For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொரோனா பீதியால் ஆந்திராவில் அனைத்து கோவில்களும் மூடல் - மே வரை ஏழுமலையான் தரிசனம் ரத்து

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் , திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்து வழிப்பாட்டுத் தலங்களும் தற்காலிகமாக மூடப்படுவதாக ஆந்திர மா

Google Oneindia Tamil News

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் , கீழ்திருப்பதியில் உள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்து வழிப்பாட்டுத் தலங்களும் தற்காலிகமாக மூடப்படுவதாக ஆந்திர மாநில அரசு இன்று அதிரடியாக அறிவித்துள்ளது. மே மாதம் வரை, 300 ரூபாய் கட்டண தரிசனம், கட்டண சேவை, தங்கும் அறைகளுக்கான முன்பதிவு அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக, தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

Recommended Video

    தமிழ்நாட்டில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

    உலகம் முழுவதும் கொரோன வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்தியாவிலும் இதன் தாக்கம் தொடர்ந்து ஒற்றை இலக்கத்தில் கூடிக்கொண்டே செல்கிறது. மக்கள் கூட்டம் கூடம் இடங்களில் அதிகமாக பரவுகிறது என்பதால் பொதுமக்களும் பீதியடைந்து பெரும்பாலும் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

    Tirumala Tirupati Temple To Close For Devotees Amid Coronavirus Outbreak

    பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, நாடு முழுவதும் அனைத்து சுற்றுலா தலங்கள், பொழுது போக்கு வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், மால்கள் என அனைத்தையும் வரும் மார்ச் 31ஆம் தேதி வரையிலும் மூடும் படி உத்தரவிட்டுள்ளது. அதே போல் மத வழிபாட்டு தலங்களுக்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள கோவில்களிலும் பிற மத வழிபாட்டு தலங்களிலும் பக்தர்களின் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடிக்கிடக்கின்றன.

    ஆந்திர மாநிலத்திலுள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் கொரோனா வைரஸ் பீதியால் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதனால் கோவிலில் வழக்கமாக நடைபெறும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்திருந்தது.

    நாள்தோறும் நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரையிலும் நடக்கும் கல்யாண உற்சவம் மட்டும் பக்தர்களுக்கு அனுமதியின்றி, அர்ச்சகர்களால் ஏகாந்தமாக நடத்தப்படுகிறது. ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளில் சாமி தரிசனம் செய்வதற்கு ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்திருந்த பக்தர்கள் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்திற்கு முழு ஒத்துழைப்பை அளிக்கவேண்டும். மேற்கண்ட ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளில் திடீரென சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

    வி.ஐ.பி பிரேக் தரிசன நேரத்தில் சாமி தரிசனம் செய்யவில்லை என்றால், அந்த பக்தருக்கு சம்பந்தப்பட்ட ஆர்ஜித சேவை டிக்கெட்டை ரத்து செய்து, அதற்குண்டான பணத்தை திருமலையில் உள்ள ஆர்ஜித சேவை டிக்கெட் கவுண்ட்டர்களில் ரீ-ஃபண்டாக திரும்ப அளிக்கப்படும், என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தது.

    Tirumala Tirupati Temple To Close For Devotees Amid Coronavirus Outbreak

    இந்த நிலையில் மே மாதம் வரை, 300 ரூபாய் கட்டண தரிசனம், கட்டண சேவை, தங்கும் அறைகளுக்கான முன்பதிவு அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக, தேவஸ்தான நிர்வாகம் இன்று அதிரடியாக அறிவித்துள்ளது. திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் , கீழ்திருப்பதியில் உள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்து வழிப்பாட்டுத் தலங்களும் தற்காலிகமாக மூடப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
    ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதை மூடப்பட்டுள்ளது. அலிபிரி மெட்டு, ஸ்ரீவாரி மெட்டு ஆகிய பக்தர்கள் நடந்து செல்லும் பாதைகளும் மூடப்பட்டுள்ளது.

    மராட்டியத்தைச் சேர்ந்த 20 பேர், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இன்று தரிசனத்துக்கு வந்திருந்தனர். 20 பேரில் ஒரு பக்தருக்கு காய்ச்சல் இருமல் இருந்ததோடு வாரணாசி கோயிலுக்கு சென்றுவிட்டு திருப்பதிக்கு வந்திருந்தார். பக்தர் இருமலுடன் வந்ததால் அலிபிரியில் இருந்து திருமலைக்கு செல்லக்கூடிய மலைப்பாதை இரண்டும் மூடப்பட்டுள்ளது. புதிதாக பக்தர்கள் யாரும் திருமலைக்கு வராதவண்ணம் திருப்பதி மலைப்பாதை, நடைபாதை ஆகியவை மூடப்படுகிறது என மாநில அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Tirumala Tirupati Temple To Close For Devotees Amid Coronavirus Outbreak

    தினசரியும் 20 மணிநேரத்திற்கும் மேலாக ஏழுமலையானை பக்தர்கள் தரிசித்து கொண்டிருந்தார்கள். கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இப்போது பக்தர்கள் இல்லாமல் ஏழுமலையானுக்கு ஏகாந்தமாக அபிஷேக ஆராதனைகளும், கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளது.

    English summary
    The Tirumala Tirupati Devasthanam Board has closed the Lord Venkateswara Swamy to devotees as a precautionary measure to control the spread of coronavirus.Tirumala Tirupati Devasthanams closed its footways at around 3.40 PM. Now, only devotees who have already reached Tirumala can have darshan on Thursday
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X