• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காந்தி ஜெயந்தியும் குடி மகன்களும்... - குடிப்பழக்கம் நீங்க யாரை வணங்கவேண்டும் தெரியுமா?

By Lekaha
|

-அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சென்னை: இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து மதுபான கடைகளுக்கும் விடுமுறையளிக்கப்பட்டதால் சிலர் முன்னேற்பாடாக வாங்கி வைத்துவிட்டாலும் 'குடிமகன்கள்' சிலர் கடைகளின் அருகே ஏக்கத்துடன் சுற்றிவருவதை காணமுடிகிறது.

நமது இந்திய சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட நமது இந்தியாவின் 'தேசத் தந்தை' என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த தினத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 ஆம் தேதியை 'காந்தி ஜெயந்தி' ஆகக் கொண்டாடுகிறோம்.

தனது வாழ்நாளில் மகாத்மா காந்தி தீவிரமாக வலியுறுத்திய விஷயங்களில் மது விலக்கும் ஒன்று. இந்தியா சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகள் கடந்து விட்டது.மகாத்மாவின் நோக்கம் இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை என்றுதான் கூறவேண்டும்.

மதுவிலக்கை பொருத்தவரை அரசை மட்டுமே குறை கூறிக்கொண்டிருப்பது தவறு. குடிப்பவர்களுக்கு சுயகட்டுப்பாடு இருந்தால்தான் மது பழக்கம் மட்டுமின்றி எந்த ஒரு தீய பழக்கத்தையும் கட்டுப்படுத்த முடியும்.

குடிப்பழக்கம்:

குடிப்பழக்கம்:

வேடிக்கை விளையாட்டாக மகிழ்ச்சியாக தொடங்கிய மது பழக்கம் மெல்ல மெல்ல பழகி அடிமைத்தனமாகி விடுகிறது. போதையால் மாறிப்போன வாழ்க்கை பல குடும்பங்களை சின்னா பின்னமாகி சீரழித்து கொண்டு இருப்பதை நாம் தினசரி செய்திகளில் படித்து கொண்டே இருக்கிறோம். இப்போது ஒன்றும் குடி முழுகி போய் விடவில்லை என்று பொறுத்து பொறுத்து, செய்வது அறியாது பூதாகரமாய் ஆன நிலையில் குடும்ப உறுப்பினர்கள் படும்பாடு சொல்லி மாளாது.

மது குடிப்பது முதலில் சாதாரணப் பழக்கமாகத்தான் ஆரம்பிக்கும். ஆரம்பிக்கும்போதே யாரும் முழு பாட்டிலையும் குடிப்பதில்லை, குடிக்கவும் முடியாது. சில மாதங்கள் அல்லது வருடங்களில் மூளையில் ஆல்கஹால் சில ரசாயன மாற்றங்களை ஏற்படுத்துவதன் காரணமாக, சாதாரண போதையைத் தருவதற்குக்கூட அதிக அளவு மது தேவைப்படும். இதனால்தான் ஆரம்பித்துச் சில வருடங்களில் பாட்டில் கணக்கில் குடிக்க ஆரம்பிக்கி றார்கள். ஒரு கட்டத்தில் குடியை விட முடியாத அளவுக்கு மனநோயாளி யாகவே மாறி விடுகிறார்கள்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதற்கு கூறும் காரணங்கள்:

குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதற்கு கூறும் காரணங்கள்:

பெரும்பாலும் குடிப்பவர்களைக் கேட்டால் தாங்கள் குடிப்பதற்கு ஒவ்வொருவரும் ஒரு காரணம் சொல்வார்கள். கூலி வேலைக்குச் செல்பவர்கள் தங்கள் உடல்வலியை போக்கக் குடிப்பதாகவும், இளம்வயதினரைக் கேட்டால் நண்பர்கள் கட்டாயப்படுத்துவதால் அல்லது ஜாலி மூடில் இருந்ததால் குடிப்பதாகவும், சிலர் கவலையை மறக்கக் குடிப்பதாகவும் காரணம் சொல்வார்கள். இப்படிப்பட்ட பல்வேறு சாக்குப்போக்குகள்தான் நாளடைவில் குடியைத் தொடர்வதற்குக் காரணமாகிவிடும்.

