• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மறதி நோய் என்னும் அல்ஸைமர் நோய் - காரணமும் ஜோதிட பரிகாரங்களும்

By Staff
|

-அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சென்னை: நம்மில் எத்தனை பேருக்கு அல்சைமர் என்ற மூளைதேய்வு நோயை பற்றி தெரியும்? அல்சைமர் நோயையும் அதனோடு தொடர்புடைய முதுமை மறதியையும் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21ம் நாள் உலக அல்சைமர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

தற்கால பரபரப்பான சூழ்நிலையில் பெரும்பாலானோர் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நினைவாற்றலையும், பகுத்தறிவு ஆற்றலையும் இழந்து போவார்கள்.

குழந்தைகளிடையேயும் இந்நோய் சாதாரணமாகக் காணப்படுகிறது. ஆகவே இந்த அல்சைமர் நோய் உண்டாக்கும் அறிகுறிகள் மற்றும் அதனை தடுக்க உண்டான வழிமுறைகளை பற்றி கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும்.

Today is World Alzheimer's day

பெயரை மறப்பது, பொருளை தொலைப்பது, குறித்த சந்திப்புக்களை மறப்பது, வார்த்தைகளை கண்டுபிடிக்க திணறுவது, ஞாபகம் வைத்துக் கொள்வது, புதிதாக கற்பதில் பிரச்சனை ஏற்படுவது போன்றவைகள் ஒரு குணமாக மாறத் தொடங்கிவிடும். பல வகை டிமென்ஷியா (ஞாபக மறதி) உள்ளது. அதனால் நீண்ட கால மறதி அல்லது குறைந்த கால மறதி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதனால் சிலசமயங்களில் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களையும் கூட மறந்து விடுவார்கள்.யோசிப்பதில் திணறுவது எழுத்து மற்றும் எண்களை அடையாளம் காண்பதில் பிரச்சனை, கணக்கிடுதலில் பிரச்சனை போன்றவைகள் ஏற்படும். ஏன், தங்களின் சொந்த வரவு செலவு கணக்குளைப் பராமரிப்பதில் கூட தடுமாறுவார்கள்.

இந்த வியாதி உள்ளவர்கள் இயல்பற்ற நிலையில் இருப்பார்கள். கீழே விழுந்து விடுவோம் என்ற பயத்தினால் சமையல், வாகனம் ஓட்டுவது, வீட்டு வேலை போன்ற வேலைகளை செய்ய கஷ்டப்படுவார்கள். இந்த வியாதி முற்றும் போது, தினசரி நடவடிக்கைகளான குளியல், ஆடை அலங்காரம், உண்ணுதல் மற்றும் கழிப்பறை விஷயங்களை கூட துணையில்லாமல் புரிய முடியாது.

இந்த வியாதியினால் தற்போதைய நேரம், தேதி மற்றும் நாளை மறந்து விடுவார்கள். ஏன், ஆட்களையும் இடங்களையும் கூட அடையாளம் காண முடியாமல் போய் விடுவார்கள். தங்கள் வீட்டின் முகவரி, வேலை பார்க்கும் அலுவலகம் போன்றவற்றை கூட மறந்து விடுவார்கள்.

தொடர்பாற்றலில் பிரச்சனை தாங்கள் பேசும் மொழியை பயன்படுத்துவதில் பிரச்சனை, வார்த்தைகளை வெளிப்படுத்துவதில் பிரச்சனை அல்லது வார்த்தைகளை எழுதுவதில் பிரச்சனை போன்றவற்றை இந்த நோய் உள்ளவர்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.

அதீத பயம் மற்றும் கவலையினால் சித்தப் பிரமை உண்டாகலாம். இது மெதுவாக மாயத்தோற்றங்களை உண்டாக்கும். உணர்ச்சிவசப்படுதல், சந்தேகம், கோபம், அழுத்தம், பிடிவாதம், மூர்க்கத்தனம், பொறாமை, சுயநலம், சமுதாயத்தில் இருந்து விலகி நிற்பது போன்ற மாற்றங்களை சந்திக்க நேரிடும்.

