களின் சாபமும், பெற்றோர்களின் பாவமும், பிறப்பின் கர்ம வினைகள் அகலும். குழந்தைகள் நன்றாக படிப்பர். கடன் பிரச்சினை விலகும். மனநிலை பாதிப்பு விலகும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். மனதுக்கு நிம்மதி கிடைக்கும். அஷ்ட தரித்திரம் விலகும். பிள்ளைப்பேறு உண்டாகும். வழக்குகளில் வெற்றி பெறலாம். வியாபாரத்தில் லாபம் அடையலாம். இழந்த பொருட்களை திரும்ப பெறலாம். சிறந்த குருநாதர் அல்லது சித்தர் அருள் தானாகவே கிடைக்கும்.

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் அமைந்துள்ளவாறு ஸ்ரீசொர்ணகால பைரவருக்கு தனி பைரவர் பீடம், அஷ்ட பைரவர், கால பைரவருடன் வேறு எங்கும் இதுபோன்று கிடையாது எனலாம். ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சொர்ணாகர்ஷண பைரவர், சொர்ண கவசத்துடன் பொன் நிறமாக சர்வானந்த கோலாகலராக கற்பக விருட்சத்தின் மேல் கங்கா ஜடா முடியுடன், சந்திர பிரபை சூடி, திருக்கழுத்தில் நாகபரணம் அணிந்து திருக்கரங்களில் சங்க நிதி பத்ம நிதியுடனும் மடியில் பூரண கும்பத்துடன் பத்ர பீடத்தில் அமர்ந்திருக்க அதன் பின்னே சொர்ண பைரவி ஸ்ரீமஹா சொர்ணகால பைரவப் பெருமானின் அருகில் வந்து அமர்ந்து ஒரு திருக்கரத்தால் ஸ்ரீமஹா சொர்ணகால பைரவப் பெருமானின் இடையை தழுவியவாறு மற்றொரு திருக்கரத்தில் சொர்ண கும்பத்துடன் அருகில் வந்து அமர்ந்து புன்னகை தவழும் திருமுகத்துடன் உலகிற்கு பொன்னையும் பொருளையும் அள்ளித்தரும் கோலத்துடன் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் திருக்கோலம் கொண்டு அருள் புரிகிறார்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த சொர்ணாகர்ஷண பைரவருக்கு வரும் தேய்பிறை அஷ்டமியில் காலையில் நடைபெறும் சொர்ண பைரவர் யாகத்தில் கலந்து கொண்டால் சொர்ணாம்பிகை சமேத சொர்ண பைரவர் அருள் கிடைக்கும். இதில் பங்கேற்க விரும்பவர்கள் பூசணிக்காய், சிவப்பு அரளி, உலர் திரட்சை பழங்கள், மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், நெய், மிளகு, நல்லெண்ணை, எளுமிச்சம் பழம், பழங்கள், மாதுளம் பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள், மளிகை பொருட்கள் கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்று தன்வந்திரி பகவான், அஷ்ட பைரவர்கள் மற்றும் சொர்ண கால பைரவர் அருள் பெற்று நீண்ட ஆயுள், நிலையான செல்வம் பெறலாம்.

அஷ்டமி நாளில் உச்சி வேளையில் பைரவருக்கு சிவப்பு ஆடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, மாலை சூட்டி, சிவப்பு நிற மலர்களால் அர்ச்சித்து,வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கி நல்ல வாழ்வு கிட்டும். எட்டு தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவ வழிபாடு செய்தால் எந்தத் துன்பமானாலும் விலகி வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும் என்பது நம் முன்னோர்கள் நம்பிக்கையாகும்.

சனிக்கிழமை அன்று ராகு காலத்தில் பைரவருக்கு நாகலிங்கப்பூ மாலையைச் சாற்றி, எள் கலந்த அன்னம், பால் பாயசம், கருப்பு திராட்சை நிவேதனம் செய்து அர்ச்சித்தால் சனி பகவானின் அனைத்து தோஷங்களும் நீங்கும். பைரவரை வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். சனி பகவானின் ஆசிரியர் பைரவர் என்று சொல்லப்படுவதால் சனியின் தொந்தரவு இருக்காது. எதிரிகள் அழிவர். பில்லி, சூன்யம், திருஷ்டி அகலும். அக்கம் பக்கத்தவர்களின் தொந்தரவு இருக்காது. யமபயம், தவிர்க்கப்படும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Pray to Lord Kala Bhairava for Success Many successful people in life owe their accomplishments to being at the right place at the right time. This factor holds true for everyone and those gifted enough to put their time to good use, backed up by hard work are bound to taste success in life.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more