For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சனிப்பெயர்ச்சி 2020: திருநள்ளாறு கோவிலில் டிசம்பரில்தான் - கோவில் நிர்வாகம் அறிவிப்பு

காரைக்கால் திருநள்ளாறு தர்பாராண்யேஸ்வரர் கோவிலில் வருகிற 27.12.2020 அன்று அதிகாலை 5.22 மணிக்கு சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளது. சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார் அப்போது சி

Google Oneindia Tamil News

Recommended Video

    Sani Peyarchi 2020 | Mesham | சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- மேஷ ராசிக்கு பலன்கள் எப்படி ?

    சென்னை: சனிப்பெயர்ச்சி திருக்கணிதப்பஞ்சாங்கப்படி வரும் 24ஆம் தேதி நிகழ்கிறது. தை மாதம் 10ஆம் தேதி சனிபகவான் தற்போது உள்ள தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் கடந்த இரண்டரை ஆண்டுகாலம் கஷ்டப்பட்ட பலருக்கும் கஷ்டங்கள் நீங்கி நன்மைகள் நடைபெறும். அதே நேரம் வாக்கிய பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி இந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதிதான் நிகழ்கிறது. அந்த சனிப்பெயர்ச்சி நாளில்தான் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாராண்யேஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

    ஜாதகக் கணிப்பில் இரண்டு முறைகள் இருக்கின்றன. ஒன்று வாக்கிய மற்றொன்று திருக்கணித முறை. இதில் எந்த முறையில் கணிப்பது? முதன் முதலில் வந்தது வாக்கிய முறை. அதற்குப்பின், வாக்கிய முறையில் உள்ள குறைகளைக் களைந்து வந்தது திருக்கணித முறை. திருக்கணித முறை தற்காலக் கணிதத்துடன் ஒத்துப்போகிறது.

    Tirunallar Temple Dharbaranyeswarar Temple Sani Peyarchi 2020

    திருக்கணிதப்பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி வரும் வெள்ளிக்கிழமை நிகழ்கிறது. பல கோவில்களில் வாக்கிய பஞ்சாங்கப்படி முக்கிய கோவில்களில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. காரைக்கால் திருநள்ளாறு தர்பாராண்யேஸ்வரர் கோவில் உலக பிரசித்திபெற்றது. இங்கு தனி சன்னதி கொண்டு சனீஸ்வரர் அருள்பாலிக்கிறார். சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் இங்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    திருக்கணித பஞ்சாங்கத்தின் படி வருகிற 24ஆம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் சிலர் இந்த முறைப்படி சனிப்பெயர்ச்சி விழா கொண்டாடி வருகின்றனர். தர்பாராண்யேஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டு இறுதியில் அதாவது டிசம்பர் 27ஆம் தேதி தான் சனிப்பெயர்ச்சி விழா கொண்டாடப்பட உள்ளது.

    இது குறித்து தர்பாராண்யேஸ்வரர் கோவில் நிர்வாக அதிகாரி சுபாஷ் ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், காரைக்கால் திருநள்ளாறு தர்பாராண்யேஸ்வரர் கோவிலில் தனி சன்னதிகொண்டுள்ள சனீஸ்வரர் கோவிலில் இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை தான் சனிபெயர்ச்சி நடைபெறும். வருகிற 27.12.2020 அன்று அதிகாலை 5.22 மணிக்கு சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியின் போது, சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார். இந்த சனிப்பெயர்ச்சியின் போதுதான் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற உள்ளது.

    English summary
    Dharbaranyeswarar Temple management on the occasion of Sani Peyarchi, transit of Saturn from Dhanusu rasi to Makaram Rasi on December 27th,2020 which happens once in two and a half years.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X