For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தோல் நோய் நீங்கனுமா? யோகினி ஏகாதசி விரதம் இருங்க!

By Staff
Google Oneindia Tamil News

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சென்னை: சூரியன் திசைமாறி சஞ்சரிக்கும் ஆரம்ப காலம் ஆடிமாதம். இந்த மாதம் ஆன்மிக மாதமாக எங்கெங்கு பார்த்தாலும் திருவிழாக்கோலமாக இருக்கும். அம்மன் கோவில்களில் பல்வேறு விசேஷ வைபவங்கள் நடைபெறும். இன்று அனைத்து வைஷ்ணவ தலங்களிலும் யோகினி ஏகாதசி விரதமும் ஸ்ரீ மகா விஷ்னுவிற்க்கு சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றன.

குபேரன் சிவபூஜை செய்யும்போது, அவனுக்குப் பூக்களைக் கொண்டு வரும் வேலையை ஹேமமாலி என்பவன் செய்து வந்தான். மனைவியிடம் மிகுந்த அன்பு கொண்ட ஹேமமாலி ஒரு நாள், மனைவியுடன் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்ததால், குபேரனின் பூஜைக்குப் பூக்களைக் கொண்டு போகவில்லை.

today is yogini ekadasi fast to get rid of skin diseases

பூஜையின்போது பூக்கள் இல்லாததைக் கண்ட குபேரன் கோபத்தில் குதித்தான். "தவறு செய்த ஹேமமாலிக்குப் பதினெட்டு விதமான குஷ்ட ரோகங்கள் வரட்டும்" என்று சபித்தான்.

ஹேமமாலியைக் குஷ்ட ரோகம் பீடித்தது. அவன் மனைவி விசாலாட்சி உள்ளம் உடைந்தாள். கணவன் மனைவி இருவருமாக மேரு மலைக்குப் போய், அங்கே தவம் செய்து கொண்டிருந்த மார்க்கண்டேயரின் திருவடிகளில் வீழ்ந்தார்கள்.

அவர் "யோகினி ஏகாதசி''யை அவர்களுக்கு உபதேசித்தார். அதன்படியே விரதம் இருந்து மகாவிஷ்ணுவை பூஜித்த ஹேமமாலி நோய் நீங்க பெற்றான். குபேரபுரிக்கே திரும்பினான்.

தொழுநோய்க்கான ஜோதிட காரணங்களும் கிரக நிலையும்:

தொழுநோய்கான காரக கிரகம் புதன் மற்றும் ஆறாம் பாவம் ஆகியவற்றின் நிலையை கொண்டு அறியலாம். தொழுநோய் தோல் நோய் வகையை சார்ந்தது என்பதால் புதனை காரக கிரகமாக கருதினாலும் தொழுநோய்க்கு முக்கிய காரக கிரகமாக கூறப்படுவது ராஜ கிரகமான சூரியனே ஆகும். என்றாலும் தொழுநோயின் அடிப்படை காரணங்கள், அறிகுறிகள் விளைவுகள் இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு பார்த்தால் அனைத்து கிரகங்களுமே காரகமாகிவிடுகின்றனர்.

தொழுநோய்க்கான காரக கிரகங்கள்

சூரியன்:

கால புருஷனுக்கு ஆத்ம காரகன் என்பதாலும் உடல் முழுவதிற்க்கும் சூரியன் காரகமாவதால் தொழுநோய்க்கும் சூரியன் முதன்மை காரகம் வகிக்கிறார். மேலும் வைட்டமின் D குறைபாடும் தோல் நோயிற்க்கு காரணம் என்கின்றனர் அறிவியலார். வைட்டமின் D க்கு காரக கிரகம் சூரியனாகும். மேலும் நமக்கு தேவையான வைட்டமின் D சூரிய வெளிச்சத்திலிருந்துதான் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரன்:

நமது ஜாதகத்தில் லக்கினத்தை உயிராகவும் ராசியை உடலாகவும் கூறுவர். ராசி என்பது சந்திரன் இருக்கும் இடம்தான். ஆக உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு சந்திரன் காரகனாகிறார். மேலும் தொழுநாய் சளி மற்றும் நீர், காற்றினால் பரவுவதால் சந்திரன் காரகனாகிறார்.

