For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொரோனாவிற்கும் திருவாதிரை நட்சத்திர வெடிப்புக்கும் சம்பந்தம் இருக்குமா? #thiruvathirai

திருவாதிரை நட்சத்திரம் வெடித்தால் உலகத்தில் மிக முக்கிய தலைவர்களுக்கு பாதிப்பு வரலாம். போர்கள் ஏற்படலாம். இதனால் உலகத்தில் உள்ள பலரின் வாழ்க்கை பாதிப்பிற்கு ஆளாகும். வங்கிகள் திவாலாகும். உலக அளவில் பொ

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ் பற்றிய பேச்சுதான் டீக்கடை பெஞ்சு முதல் ஐடி கம்பெனி கேன்டீன்கள் வரை வைரல் ஆகி வருகிறது. ஆறு கிரக சேர்க்கையின் போது நிகழ்ந்த சூரிய கிரகணம்தான் கொரோனா வைரஸ்க்கு காரணம் என்று செய்திகள் வெளியானலும் திருவாதிரை நட்சத்திர வெடிப்பும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு காரணமாக இருக்காலாமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. திருவாதிரை நட்சத்திரம் வெடித்து சிதறும் போது இந்த உலகத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கின்றனர் ஜோதிடர்கள்.

திருவாதிரை நட்சத்திரம் சக்தி வாய்ந்தது ராகுவின் நட்சத்திரம். இந்த திருவாதிரைதான் இப்போது வெடித்து படிப்படியாக ஒளி மங்கி வருவதாக வானியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றர். இதனால் திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு மட்டுமல்லாது உலக அளவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் உலகத்தில் தலைவர்கள் மத்தியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது ஜோதிடர்களின் எச்சரிக்கையாகும்.

திருவாதிரை சிவனின் நட்சத்திரம். மார்கழி மாதம் பவுர்ணமி நாளில் திருவாதிரை திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சிவ ஆலயங்களில் நடராஜரின் ஆனந்த தாண்டவத்தை தரிசிக்கலாம். இந்த ஆண்டு திருவிழா கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி கொண்டாடப்பட்டது. சிவ ஆலயங்களில் ஆருத்ரா அபிஷேகம் நடைபெற்றது. சைவ சமயத்தினரால் கொண்டாடப்படும் இந்த நட்சத்திரம் பற்றிதான் இப்போது பரபரப்பாக ஒரு செய்தி வெளியாகிக் கொண்டிருக்கிறது.

ஆருத்ரா நட்சத்திரம்

ஆருத்ரா நட்சத்திரம்

நட்சத்திர மண்டலத்தில் ஆறாவது நட்சத்திரமாக இருப்பது திருவாதிரை. 27 நட்சத்திரங்களில் திரு என்ற சிறப்புடன் அழைக்கப்படும் இரண்டு நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரம் இது. இரண்டாவது நட்சத்திரம் திருவோணம். ஒன்று சிவபெருமானின் நட்சத்திரம். மற்றொன்று திருமாலுக்கானது.
திருவாதிரையில் ஆருத்ரா தரிசனம் என்ற நிகழ்வானது அனைத்து சிவாலயங்களிலும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினத்தில் நடராஜப்பெருமான், சிவகாமசுந்தரியோடு ஆனந்த தாண்டவத்தில் பக்தர்களுக்குக் காட்சி தருவார். வடமொழியில் ஆருத்ரா என்றழைக்கப்படும் திருவாதிரை பரமேஸ்வரனின் நட்சத்திரமாகச் சொல்லப்படுகிறது.

ராகு பகவான்

ராகு பகவான்

இந்த நட்சத்திரத்தின் ராசி மிதுனம். மிதுனம் என்பது இரட்டையைக் குறிக்கும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒரு கருத்துக்கு ஆதரவும் தெரிவிப்பார்கள். அதே கருத்தை மற்றொரு சமயம் மறுத்தும் பேசுவார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்படியும் பிரபலமாகிவிடுவார்கள் என்கிறது ஜோதிட நூல். திருவாதிரை நட்சத்திரத்திற்கு உரிய கிரகம் ராகு. ராகு பகவான் குணத்தை பார்த்தால் பேராசை, தன் விருப்பம் நிறைவேற எதையும் செய்யத் துணிதல் ஆகிய குணங்கள் ராகுவிற்கு உரியவை. திருவாதிரை நட்சத்திரம் முழுமையாக மிதுன ராசிக்குள் அடங்கிவிடும்.
திருவாதிரையில் பிறந்தவர்கள் ராகு மற்றும் புதன் இணைந்த குணத்தினைக் கொண்டிருப்பர். இவர்கள் மிகவும் சாமர்த்தியசாலிகள்.

திருவாதிரை நட்சத்திரத்தின் ஒளி

திருவாதிரை நட்சத்திரத்தின் ஒளி

திருவாதிரை என்றழைக்கப்படும் இந்த நட்சத்திரத்திற்கு விஞ்ஞானிகள் அளித்துள்ள பெயர் பெட்டல்க்யூஸ் (Betelgeuse). ஓரியன் நட்சத்திரக் குடும்பத்தில் உள்ள இந்த நட்சத்திரக்கூட்டம் சிவப்பு நிற ராட்சசனைப் போல காணப்படும். விண்வெளியில் காணப்படும் மிக ஒளிரக்கூடிய நட்சத்திரங்களில் ஒன்றான திருவாதிரை சூரியனை விட பல மடங்கு பெரியதாகும்.