அல்சைமர் நோய் தாக்கப்படும் நான்கில் ஒருவர் இளமை பருவத்தில் தலையில் காயம் ஏற்பட்டவராக இருப்பர். அதிலும் நடுத்தர வயதினர், தலையில் காயத்தை ஏற்படுத்தி கொண்டால், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இந்த நோயால் தாக்கப்படலாம். திகைக்க வைக்கிறது அல்லவா? குறிப்பாக மற்றவர்களை விட கால் பந்து விளையாடுபவர்களுக்கு தான் பல வகையான ஞாபக நோய்கள் தாக்க 19 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது. அதனால் தலையை காத்திடுங்கள்.

சளி, தொண்டை புண், அல்சர், நுரையீரல் அழற்சி மற்றும் ப்ளூ போன்ற தொற்றுக்கள் அல்சைமரை ஏற்படுத்தும். ஈறுகளில் ஏற்படும் தொற்றுகள் மூளைக்கு பாக்டீரியாவை அனுப்பும். அதனால் பற்களை நன்றாக துலக்கி, அவ்வகை தொற்றுக்களில் இருந்து விடுபடுங்கள்.

ஜோதிடத்தில் அல்ஸைமர் நோய்க்கான காரணங்கள்:

அல்ஸைமர் எனும் மறதி நோய் ஒரு மூளை சம்மந்தப்பட்ட வியாதியாகும். எனவே கால புருஷனுக்கு லக்னமான மேஷமும் ஜாதகத்தில் லக்னம் லக்னாதிபதி ஆகிய கிரகங்களை கொண்டு மூளையின் தன்மையை அறியமுடியும்.

லக்னாதிபதி 6/8/12 அதிபதிகளின் தொடர்பு மற்றும் நீச சந்திரன், தேய்பிறை சந்திரன், பாதகாதிபதி, விஷ சூன்யாதிபதி போன்ற அசுப தொடர்புகள் இல்லாமல் இருப்பது மூளையின் பலத்தை தீர்மானிக்கும்.

அடுத்தபடியாக மூளையின் செயல் திறன், ஞாபக சக்தி, கற்கும் திறன்,அறிவு, யோசிக்கும் தன்மை, சிந்தனை திறன் ஆகியவற்றை குறிக்குமிடம் ஐந்தாம் பாவமாகும். கால புருஷனுக்கு ஐந்தாம் வீடான சிம்மத்தின் அதிபதி சூரியன் மேஷத்தில் உச்சமாவது மூளைக்கும் சூரியனுக்கும் உள்ள தொடர்பை கூறும்.

ஜோதிடத்தில் புதனுக்கும் புத்திக்கும் தொடர்பு உள்ளது. புத பகவான் அறிவு, ஆற்றல், வித்தைக்கு காரண கர்த்தாவாக விளங்குபவர். அவர் 'வித்தைக் காரகன்' என அழைக்கப்படுகிறார். எண்ணங்களின் சேர்க்கையே மனம். மனத்தை ஆள்பவன் சந்திரன். அந்த சந்திரனின் புத்திரன்தான் புதன். எனவேதான் மனத்தின் எண்ண ஓட்டத்துக்கும் அறிவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

ஜாதகத்தில் புதன் பலமாக இருப்பது பல நலன்களை சேர்க்கும். புதன் பலவீனமாக இருக்கிற பட்சத்தில் உடல்ரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படலாம். புதன் பலவீனமாக இருந்தாலும், நீச்சம் மற்றும் 6, 8, 12 ம் இட கிரகங்களுடன் சேர்ந்தாலும் ஒற்றைத் தலைவலி, கை கால் வலிப்பு, நரம்பு தளர்ச்சி, பய உணர்வு, சஞ்சலம், சபலம், புத்தி சுவாதீனம் இல்லாமை, கழுத்து நரம்பு வலி, ஆண்மைக் குறைவு ஆகிய பிரச்னைகள் ஏற்படலாம

அல்ஸைமர் எனும் மறதி நோயை ஏற்படுத்தும் கிரஹ நிலைகள்:

1. லக்னம் அல்லது லக்னாதிபதி 6/8/12 தொடர்பு பெற்று நிறப்பது.