செவ்வாய்:

காலபுருஷனுக்கு லக்னாதிபதி என்பதாலும் தோலுக்கு செவ்வாய் காரகத்துவம் வகிப்பதால் தோல் நோயான தொழுநாய்க்கு செவ்வாய் எனப்படும் அங்காரகனின் நிலையும் முக்கியமாகும்.

புதன்:

அனைத்து தோல் மற்றும் நரம்பு கோளாருகளுக்கு புதனே காரகமாவார். தொழுநோயாளிகளுக்கு தோலில் பல மாற்றங்கள் ஏற்படுவதும் நரம்பு செயலிழப்பது மற்றும் மரத்துபோகும் தன்மை ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

குரு:

குருவினால் நேரடியாக பாதிப்புகள் இல்லையென்றாலும் தொழுநோயை கர்ம வினையினால் ஏற்படும் நோய் என்றே ஜோதிடத்தில் கூறப்படுகிறது. எனவே ஒருவரின் ஜாதகத்தில் குருவின் நிலையை கொண்டு கர்ம வினையை அறிந்துக்கொள்ள முடியும். மேலும் லக்ன பாவம் மற்றும் குருவின் நிலை ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை தெரிவிக்கிறது. நோய் எதிர்ப்பு குறைந்தவர்களையே தொழுநோய் பீடிக்கிறது என மருத்துவ ஜோதிடம் கூறுகிறது.

சுக்கிரன்:

தொழுநோய் சளி மற்றும் நீரினால் பரவுவதால் சுக்கிரனும் காரகமாகிரார். மேலும் உடலிலுள்ள அசுத்தங்கள் வேர்வை மூலமாகவோ அல்லது சிறுநீர் மூலமாகவோ வெளியேறவில்லை என்றால் அது சரும நோயாக உருவெடுத்து தோல் அழுகுதல், சீழ் பிடித்தல் சிறங்கு, கொப்புளங்கள் என பலவித சரும வியாதிகள் தோன்றுகின்றன. உடலிலுள்ள அசுத்தங்கள் வெளியேற சிறுநீரகத்தின் பங்கு முக்கியமானதாகும். சிறுநீரகத்திற்க்கு சுக்கிரன் காரகனாவதால் தொழுநோய் மற்றும் அனைத்து சரும நோய்களுக்கும் சுக்கிரன் காரகமாகின்றார்.

சனி:

உடம்பின் கட்டமைப்பின் காரகர் சனியாவார். மேலும் தொழுநோய் ஏற்படும்போது உடலுருப்புகள் செயலிழப்பு, வாதத்தன்மை, அங்கஹீனம் ஆகியவை ஏற்படுவது சனியின் காரகத்தன்மை ஆகும்.

ராகு/கேது:

சூரியன் புதனுக்கு அடுத்தபடியாக தொழுநோயுக்கு முக்கிய அங்கம் வகிப்பவர்கள் ராகு மற்றும் கேது ஆவர். உடலில் கருப்பு மற்றும் வெள்ளை நிற புள்ளிகள் தோன்றுவது, தோலின் அடுக்குகளிலுள்ள அனஸ்தீஷியாவை செயலிழக்க செய்வதால் தொழுநொய் ஏற்பட்டவர்களுக்கு உடல் மரத்து வலி மற்றும் உணர்ச்சியற்ற நிலை ஏற்படும். மேலும் அங்கஹீனம், உருவ மாற்றம், நுன்னுயிர் கிருமியினால் காற்றில் பரவுதல் போன்றவற்றிற்க்கு ஸர்ப கிரகங்களே காரகர் ஆவர். மேலும் ஒருவரின் கர்ம விணைகளை ஜாதகத்திலு தெரிவித்து அதை அனுபவிக்க செய்பவர்களும் இவர்களே!

தொழுநோய் மற்றும் தோல் நோய்க்கான கிரக சேர்க்கைகள்:

1. சூரியன், சுக்கிரன் மற்றும் சனி எந்த ராசியிலும் இணைவு பெறுவது.