காதல் தோல்வி

குடும்பத்தில் பிரச்சினை

வேலையின்மை

குடிப்பது ஓர் நாகரீகம்

வெளிநாட்டு வாழ்க்கையில் தோன்றும் மன அழுத்தம்

கடன் சுமை

அதிக வேலையால் ஏற்படும் மன அழுத்தம்

ஆனால் இவை எதுவும் உண்மை காரணமல்ல. தன்னை நியாயப்படுத்தி அடுத்தவர் தன்னில் பரிதாபப்ப்படும்படி காரனத்தை கூறி குடிப்பதை ஞாயபடுத்தி குடியை தொடர்வதற்காக கூறப்படும் ஒரு காரணங்கள் இவை. சிலர் மதுவில் அப்படி என்ன தான் இருக்கிறது என்று தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்தில் குடிப்பார்கள். பின்னர் அடிமையாகி விடுவார்கள்.

ஜோதிடத்தில் குடிப்பழக்கத்திற்கான கிரஹ நிலை:

ஜோதிடத்தில் குடிப்பழக்கத்திற்கான கிரஹ நிலை:

குடி பழக்கத்திற்கான காரக வீடு கால புருஷனுக்கு பன்னிரெண்டாம் வீடான மீனம் மற்றும் ஜெனன ஜாதக பன்னிரெண்டாம் பாவமும் ஆகும். மேலும் குடிப்பழக்கத்திற்கு காரக கிரஹம் செவ்வாய் என்கிறது பாரம்பரிய ஜோதிடம்.

குருவின் பார்வையோ சேரிக்கையோ இன்றி செவ்வாய் கால புருஷனுக்கு பன்னிரெண்டான் மீனத்திலோ அல்லது ஜாதக பன்னிரெண்டில் நிற்பது

செவ்வாயும் சந்திரனும் நீர் ராசியில் சேர்க்கை பெற்று நிற்பது.

செவ்வாயும் சந்திரனும் நீர் ராசியில் சேர்க்கை பெற்று நிற்பது.

பலமிழந்த சூரியனோ அல்லது சந்திரனோ நீர் ராசியில் நிற்பது அல்லது நெருப்பு ராசியில் மாறி மாறி நிற்பது. முக்கியமாக விருச்சிகத்தில் நிற்பது.

காலபுருஷனுக்கு எட்டாம் வீடான விருச்சிகத்தில் நிற்கும் கிரஹங்கள் விடமுடியாத பழக்கத்தை கூறும். எந்த லக்னமாக இருந்தாலும் விருச்சிகத்தில் செவ்வாய் ஆட்சியாகிவிட்டால் மதுபழக்கம் கட்டாயம் இருக்கும்.

விருச்சிகத்தில் சந்திரன் நீசமாகி நின்று அதை செவ்வாய் ரிஷபத்தில் நின்று பார்த்துவிட்டால் தீவிர குடிப்பழக்கம் ஏற்படும்.

விருச்சிகத்தில் ராகு சந்திரனோடு சேர்ந்து நின்று அதை செவ்வாயும் கேதுவும் பார்த்தாலும் விருச்சிகத்தில் ராகுவோடு செவ்வாய் சேர்ந்து நின்று உச்ச சந்திரனும் கேதுவும் பார்த்தாலும் அவர்கள் சாதா தண்ணீரை எல்லாம் பருக மாட்டார்கள். இருபத்திநான்கு மணி நேரமும் சுண்ட "காய்ச்சிய" தண்ணீரைதான் குடிப்பார்கள்.

மேற்கண்ட கிரஹ நிலையோடு விருச்சிகத்தில் கேது அல்லது சனி நின்றுவிட்டால் அவர்கள் கள்ளு, சுண்டகஞ்சி முதலிய விலை குறைந்த வஸ்துகளையும் விட மாட்டார்கள்.

மேஷம் மற்றும் கன்னி ராசியை லக்னமாக கொண்டு விருச்சுக ராசி எட்டாமிடமாகவோ அல்லது எட்டுக்கு எட்டான மூன்றாகவோ அமைந்து அங்கு சுக்கிரன், நீச சந்திரனுடன் சேர்ந்த ராகு அல்லது கேது, மற்றும் செவ்வாய், சனி போன்ற கிரஹங்கள் நின்றுவிட்டால் பெருங்குடிகாரர்கள் என்கிறது பாரம்பரிய ஜோதிடம்.

