For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேய்பிறை அஷ்டமி - தன்வந்திரி பீடத்தில் 74 பைரவர் யாகத்துடன் 64 யோகினிகள் பூஜை

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 08.04.2018 ஞாயிற்று கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டுஎண்ணில்லாடங்கா பலன் தரும் 74 பைரவர் யாகத்துடன் 64 யோகினிகள் பூஜை நடைபெற உள்ளது.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

வேலூர்: வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் வருகிற 08.04.2018 ஞாயிற்று கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு எண்ணில்லாடங்கா பலன் தரும் 74 பைரவர் யாகத்துடன் 64 யோகினிகள் பூஜை நடைபெற உள்ளது.

பரமேஸ்வரன் வலிமைமிக்க ஞானமூர்த்தியாக ஸ்ரீ மஹா பைரவர் மூர்த்தியை உற்பத்தி செய்து அவரிடம் உலகினை காக்கும் பொறுப்பினை அளித்து அசுரர்கள் தொல்லை அதிகரிக்கும் பொழுது சிவபெருமான் தனது அம்சமாக பைரவரை தோற்றுவித்து அசுரர்களை வெல்வதாக புராணங்கள் மூலம் அறிய முடிகிறது.

Theipirai astami maha bairava yagam on Sri Dhanvantri peedam

சகல உலகங்களையும் அதில் அமைந்துள்ள, ஆலயங்களையும், தீர்த்தங்களையும் காவல் புரிபவர் ஸ்ரீ பைரவர் ஆவார் ஷேத்திரங்களைக் காவல் புரிவதால் அவர் ஷேத்ரபாலகர் கடல் முதலான பெரிய நீர்ப்பகுதிகள் பொங்கி பூமியை அழித்தி விடாமல் கட்டுக்குள் வைத்திருப்பதால் தீர்த்த பாலகர் என்றும் மக்களிடம் அறிவு சுடரை வளர்ப்பதால் ஞான பைரவர் என்றும், யோகங்களை அள்ளித்தருவதால் யோகபைரவர் என்றும், யோகிகளுக்கு காவலாக இருப்பதோடு மகா வீரர்களிடம் உக்ர பைரவராகவும், பஞ்ச பூதங்களினால் உண்டாகும் சீற்றங்களில் இருந்து காக்கும் பூத பைரவராகவும் இன்னும் பல்வேறு வடிவங்கள் தாங்கி அன்பர்களுக்கு அருள் பாலிக்கின்றார்.

பைரவர் உக்கிரமான தேவராக விளங்கினாலும் பெருங்கருணை மிக்கராவார். சிவாலயங்களில் பைரவர் வழிபாடு ஓர் அங்கமாக உள்ளது. வேத, இதிகாச, சைவ, சாக்த, கௌமார, சௌர மார்க்கங்களிலும் ஜைனம், பௌத்தம் முதலான பிற மார்க்கங்களிலும் பைரவரை சிறப்புடன் போற்றுகின்றனர். பைரவர் மந்திர யந்திர தந்திர நாயகராவார். பூத வேதாள பிரேத பிசாசுக் கூட்டங்களை விரட்டும் பெருங்கருணை உடையவர்.

இவரே சனீஸ்வர பகவானின் குருவாகவும் விளங்குகிறார். பைரவரை வணங்குவதால் ஏழரை நாட்டு சனி, ஜென்மச்சனி, அர்த்தஷ்டம சனி, அஷ்டம சனி ஆகியவற்றில் இருந்து விடுபடலாம். பைரவரை வழிபட்டால் எல்லா சகல சம்பத்துகளையும் பெறலாம் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

இத்தனை சிறப்புமிக்க பைரவருக்கு வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 8ஆம் ஞாயிறு கிழமை காலை முதல் மாலை வரை க்ருஷ்ண பக்ஷ தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் திருக்கரங்களால் பிரதிஷ்டை செய்துள்ள அஷ்ட பைரவர் சகித மஹா பைரவருக்கும் ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவருக்கும் மற்றும் 64 பைரவருக்கும் ஒரே குண்டத்தில் மஹா ஹோமம் நடைபெற உள்ளது.

யோகினிகளுக்கு பூஜை

இதனை தொடர்ந்து ஸ்ரீ சக்ரத்தில் நித்யவாசம் செய்யும் பராம்பிகையைச் சுற்றி வீற்றிருக்கும் 64 யோகினிகளுக்கு சிறப்பு பூஜைகள் சென்னை சாக்த ஸ்ரீ பரணிகுமரன் அவர்கள் நிகழ்த்த உள்ளார். ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் மற்றும் அஷ்ட பைரவர்களான 1. ஸ்ரீ அசிதாங்க பைரவர், 2. ஸ்ரீ ருரு பைரவர், 3. ஸ்ரீ சண்ட பைரவர், 4. ஸ்ரீ குரோதன பைரவர், 5. ஸ்ரீ உன்மத்த பைரவர், 6. ஸ்ரீ கபால பைரவர், 7. ஸ்ரீ பீக்ஷன பைரவர், 8. ஸ்ரீ சம்ஹார பைரவர் மற்றும் மஹா பைரவருக்கும் யாகங்கள் நடைபெற உள்ளன.

