For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண விருந்தில் என்னென்ன வகைகள் இருக்கும் தெரியுமா

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் இந்த வருடம் பக்தர்கள் யாருமின்றி நடந்து முடிந்துள்ளது. இந்த ஆண்டு நேரடியாக திருக்கல்யாணத்தை தரிசனம் செய்து திருமண விருந்தை சாப்பிட்டு மொய் எழுதமுடியவில்லை என்பதுதான் ச

Google Oneindia Tamil News

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரருக்கு திருக்கல்யாணம் முடிந்த பின்னர் பக்தர்களுக்கு பல்வேறு இடங்களில் திருக்கல்யாண விருந்துகள் வழங்கப்படும். இந்தாண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக இணையதளம் மூலம் திருக்கல்யாணத்தை கண்டு தரிசனம் செய்தனர். திருகல்யாண விருந்து சாப்பிட்டு இறைவன் இறைவி கல்யாணத்திற்கு மொய் எழுத முடியவில்லையே என்ற சோகம் பக்தர்களுக்கு எழுந்துள்ளது.

Recommended Video

    முதன்முறையாக பக்தர்கள் யாருமில்லாமல் நடைபெற்ற மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்

    இந்த ஆண்டு திருக்கல்யாண விருந்தை வீட்டிலேயே பக்தர்கள் தயார் செய்து குடும்பத்தோடு அமர்ந்து சாப்பிட்டாலே மீனாட்சி சுந்தரேஸ்வரரின் அருள் கிடைக்கும் என்று சிவாச்சாரியார்கள் தெரிவித்துள்ளனர். வீட்டிலிருந்தபடியே திருக்கல்யாணத்தை தரிசனம் செய்து புதுத்தாலி மாற்றிக் கொண்ட பெண்கள் வீட்டிலேயே கல்யாண விருந்தை சமைத்தனர்.

    Tirukkalyanam Virundhu Goddess Meenakshi and Lord Sundareswarar

    வடை பாயாசத்துடன் விருந்து சமைத்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் படத்திற்கு நைவேத்தியம் செய்து இப்போது உள்ள அசாதாரண சூழ்நிலையில் இருந்து மக்களை காக்கவேண்டும் என்று வணங்க வேண்டும்.

    ஒவ்வொரு ஆண்டும் திருக்கல்யாண விருந்து எப்படி இருக்கும் என்று எழுதப்பட்ட பாடல் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    சம்பா அரிசியில் சமைத்த சோறு, பருப்பு, நெய், பொரிச்ச குழம்பு, பூசணிக்காய் சாம்பார், வெண்டைக்காய் மோர்க்கடி, வெங்காய சாம்பார், மிளகு ஜீரா ரசம், மைசூர் ரசம், பன்னீர் ரசம், வேப்பம்பூ ரசம், அப்பளம், ஜவ்வரிசி வடாம், மாந்தயிர் பச்சடி தேங்காய்பூ கோசுமல்லி. இரங்கிக்காய் கிச்சடி பரங்கிக்காய் பச்சடி, வற்றல் அப்பளம், சிலாபிஞ்சு கறி, பலாபிஞ்சு கறி,பாகற்காய் கசக்கல் கத்திரிக்காய் துவட்டல், வாழைக்காய் வருவல் வாழைப்பூ துருவல்,அக்கார அடிசல், சர்க்கரைப்பொங்கல், மசாலா வடை, பால் போளி, தயிர்வடை, அதிரசம், சேமியா, ஜிலேபி லட்டு, முந்திரி லாடு, ரவா லாடு, பயத்தமா லாடு, செவ்வாழை, பச்சை நாடாம் பழம், நேத்திரம், மாம்பழ வகைகள், மாவடு ஊறுகாய், பாவக்காய் ஊறுகாய், மிளகாய் பச்சடி, இஞ்சி ஊறுகாய் என பந்தியில் பரிமாறப்படும். திருக்கல்யாணம் முடிந்த உடன் போஜனம் செய்ய வாருங்கள் என்று கூறுகின்றனர்.