2. சந்திரன் மிதுன கடக மீன நவாம்சத்தில் இருந்து சனி மற்றும் செவ்வாயுடன் தொடர்பு கொள்வது.

3.லக்னாதிபதி, சந்திரன் மற்றும் புதன் ராகு கேதுவுடன் சேர்க்கை பெறுவது.

4. செவ்வாய் லக்னத்தில் நின்று சூரியனும் சனியும் முறையே எட்டு மற்றும் நான்காம் வீடுகளில் நிற்பது.

5.சனி,செவ்வாய் மற்றும் சந்திரன் பாப கிரக சேர்க்கை பெறுவது.

6. ஆறாம் வீட்டதிபதி லக்னத்தில் நிற்க்கும் சூரியன்,செவ்வாய் மற்றும் சனியுடன் தொடர்பு கொள்வது

7. சந்திரன் காரகாம்சத்தில் நான்கில் நின்று கேது/செவ்வாய்/சுக்கிரன் ஆகியவர்களுடன் தொடர்பு கொள்வது.

8. லக்னாதிபதி எந்த ராசியில் ராகு கேதுவுடன் சேர்க்கை பெற்றாலும்/சந்திரனும் செவ்வாயும் இணைந்து எந்த ராசியில் நின்று ராகு கேதுவுடன் சேர்க்கை பெற்றாலும்/ லக்னாதிபதியும் புதனுமோ அல்லது சந்திரனும் செவ்வாயுமோ எந்த ராசியில் நின்று ராகு கேதுவுடன் சேர்க்கை பெற்றாலும் ஜாதகருக்கு வென்குஷ்டம் எனப்படும் வெள்ளை புள்ளிகள் ஏறபடும்

9. சூரியனும் சந்திரனும் நீர் ராசியில் இணைந்து நின்றால் ஜாதகருக்கு உடம்பில் வெள்ளை புள்ளிகள் ஏற்படும்.

10, லக்னாதிபதி, செவ்வாய் மற்றும் புதன் இணைந்து நான்கு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் நிற்பது.

11. குருவும் சனியும் சந்திரனுடன் இணைந்து 6ம் வீட்டில் நிற்பது.

12.சனியும் சந்திரனும் ஆறாம் வீட்டில் நிற்பது.

13.ஆறாம் வீட்டதிபதியும் எட்டாம் வீட்டதிபதியும் 6ம் வீட்டில் இனைந்து நிற்பது.

14. பலமான சனி மூன்றாம் வீட்டில் நின்று செவ்வாயுடன் சேர்க்கை பெறுவது.

15. சஷ்டியாம்சத்தில் மூன்றாம் வீட்டில் மாந்தியுடன் ராகுவோ அல்லது செவ்வாயோ சேர்க்கை பெற்று காலகரண யோகம் பெறுவது

16. பலமிழந்த குருவும் சனியும் முறையே மூன்று ஒன்பது ஆகிய இடங்களில் நின்று சஷ்டியாம்சத்தில் கரசேத யோகம் பெறுவது.

குறிப்பு: மேலே குறிப்பிட்ட கிரக சேர்க்கைகளில் ஒன்றிரண்டு பெற்றிருந்தால் சாதாரண தோல் நோய் ஏற்படும். தொழுநோய் ஏற்பட இந்த கிரக சேர்க்கைகளில் அதிகப்படியாற சேர்க்கைகளுடன் லக்னம், லக்னாதிபதி, ஆத்ம காரகன், சந்திரன் குருவின் நிலை, கேந்திர திரிகோணங்களில் பாவர்கள், பஞ்சாம்சம், சஷ்டியாம்சம் போன்ற இடங்கள் கெட்டிருந்தால் மட்டுமே ஒருவருக்கு குஷ்டரோகம் எனப்படும் தொழுநோய் ஏற்படும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

English summary
As per the Hindu calendar, Yogini Ekadashifalls in the month of Ashadha that is during the Krishna Paksha, which is the waning phase of the moon. By the English calendar, it takes place in the month of June or July. This year it is coming on 19th July 2017.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X