For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருண்ணாமலை தீபம் டிசம்பர் 9 வரை பக்தர்கள் தரிசிக்கலாம் - டிசம்பர் 30ல் பிரசாதம்

அண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம் 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி தரும். தினசரி மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் தீபம் மறுநாள் காலை 6 மணிக்கு குளிர் விக்கப்படும். மகாதீபத்தை டிசம்பர் 9ஆம் தேதி வரை தரிசிக்கலாம்.

Google Oneindia Tamil News

திருவண்ணாமலை: அண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம் 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி தரும். தினசரி மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் தீபம் மறுநாள் காலை 6 மணிக்கு குளிர் விக்கப்படும். மகாதீபத்தை டிசம்பர் 9ஆம் தேதி வரை தரிசிக்கலாம். 11 நாட்கள் நிறைவடைந்த பின்னர் தீப கொப்பரை எடுத்து வரப்பட்டு குளிர்விக்கப்படும். டிசம்பர் 30ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நாளில் நடராஜ பெருமானுக்கு திலகமிடப்பட் பின்னர் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படும்.

அண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம் 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி தரும். தினசரி மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் தீபம் மறுநாள் காலை 6 மணிக்கு குளிர் விக்கப்படும். மகாதீபத்தை டிசம்பர் 9ஆம்தேதி வரை தரிசிக்கலாம்.

Thiruvannamalai Mahadeepam can be devottes see till December 9

11 நாட்கள் நிறைவடைந்த பின்னர் தீப கொப்பரை எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இதைத் தொடர்ந்து ஆயிரம் கால் மண்டபத்தில் தீப கொப்பரை பாதுகாப்பாக வைக்கப்பட்டு டிசம்பர் 30ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நாளில் நடராஜ பெருமானுக்கு திலகமிடப்பட் பின்னர் பிரசாதமாக வழங்கப்படும்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவையொட்டி ஞாயிறன்றுஅதிகாலை கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து மாலையில் பஞ்சமூர்த்திகள் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கோவில் கொடி மரத்துக்கு முன்பாக உள்ள தீப தரிசன மண்டபத்தில் தங்க விமானங்களில் பஞ்ச மூர்த்திகள் தனித்தனியாக எழுந்தருளினர்.

திருப்பரங்குன்றம் முதல் திருமலை வரை... கார்த்திகை தீப திருவிழா கோலாகலம் - பக்தர்கள் தரிசனம் திருப்பரங்குன்றம் முதல் திருமலை வரை... கார்த்திகை தீப திருவிழா கோலாகலம் - பக்தர்கள் தரிசனம்

சரியாக மாலை 6 மணிக்கு கோவில் கொடிமரம் முன், இறைவிக்கு இறைவன் தன் உடலின் சரிபாதியை கொடுத்ததை விளக்கும் விதமாக அர்த்தநாரீஸ்வரர் வலம் வந்து ஒரு நிமிடம் தரிசனம் தந்தார்.

அப்போது சிவாச்சாரியார்கள் பஞ்சமுக தீபாராதனை காட்ட பக்தர்கள் அண்ணாமலை யாருக்கு அரோகரா என்று கோ‌ஷமிட சங்கு, தாளம், பெருந்தாள், பேரிகைகள் முழங்க சிவதொண்டர்கள் ஆனந்த நடனமாட, மலையை நோக்கி தீப்பந்தங்கள் காட்ட, அதிர்வேட்டுகள் முழங்க 2 ஆயிரத்து 668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மீது தீபம் ஏற்றப்பட்டது.

Thiruvannamalai Mahadeepam can be devottes see till December 9

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக மகா தீப தரிசன நாளில் கோவில் வளாகத்தில் ஊழியர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. வெளியூர் பக்தர்கள் மாவட்ட எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதனால் தீப தரிசனத்தை நேரடியாக காண முடியாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். உள்ளூர் பக்தர்கள் வீடுகளில் இருந்தபடியே மகா தீபத்தை தரிசித்தனர். அண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம் 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி தரும். தினசரி மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் தீபம் மறுநாள் காலை 6 மணிக்கு குளிர் விக்கப்படும். மகாதீபத்தை டிசம்பர் 9ஆம் தேதி வரை தரிசிக்கலாம்.

11 நாட்கள் நிறைவடைந்த பின்னர் தீப கொப்பரை குளிர்விக்கப்பட்டு கீழே எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இதைத் தொடர்ந்து ஆயிரம் கால் மண்டபத்தில் தீப கொப்பரை பாதுகாப்பாக வைக்கப்பட்டு டிசம்பர் 30ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நாளில் நடராஜ பெருமானுக்கு திலகமிடப்பட் பின்னர் பிரசாதமாக வழங்கப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் தீபவிழா முடிந்ததும் தெப்பல் உற்சவம் கோவிலுக்கு வெளியே உள்ள அய்யங்குளத்தில் நடக்கும். நெருப்பாக இருக்கும் இறைவனை ஆற்றுப்படுத்தும் விதமாக தெப்பல் உற்சவம் 3 நாட்கள் நடைபெற்றது. கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் உற்சவர் சந்திரசேகர் அம்பாளுடன் சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளி தெப்பல் உற்சவத்தில் பங்கேற்று குளத்தை 3 முறை வலம் வந்தார். இன்று சுப்ரமணியர் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. நாளைய தினம் சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கோவில் திருவிழா நடைபெறுகிறது.

English summary
Mounted on the top of the Annamalai, the Mahadeepam will be on display for 11 days. The lamp, which is loaded daily at 6 pm, is cooled at 6 am the next day. The Mahadeepam can be visited till December 9. After 11 days, the cauldron is brought in and cooled. On the day of Arudra Darshan on December 30, an offering will be made to Lord Nataraja and then to the devotees.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X