Theipirai astami maha bairava yagam on Sri Dhanvantri peedam

64 பைரவர் சகித 64 யோகினிகள்

1.நீலகண்ட பைரவர் - ஜயா, 2.விசாலாட்சி பைரவர் - விஜயா, 3.மார்த்தாண்ட பைரவர் - ஜயந்தி, 4.முன்டனப்பிரபு பைரவர் - அபராஜிதா, 5.ஸ்வஸ்சந்த் பைரவர் - திவ்யமோகினி, 6.அதிசந்துஷ்ட பைரவர் - மகாயோகினி, 7.கேசர பைரவர் -ஸித்தமோகினி, 8.ஸம்ஹார பைரவர் - கணேஸ்வர யோகினி, 9.விஸ்வரூப பைரவர் - ப்ரேதாஸின்யை, 10.நானாரூப பைரவர் - டாகினி, 11.பரம பைரவர் - காளி, 12.தண்டகர்ண பைரவர் - காளராத்ரி, 13.ஸீதாபத்ர பைரவர் - நிசாசரி, 14.சிரீடன் பைரவர் -டங்கார்ரீ, 15.உன்மத்த பைரவர் - வேதாள்யா, 16.மேகநாத பைரவர் - ஹும்காரி, 17.மனோவேக பைரவர் - ஊர்த்துவகேசி, 18.ஷேத்ரபாலக பைரவர் - விருபாட்சி, 19.விருபாஷ பைரவர் - சுஷ்காங்கீ, 20.காரள பைரவர் - நரபோஜினி, 21.நிர்பய பைரவர் - பட்சார்ரி, 22.பிசித பைரவர் - வீரபத்ரா, 23.ப்ரேஷ்த பைரவர் - தூம்ராக்ஷி, 24.லோகபால பைரவர் - கலகப்ரியா, 25.கதாதர பைரவர் - கோர ரத்தாட்சி, 26.வஜ்ரஹஸ்த பைரவர் - விச்வரூபி, 27.மகாகால பைரவர் - அபயங்கிரி, 28.பிரகண்ட பைரவர் - வீரகௌமாரி, 29.ப்ரளய பைரவர் - சண்டிகை, 30.அந்தக பைரவர் - வாராஹி, 31.பூமிகர்ப்ப பைரவர் - முண்டதாரணி, 32.பீஷண பைரவர் - ராக்க்ஷஸி, 33.ஸம்ஹார பைரவர் - பைரவி, 34.குலபால பைரவர் - த்வாங்க்ஷிணி, 35.ருண்டமாலா பைரவர் - தூம்ராங்கி, 36.ரத்தாங்க பைரவர் - பிரேதவாகினி, 37.பிங்களேஷ்ண பைரவர் - கட்கினி, 38.அப்ரரூப பைரவர் - தீர்க்கலம் போஷ்யா, 39.தராபாலன பைரவர் - மாலினி, 40.ப்ரஜாபாலன பைரவர் - மந்திரயோகினி, 41.குல பைரவர் - காளி, 42.மந்திரநாயக பைரவர் - சக்ரிணி, 43.ருத்ர பைரவர் - கங்காளி, 44.பிதாமஹ பைரவர் - புவனேஸ்வரி, 45.விஷ்ணு பைரவர் - த்ரோடகீ, 46.வடுகநாத பைரவர் - மகாமாரீ, 47.கபால பைரவர் - யமதூதி, 48.பூதவேதாள பைரவர் - காளி, 49.த்ரிநேத்ர பைரவர் - கேசினி, 50.திரபுராந்தக பைரவர் - மர்த்தினி, 51.வரத பைரவர் - ரோமஜங்கே, 52.பர்வதவாகன பைரவர் - நிர்வாணி, 53.சசிவாகன பைரவர் - விசாலி, 54.கபாலபூஷன பைரவர் - கார்முகி, 55.ஸர்வக்ஞ பைரவர் - தோத்யமினம, 56.ஸர்வதேவ பைரவர் - அதோமுக்யை, 57.ஈசான பைரவர் - முண்டாக்ரதாரிணி, 58.ஸர்வபூத பைரவர் - வியாக்ரிணி, 59.கோரநாத பைரவர் - தூங்ஷிணி, 60.பயங்கர பைரவர் - பிரேதரூபிணி, 61.புத்தி முக்தி பலப்ரத பைரவர் - தூர்ஜட்டை, 62.காலாக்னி பைரவர் - கோர்யா, 63.மகாரௌத்தர பைரவர் - கராளி, 64.தட்சிணாபிஸ்தித பைரவர் - விஷலங்கர்யா,. இந்த 64 பைரவர் 64 யோகினிகள் பூஜை கணபதிபூஜை, குரு மண்டல பூஜை, 64 பைரவர் சகித 64 யோகினிகள் மூல மந்திர அர்ச்சனை, கட்கமாலா, ஆஸ்ரேய அஷ்டோத்திரம், நவாவரண சக்ரேஸ்வரி த்யானம், லலிதா ஸஹஸ்ர நாமம் என தொடர்ந்து 64 விளக்குகள் ஏற்றி தீபாராதனையுடன் நடைபெற உள்ளது.
இந்த மஹா யாகத்திற்கு புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சரியர் வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் பங்கேற்க ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் அழைக்கின்றனர்.

திருவோண தைலாபிஷேகம்

10.04.2018 செவ்வாய் கிழமை திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை உலக மக்களின் உடல் நோய் மன நோய் நீங்கவும், சகல தோஷங்கள் நிவர்த்தியாகவும் விநாயக தன்வந்திரிக்கும் மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கும் உற்சவ மூர்த்திக்கும் தன்வந்திரி ஹோமத்துடன் தைலாபிஷேகமும் நடைபெறுகிறது. ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம். அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203.

Theipirai astami maha bairava yagam on Sri Dhanvantri peedam
English summary
Theipirai astami maha bairava yagam at Sri Dhanvantri peedam at Walajapet in Vellor on April 2018.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X