2. லக்னத்தில் மாந்தி நிற்பது தலையில் அடிபட வைத்து அதனால் மறதி நோய் ஏற்படும். லக்னத்தில் மாந்தி இருப்பவர்களுக்கெல்லாம் சண்டை வரும்போது தலையில் அடித்துக்கொள்ளுதல், சுவற்றில் முட்டிக்கொள்ளுதல் போன்ற வழக்கம் இருக்கும்.

3. புதன் 6/8/12 தொடர்பு பெற்று அசுபத்தன்மை பெறுவது.

4. புதனுடன் சனி, செவ்வாய், கேது போன்ற கிரஹங்களின் சேர்க்கை பெற்று எந்த வீட்டில் நின்றாலும் மறதி நோய் ஏற்படும்.

5. லக்னத்தில் சனி ஆறாமதிபதி, நின்று அவற்றோடு புதனும் அசுப சந்திரனும் தொடர்பு பெறுவது.

6. சந்திரனும் புதனும் இணைந்து 6/8/12 ஆகிய வீடுகளில் நின்று மற்ற அசுப கிரஹ தொடர்பு பெறுவது.

7. புதன் சூரியனின் பின் அஸ்தங்க நிலையில் நின்று சனி கேது போன்ற அசுப கிரஹங்களின் சேர்க்கை பெறுவது.

8. புதன் 6/8/12 அதிபதிகள் மற்றும் தேய்பிறை சந்திரன், செவ்வாய், சனி கேது ஆகிய கிரஹங்களுடன் சேர்ந்து ஐந்தாம் பாவத்தில் நிற்பது.

9. புதன் மீனத்தில் நின்று நீச பங்கம் அடையாமல் அசுப கிரஹங்களின் தொடர்பு பெறுவது.

அல்ஸைமர் எனும் மறதி நோய் நீங்க பரிகாரங்கள்:

1. புதபகவானை வணங்குவதன் மூலம் நோய்களில் இருந்து விடுபடலாம். கும்பகோணத்தில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் இருக்கும் திருவெண்காடு புதன் ஸ்தலமாகும். தனி சன்னதியில் புத பகவான் அருள்புரிகிறார். மதுரையில் மீனாட்சி அம்மன் புதன் அம்சமாகவே இருக்கிறார்.

2. புதனின் அதிதேவதை விஷ்னு பகவானாவார். அசுரர்களிடமிருந்து வேதத்தை காக்க மகாவிஷ்னு எடுத்த அவதாரங்களில் ஸ்ரீ ஹயக்ரீவர் அவதாரம் குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ லக்ஷமி ஹயக்ரிவர் கல்விக்கதிபதியான சரஸ்வதியன் குரு என புரானங்கள் போற்றுகின்றன. ஸ்ரீ லக்ஷமி ஹயக்ரிவ மூர்த்தியை செங்கல்பட்டுக்கருகே இருக்கும் செட்டிபுண்ணியம், கடலூர் திருவஹிந்திபுரம் போன்ற ஸ்தலங்களில் வணங்குவது கல்வியறிவையும் ஞாபக சக்தியையும் பெருக்குவதோடு புத்திக்கூர்மையையும் அளிக்கும். மேலும் கல்வித்தடை நீங்கும்.

3. புதனுக்குகந்த தானியமான பச்சை பயறு சுண்டல், பயத்தலாடு போன்றவை செய்து நவக்கிரக புதனுக்கு அல்லது ஸ்ரீலக்ஷமி ஹயக்ரீவ மூர்த்திக்கு நிவேதனம் செய்து பல குழந்தைகளுக்கு வினியோகம் செய்யவது

4. மும்மூர்த்திகளும் வாசம் செய்யும் அரசமர பிரதக்ஷிணம் ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

5. வல்லாரரை கீரை அடிக்கடி சாப்பிடுவது, ப்ரம்மி நிறைந்த ஆயுர்வேத மருந்துகளை மருத்துவர் ஆலோசனையுடன் சாப்பிடுவது.

6. சரியான நேரத்தில் தூங்குவது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
World Alzheimer's Month was launched in 2012. World Alzheimer's Day is on 21 September each year.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more