பொதுவாகவே ஜல ராசியான கடகம், விருச்சிகம் மற்றும் மீனம் ஆகிய ராசிகள் "ஜல" கண்டேஸ்வரர் கோயிலுக்கு செல்வதை ஊக்குவிக்கும் ராசிகள் ஆகும். இதன் அதிபதிகளான சந்திரன், செவ்வாய் இவற்றின் சேர்க்கை வக்ரம் பெற்ற குருவுடன் சேர்ந்துவிட்டால் பெருங்குடிமகன்களாக திகழ்வார்கள்.

மீனத்தில் உச்சமான சுக்கிரனுடன் குரு பார்வை சேர்க்கை இன்றி செவ்வாய்-சந்திரன், செவ்வாய் ராகு, செவ்வாய்-கேது போன்ற கிரஹங்களின் சேர்க்கை ஏற்பட்டுவிட்டால் அவர்களுக்கு தீவிர குடிப்பழக்கம் இருக்கும். சுக்கிர சேர்கையால் சொகுசாக ஏசி பார்களில் உயர்ந்த வகை மது அருந்துவதை விரும்புவார்கள்.

மேற்கத்திய ஜோதிடத்தில் குடிப்பழக்கத்திற்கு காரக கிரஹமாக நெப்ட்யூனை குறிப்பிடுகின்றனர். ஒருவரது ஜாதகத்தில் நெப்ட்யூன் மீனத்திலோ அல்லது பன்னிரெண்டாம் வீட்டிலோ நின்றால் குடிப்பழக்கத்திற்கு ஆளாவர் எனகின்றனர். மேலும் புளுட்டோவின் சேர்க்கையும் குடிப்பழக்கத்தை தெரிவிப்பதாக குறிப்பிடுகின்றனர்.

குடிப்பழக்கத்தை நிறுத்தும் எளிய பரிகாரங்கள்:

குடிப்பழக்கத்தை நிறுத்தும் எளிய பரிகாரங்கள்:

1. குடிப்பழக்கத்தை நிறுத்த குருவின் அருள் மிகவும் முக்கியமானதாகும். குடிப்பழக்கத்திலிருந்து விடுபட விரும்புபவர்கள் குருஸ்தலங்களுக்கு வியாழக்கிழமைகளில் செல்வது சிறந்த பலனளிக்கும்.

2. குடிப்பழக்கத்திற்கான முக்கிய கிரகமாக செவ்வாய் விளங்குவதால் குரு மற்றும் செவ்வாய் இருவருக்கும் சேர்ந்து ஒரே ஸ்தலமாக விளங்கும் திருச்செந்தூர் சென்றுவருவது குடிப்பழக்கத்திலிருந்து விடுவிக்கும்.

3. கர்மவினையின் காரணமாகவே குடிப்பழக்கம் ஏற்படுகிறது. கர்மவினையை தீர்ப்பதில் சித்தர்களின் பங்கு விவரிக்கியலாததாகும். எனவே வியாழக்கிழமைகளில் சித்தர்களின் ஜீவ சமாதிகளில் வழிபடுவது சிறந்த பயனளிக்கும் பரிகாரமாகும்.

4. குடிப்பழக்கம் என்பது பஞ்சபூதங்களில் ஜலத்தினால் ஏற்படும் ஒரு தோஷமாகும். எனவே குடிப்பழக்கம் உள்ளவர்கள் பஞ்சபூதஸ்தலங்களில் நீரினை குறிக்கும் திருச்சி திருவானைக்காவலில் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுரை ஜெம்புகேஸ்வரரை திங்கள் கிழமைகளில் வணங்கிவர குடிப்பழக்கம் அறவே நீங்கும்.

குடிக்கு அடிமையானவர் அப்படி ஒரு நாளில் நிறுத்துவது ஆபத்து. சிலருக்கு பாதிப்பை தராவிட்டாலும் பலருக்கு பாதிப்பை தரும். எனவே குறைத்து குறைத்து கொண்டு வந்து நிறுத்துவது நல்லது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Gandhi Jayanti is a national holiday in India celebrated on 2nd October. This day is celebrated in the honor of the birthday of the Father of the nation, Mohandas Karamchand Gandhi, popularly known as Mahatma Gandhi or Bapuji. Internationally this day is celebrated as the International Day of Non-Violence as Gandhiji was the preacher of non-violence. He is a symbol of peace and truth.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more