For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்று மகாளய அமாவாசை - பித்ருக்களுக்கு திதி கொடுத்து புனித நீராடி வழிபாடு

மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், கன்னியாகுமரி, வேதாரண்யம், திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் உள்ளிட்ட புண்ணிய தலங்களில் உள்ள புனித நீராடிய மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மகாளய அமாவாசை - பித்ருக்களுக்கு திதி கொடுத்து புனித நீராடி வழிபாடு-வீடியோ

    சென்னை: சூரியன் கன்னி ராசிக்கு செல்லும் புரட்டாசி மாதம், எமதர்மராஜன் நமது முன்னோர்களை பூமிக்கு அனுப்புவதாக ஐதீகம். அந்த நேரத்தில் அவர்களை நாம் வணங்கினால் மனமகிழ்சியோடு ஆசீர்வாதம் செய்வார்கள்.

    புரட்டாசி மாதம் பவுர்ணமி முடிந்து பிரதமை முதல் அமாவாசை வரையிலான 15 நாட்கள் மகாளய பட்சம் எனப்படுகிறது. இந்த நாட்களில் நம் முன்னோர்கள் பூமிக்கு வந்து நாம் கொடுக்கும் தானங்களை ஏற்றுக்கொள்வதாக ஐதீகம்.

    மகாளய அமாவாசை மகாளய பட்சத்தில் வரும் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வது சிறப்பாகும்.

    இந்த நாளில் ஏழைகளுக்கு தானம் கொடுப்பதன் மூலம் உணவு கொடுப்பதன் மூலமும் நம் முன்னோர்களை திருப்தி செய்கிறோம். காக்கைக்கு உணவு அளிப்பதன் மூலம் முன்னோர்களை திருப்தி செய்ய முடியும்.

    திதி கொடுப்பது ஏன்

    திதி கொடுப்பது ஏன்

    மகாளய அமாவாசை நாளில் முன்னோர்களை திருப்தி செய்யும் வகையில் தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம். இந்நாளில் தீர்த்தத்தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து, அவர்களது தாகம் தீர்க்க வேண்டும். இந்த புண்ணிய தினங்களில் பித்ருக்கள் வழிபாடு மிகச் சிறந்த பலனை கொடுக்கும். எள் தானம் கோடி புண்ணியத்தை தரும் என்கிறது சாஸ்திரம்.

    காவிரி கரையில் வழிபாடு

    காவிரி கரையில் வழிபாடு

    திருச்சி அருகே உள்ள ஸ்ரீ ரங்கம் அம்மா மண்டபம் திதி, தர்ப்பணம் கொடுக்க சிறந்த தலமாகும். காவிரி கரைபுரண்டு ஒடும் ஸ்ரீரங்கத்தில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது நன்மை தரக்கூடியது. மகாளய பட்ச புண்ய காலத்தில் 15 நாட்களும் ஏராளமானோர் தர்ப்பணம் அளித்தனர். மகாளய அமாவாசை தினமான இன்று ஏராளமானோர் புனித நீராடி திதி கொடுத்தனர். பவானி கூடுதுறை, திருச்சி காவிரி ஆறு, திருவையாறு, மயிலாடுதுறை ஆகிய காவிரி கரையோரங்களில் திதி கொடுத்து வழிபட்டனர்.

    கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளம்

    கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளம்

    இன்று மகாளய அமாவாசை என்பதால் சென்னை மெரினா கடற்கரை, மயிலை கபாலீஸ்வரர் கோயில் குளம் உள்பட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் ஏராளமானோர் திதி கொடுத்து வழிபாடு நடத்தினர். அகத்திக்கீரை, வாழைப்பழங்களை பசு

    அக்னி தீர்த்த கடல்

    அக்னி தீர்த்த கடல்

    ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல், கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், திருச்செந்தூர் கடற்கரை, வேதாரண்யம், கோடியக்கரை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து புனித நீராடி திதி கொடுத்து இறைவனை வழிபட்டனர்.

    English summary
    Mahalaya Amavasya is the special Amavasya for worshiping your ancestors. A large number of people from various parts of the country took a holy dip in ‘Agni Theertham’ and performed poojas to their departed ancestors on the occasion of ‘Mahalaya Amavasya’ today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X