    Tirukkalyanam Virundhu Goddess Meenakshi and Lord Sundareswarar

    போஜனம் செய்ய வாருங்கள்
    மீனாக்ஷி சுந்தரேச கல்யாண மண்டபத்தில்
    போஜனம் செய்ய வாருங்கள்
    நவ சித்ரமானதோர் கல்யாண மண்டபத்தில்
    போஜனம் செய்ய வாருங்கள்
    வாழை மரத்துடன் வெட்டி வேர் கொழுந்து
    மாவிலைத் தோரணம் பவழ ஸ்தம்பம்
    நாட்டிய கூடம் பச்ச மரகதம்
    பதித்த செவர்களும் பசும்பொன் தரையில்
    பலவர்ண பொடியினால் பதித்த கோலத்தில்
    நட்ட நடுவே குத்து விளக்கேற்றி
    தூண்கள் தோறும் தூண்டா விளக்கும்
    சுற்றிலும் தீபங்கள் மணிகளும் அசைய
    பந்திபந்தியாய் பாயை விரித்து
    உத்தரணியுடன் ஜலபாத்திரங்களும்
    தலைவாழை இலை போட்டு தப்பாமல் இடம்பண்ணி
    போஜனம் செய்ய வாருங்கள்
    மும்மூர்த்திகளுடன் முனிவர்கள் தேவர்கள்
    யக்ஷகின்னரர் கந்தர்வர்களும்
    அஷ்டதிக்கு பாலகர்கள் சூழ
    அந்தணர்களும் முன்பந்தியிலே
    அணிஅணியாக அவரவர் இடத்தில்
    அழகாய் இருந்தார்
    அகல்யை திரௌபதி சீதை தாரை
    மண்டோதரியுடன் பந்தடித்தார்போல் பட்டுகள் கட்டி
    கெஜ்ஜை மெட்டிகள் கிலுகிலுங்கவே
    முத்திரை மோதிரம் விரலில் கொண்டு
    பசும்பொன் தூக்கில் பாயாசத்தை எடுத்து
    பார்த்து பார்த்து பரிமாறவே வந்தார்
    போஜனம் செய்ய வாருங்கள்
    மாந்தயிர் பச்சடி தேங்காய்பூ கோசுமல்லி
    இரங்கிக்காய் கிச்சடி பரங்கிக்காய் பச்சடி
    விதம்விதமாகவே வற்றல் அப்பளம்
    பாங்குள்ள கூட்டு டாங்கர் பகுத்தெடு
    சிலாபிஞ்சு கறியும் பலாபிஞ்சு கறியும்
    பாகற்காய் கசக்கல் கத்திரிக்காய் துவட்டல்
    வாழைக்காய் வருவல் வாழைப்பூ துருவல்
    குங்குருக்கு சுகமான சம்பா அரிசியென
    மொத்த பருப்பும் புத்துருக்கு நெய்யும்
    போஜனம் செய்ய வாருங்கள்
    பொரிச்ச குழம்பு பூசணிக்காய் சாம்பார்
    வெண்டைக்காய் மோர்க்கடி வெங்காய சாம்பார்
    வாய்க்கு மிக ருசிக்கும் மிளகு ஜீரா ரசம்
    மதுரமாய் இருக்கும் மைசூர் ரசமும்
    பருப்புகள் சேர்த்த பன்னீர் ரசமும்
    வேணுவோர்க்கெல்லாம் வேப்பம்பூ ரசமும்
    குடிக்க மிக ருசிக்கும் கொட்டு ரசமும்
    சூர்ய உதயம்போல் சீரும் அப்பளம்
    சுக்ல உதயம் போல் ஜெவ்வரிசி கருவடாம்
    அக்கார வடிசல் சக்கரைப் பொங்கல்
    என்னென்ன சுண்டல் வகையான வடை
    சுமசாலா வடை வெங்காய வடை
    சொஜ்ஜி வடையுடன் நல்லெண்ணை வடை
    தயிர் வடையும் பால் போளிகளும்
    அனாரசம் அதிரசம் பதிர் பேணியுடன்
    சேமியா ஹல்வா ஜிலேபி லட்டு
    முத்து முத்தாய் இருக்கும் முந்திரி லாடு
    ரம்மியமாய் இருக்கும் ரவா லாடு
    பேஷா இருக்கும் பேசரி லாடு
    குண்டுகுண்டாய் இருக்கும் குஞ்சா லாடு
    பளபளவெனருக்கும் பயத்தமா லாடு
    மைசூர் பாகுடன் பர்ஃபியும் சேர்த்து
    போஜனம் செய்ய வாருங்கள்
    பொரிகனி வர்கங்கள் பச்சை நாடாம்பழம்
    தேன்கதளி பழம் செவ்வாழை பழம்
    நேந்திரம் பழத்துடன் மாம்பழ தினுசுகள்
    பலாப் பழத்துடன் வாடை பரிமளிக்கும்
    ஆடைதயிர் வெண்ணை தங்காமல் சேர்த்து
    பகாளாபாத், பல தினுசான சித்திரான்னங்களும்
    ரஞ்சிதமாகிய இஞ்சி ஊறுகாய்
    வெடுக்கென கடிக்கும் மாவடு ஊறுகாய்
    பாவக்காய் ஊறுகாய் வேப்பிலைக்கட்டி
    கொத்தமல்லிச் சட்னி மிளகாய்ப் பொடியுடன்
    மிளகாய் பச்சடி
    பந்தியில் பரிமாறினார்
    மீனாக்ஷி சுந்தரேச கல்யாண மண்டபத்தில்
    பார்த்துப் பரிமாறினார்...

    English summary
    Madurai following the Tirukkalyanam Virundhu celestial wedding of Goddess Meenakshi and Lord Sundareswarar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X