சூப்பர் நோவா

சூப்பர் நோவா

மிகவும் ஒளி பொருந்திய திருவாதிரை நட்சத்திரத்தின் ஒளி மங்கி வருவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். எரிந்து அணைந்த நிலையில் இருந்த திருவாதிரை ஒளி மங்குவது சூப்பர்நோவா எனப்படும். நட்சத்திர வெடிப்புக்கு அறிகுறி என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நட்சத்திர வெடிப்பு நிகழும் போதெல்லாம் மிகப்பெரிய போர்களும் அதனால் கொத்துக்கொத்தான மரணங்களும் நிகழ்ந்திருக்கின்றன என எச்சரிக்கின்றனர் ஜோதிடர்கள்.

நட்சத்திர வெடிப்பு

நட்சத்திர வெடிப்பு

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளும் அதில் அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திர மண்டலங்களும் ஜோதிடத்தில் உள்ளன. இப்போது ஆபத்தான கட்டத்தில் திருவாதிரை இருக்கிறது என்கின்றனர் வானியல் ஆய்வாளர்கள். 27 நட்சத்திரங்களில் திருவாதிரை 6வது நட்சத்திரம். சிவன் பிறந்த நட்சத்திரம். ராகுவின் நட்சத்திரங்களில் முதலாவது நட்சத்திரம். மக்கள் அனைவருமே 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள்தான்.

மரணத்தின் தூதுவன்

மரணத்தின் தூதுவன்

நட்சத்திரம் வெடிக்கும் என்பது உண்மையே. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நட்சத்திரங்கள் வெடித்துள்ளன. அப்போதெல்லாம் மிகப்பெரிய அளவில் போர்களும் மரணங்களும் நிகழ்ந்திருக்கின்றன என்கின்றனர் ஜோதிடர்கள். போர்களின் போது பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கிறார்களாம். ராகுவின் நட்சத்திரங்கள் திருவாதிரை, சுவாதி, சதயம். ராகுவின் நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தின் மீது சாமா என்கிற கிரகம் வந்து மோதிய போது மகாபாரத யுத்தம் நிகழ்ந்தது.

உலகிற்கு ஆபத்து

உலகிற்கு ஆபத்து

திருவாதிரை நட்சத்திரம் வெடித்தால் உலகத்தில் மிக முக்கிய தலைவர்களுக்கு பாதிப்பு வரலாம். போர்கள் ஏற்படலாம். இதனால் உலகத்தில் உள்ள பலரின் வாழ்க்கை பாதிப்பிற்கு ஆளாகும். வங்கிகள் திவாலாகும். உலக அளவில் பொருளாதார நிலையில் மாற்றங்கள் ஏற்படும் என்பதும் ஜோதிடர்களின் எச்சரிக்கையாகும். இப்போது கொரோனா வைரஸ் பீதி உலகம் முழுவதும் பரவி வருகிறது. லட்சக்கணக்கான மக்களை தாக்கியுள்ளது. சீனாவில் ஆயிரக்கணக்கான மக்கள் மரணமடைந்துள்ளனர். இந்த நட்சத்திர வெடிப்புக்கும் கொரோனா தாக்குதலுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கலாமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

மரணத்தருவாயில் திருவாதிரை

மரணத்தருவாயில் திருவாதிரை

ஒரு நட்சத்திரம் தனது இறுதிக்காலத்தை நெருங்கும்போது, அதன் பிரகாசம் குறையத் தொடங்கும். திருவாதிரை நட்சத்திரம், 1 லட்சம் ஆண்டு பழமையானது. எனவே, அதற்கு சூப்பர் நோவா இது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறப்பட்டு வந்தது. அதற்கு ஏற்ப, நட்சத்திரத்தின் உள்ளேயுள்ள தனிமங்கள் எரிவது அதிவேகமாக நடந்து கொண்டிருந்ததை விஞ்ஞானிகள் கவனிக்க தவறவில்லை. கடந்த ஓராண்டில் மட்டும் பெருமளவில் திருவாதிரை நட்சத்திரம் மங்கிப்போயுள்ளது.

திருவாதிரையை தொடரும் விஞ்ஞானிகள்

திருவாதிரையை தொடரும் விஞ்ஞானிகள்

2019 ஜனவரி மற்றும் டிசம்பர் மாதங்களில் திருவாதிரை நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் எடுத்த புகைப்படங்களை விட இப்போது எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களில் இது தெரிய வந்துள்ளது. இந்த நட்சத்திர வெடிப்பு சமீபத்தில் நடந்ததல்ல பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர். 600 ஒளியாண்டு தொலைவில் திருவாதிரை நட்சத்திரம் உள்ளதால், அது வெடித்து சிதறும்போது நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அதேசமயம் நட்சத்திரம் குறித்த புரிதலை இந்த வெடிப்பு மேலும் அதிகரிக்க செய்யும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். எனவே, திருவாதிரையை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

English summary
Thiruvathirai or Arudra is the sixth nakshatra in Vedic astrology ranging from 6° 40' to 20° Mithuna.The astronomical name of this nakshatra is Betelgeuse. Rudra the god of destruction is the deity of Ardra nakshatra.Tiruvathirai nakshatra is ruled by Rahu which is the North lunar node. Thiruvathirai star is going to explode the Earth in dangerous situation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X