• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தேய்பிறை அஷ்டமி : கடன் நீங்கி மாதம் முழுவதும் வருமானத்தை அதிகரிக்கும் பைரவர் வழிபாடு

|

வேலூர்: விகாரி வருடம், ஆனி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி 25.6.2019 செவ்வாய்க்கிழமை முழுவதும் தேய்பிறை அஷ்டமி திதி இருக்கிறது. தேய்பிறை அஷ்டமி நாள் செவ்வாய்க்கிழமை வருவது மிகவும் சிறப்பாகும். நாளைய தினம் தேய்பிறை அஷ்டமி வருவதால் பைரவரை வணங்கி பிரார்த்திக்க கடன் தொல்லை தீரும். வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உலக மக்கள் நலன் கருதி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நாளை செவ்வாய்கிழமை மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை மஹா காலபைரவர் யாகத்துடன் நவ பைரவர் யாகம் நடைபெறுகிறது.

ராகு காலத்தில் மஹா கால பைரவப்பெருமானை ஜபிக்கலாம். உங்கள் தொழில் உள்ள இறங்குமுகம், வாராக்கடன் மூலம் ஏற்படும் கஷ்டம், பிரிந்த உறவினர்கள் ஒன்று சேர அல்லது உயர் பதவியில் அமர இந்த சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு கண்டிப்பாய் உதவிடும்.

Theipirai astamai : Tuesday Theipirai astami Nava bairava yagam

பைரவர் ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், பிரத்யங்கிராதேவி ஹோமம் நடக்கும் போது ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வணங்கினால், அஷ்ட லட்சுமிகளின் அருளும் உண்டாகும். தொடர்ந்து எட்டு தேய்பிறை அஷ்டமி வரும் நாட்களில் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை அவரது சன்னிதியில் வழிபடுவதும் அல்லது அன்றைய தினம் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு பாலாபிஷேகம்/இளநீர் அபிஷேகம் செய்வதற்குரிய பொருட்களை வாங்கித் தந்து வழிபடுவதும் நன்மையை தரும்

செவ்வாய்க்கிழமை இராகு காலம் மதியம் 3 முதல் மாலை 4.30 வரை இருக்கின்றது. செவ்வாய்க்கிழமை குளிகை காலம் மதியம் 12 முதல் 1.30 வரை அமைந்திருக்கிறது. இந்த தேய்பிறை அஷ்டமி திதி இருக்கும் நேரத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப்பெருமானை வழிபட்டால் அடுத்த ஒரு மாதத்திற்கு பணக் கஷ்டம் வராது. இந்த பூஜை செய்யும் விருச்சிகம்,தனுசு,மகரம்,ரிஷபம் ,மிதுனம், ராசியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக் கூடாது.

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் தேய்பிறை அஷ்டமியில் மஹாபைரவர் யாகம் நடைபெறுகிறது. இந்த யாகத்தில் பங்கேற்பதின் மூலம் சித்தர்களின் அருளாசி கிடைக்கும், இடி, மின்னல், எரிமலை, பூகம்பம், நிலநடுக்கம், புயல், கடல் கொந்தளிப்பு போன்ற இயற்கை பேரழிவுகளில் இருந்து நம்மை பாதுகாக்கும், காட்டு மிருகங்கள், விஷ ஜந்துக்களால் ஏற்படும் பயம் நீங்கும், மாந்ரீக தோஷம், துர்தேவதைகளின் சேஷ்டைகள் அணுகாது, சகல நோய்களும் குணமாகும், எண்ணிய காரியங்களில் வெற்றி பெறலாம், சகல சம்பத்தும் திருமகள் திருவருளால் கிடைக்கும், சர்வ ஜன வசியம் கிடைக்கும், வியாபாரம், தொழிலில் முன்னேற்றம் பெறலாம், சத்துருக்கள் சரணடைவார்கள். இந்த யாகத்தை தொடர்ந்து மஹா காலபைரவருக்கு நவ கலச திருமஞ்சனமும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி அல்லது கோவில்கள் உள்ள பட்டியல்:

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை. வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது அண்ணாமலை கோவிலின் உள்பிரகாரத்தில் உள்ளது. அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில் பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம் உள்ளது.

காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கியில் பைரவர் அருள்பாலிக்கிறார். சென்னை பள்ளிக்கரணையில் அருள்மிகு சாந்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில். சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம். அருள்மிகு நேத்ரதாயினி உடனுறை மாசிலாமணீஸ்வரர் திருக்கோவில் சென்னை. அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோவில் வளாகம்,படேல் தெரு,நேரு நகர்,குரோம்பேட்டை,சென்னை.

திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை. திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம், ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.

காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி கொங்கணரின் ஜீவசமாதி இது. பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம். ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில், புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.

பூசாரி செல் எண்:92451 69455

ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி. அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி, இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது.இதுதான் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் உதயமான இடம் இங்கே இருக்கும் பொற்றளி பைரவர் தான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்!

நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில், ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர் சென்னை அடையாறு மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன் அருகில். வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை. சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர். அருள்மிகு பவானேஸ்வரர் திருக்கோவில்,குடியாத்தம்,வேலூர் மாவட்டம்

ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது. ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை. அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை. செல்வ விநாயகர் கோவில்,லாயிட்ஸ் காலனி,ராயப்பேட்டை,சென்னை.

அருள்மிகு சவுடேஸ்வரி அம்மன் கோவில்,காந்திபுரம்,கோவை, அருள்மிகு தெப்பக்குளம் மாரியம்மன் கோவில்,மதுரை ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்,ஹார்விப்பட்டி,மதுரை. அருள்மிகு பஞ்சமுக ப்ரத்யங்கராதேவி கோவில் வளாகம்,மானாமதுரை, 44. ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷணபைரவர் சன்னதி,அருள்மிகு கொழுக்கட்டை சுவாமிகள் ஆஸ்ரமம், மஹாராஜபுரம்,ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா,விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலை அடிவாரம் செல் எண்:6383652969

ஒருவேளை சனியின் தாக்கத்தால் இந்த ஆலயங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் பின்வரும் மந்திரத்தை வீட்டில் அல்லது அருகில் அமைந்திருக்கும் சிவாலயத்தினுள் ஸ்ரீகால பைரவ சன்னதியில் ஜபிக்கலாம். அடுத்த தேய்பிறை அஷ்டமி விகாரி வருடம், ஆடி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி 24.7.2019 புதன் மதியம் 3.17 முதல் 25.7.2019 வியாழன் மாலை 4.10 வரை இருக்கிறது.

 
 
 
English summary
Bhairava is Lord Shiva in His Fiercest Manifestation. One who worships Kala Bhairavar on Ashtami Thithi will be freed from all debts and loans. Kalabhairavar can solve most of the problems.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X