For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏய் யாருப்பா அது சூரியனை மறைக்க பாக்குறது... குட்டி புதனின் சுட்டி விளையாட்டு மிஸ் பண்ணாதீங்க

வானத்தில் சில அதிசய நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெறுவது உண்டு. இன்றைய தினம் அப்படி ஒரு அதிசயம் நடக்கப்போகிறது. விண்வெளியில் சூரியனை புதன் கிரகம் கடந்து செல்லும் அரிய நிகழ்வு நடைபெற உள்ளது. சூரியனை ராகு

Google Oneindia Tamil News

சென்னை: சூரியன், புதன் பூமி ஆகியவை இன்று ஒரே நேர் கோட்டில் சந்திக்கும் போது சூரியனை புதன் கிரகம் கடந்து செல்லும் அரிய நிகழ்வை இன்று வானத்தில் காணலாம். இதே போன்ற சம்பவம் இந்த நூற்றாண்டில் 2003, 2006ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளது. 2016ஆம் ஆண்டிலும் இந்த அதிசயம் நிகழ்ந்தது. இன்று மாலை இந்த வானியல் நிகழ்வை காண மிஸ் பண்ணிடாதீங்க. அப்புறம் இனி 2032 ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி தான் இது போன்ற அதிசயம் நடக்கும் அதுவரைக்கும் காத்திருக்கணும்.

வானத்தில் சில அதிசய நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெறுவது உண்டு. இன்றைய தினம் அப்படி ஒரு அதிசயம் நடக்கப்போகிறது. விண்வெளியில் சூரியனை புதன் கிரகம் கடந்து செல்லும் அரிய நிகழ்வு நடைபெற உள்ளது. சூரியனை ராகு கேது கிரகங்கள் மறைக்கும். இதனால் கிரகணங்கள் ஏற்படுகின்றன. புதன் குட்டி கிரகம் ஒரு கறுப்பு மச்சம் போல சூரியனை கடந்து செல்லும் இதனை புதன் மறைப்பு என்கின்றனர். புதன் மறைப்பு என்பதும் கூட சூரிய கிரகணம் போல 5 கட்டங்களில் நிகழும். புதன் சூரியனை தொடும் நேரம். அடுத்து முழுமையாய் சூரியனுக்குள் நுழைந்துவிட்ட நேரம். மூன்றாவதாக புதன் அதிக பட்ச மறைப்பு, அதாவது கடக்கும் தூரத்தில் சரி பாதி தொலைவு, பின்னர், அதன் வெளியேறும் பகுதி சூரியனின் மேற்பரப்பை தொடும் நேரம். கடைசியாக புதன் சூரியத் தட்டிலிருந்து வெளியேறிய நேரம் என 5 படிகளில் நடக்கிறது.

இன்று வானத்தில் அதிசயம்

இன்று வானத்தில் அதிசயம்

சூரியனை ஒவ்வொரு 88 நாட்களுக்கு ஒருமுறை புதன் கிரகம் சுற்றி வருகிறது. ஆனால் சூரியன், புதன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது மட்டுமே புதன் கிரகம் சூரியனை கடந்து செல்லும் நிகழ்வை நம்மால் காண முடியும். விண்வெளியில் இதுபோன்ற புதன் இடைமறிப்பு நிகழ்ச்சி கடந்த 2006ஆம் ஆண்டு நடந்தது. அதன் பின்னர் 2016 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. இன்றைய தினம் மாலையிலும் இந்த அதிசய நிகழ்வை காணலாம். கிட்டத்தட்ட ஐந்தரை மணி நேரம் நடைபெறும் இந்த நிகழ்வை அமெரிக்காவின் சில பகுதிகள் மற்றும் கனடாவில் முழுமையாக இன்று பார்க்க முடியும்.

ஒரே நேர்கோட்டில் கிரகங்கள்

ஒரே நேர்கோட்டில் கிரகங்கள்

பூமி, புதன் சூரியன் ஆகியவை 11 நாட்களுக்கு ஒரு முறை நேர்க்கோட்டில் சந்தித்தாலும், கோள் மறைவு ஏற்படுவதில்லை. பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து, புதன் ஏழு டிகிரி கோண சாய்வாக உள்ளது. புதனின் பாதை, பூமி வலம் வரும் தளத்தினை, இரண்டு புள்ளிகளில்தான் வெட்டும். அந்த புள்ளிகளில் ஏதேனும் ஒன்றில் அவை நேர்கோட்டில் சந்தித்தால் மாத்திரமே புதன் இடைமறிப்பு ஏற்படும்.

சூரியனை மறைக்கும் புதன்

சூரியனை மறைக்கும் புதன்

இந்த நிகழ்வு இன்று மாலை 4.40 மணி முதல் 6.30 மணி வரை பார்க்கலாம். இந்த காட்சியை நேரடியாக வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது.
தென் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்காவில் பகுதியளவு தெரியும். ஆனால் ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் இந்நிகழ்வை காண இயலாது. இன்றைக்கு மிஸ் பண்ணிட்டா இனி 2032ஆம் ஆண்டு நவம்பர் 13 ம் தேதி தான் இது போன்ற நிகழ்வை நம்மால் பார்க்க முடியும் எனவே இன்றைக்கு மிஸ் பண்ணிடாதீங்க.

சூரிய குடும்பம்

சூரிய குடும்பம்

ஜோதிடத்தில் நவகிரகங்களை மையமாக வைத்து ஜாதகம் கணிக்கின்றனர் பலன் சொல்கின்றனர். பால்வீதி மண்டலத்தில் உள்ள சூரிய குடும்பத்தில் சூரியனை சுற்றி எட்டு கோள்கள் உள்ளன. புதன் சூரியகுடும்பத்தில் முதல் சுற்றில் உள்ளது. இரண்டாவதாக சுக்கிரன், மூன்றவதாக பூமி உள்ளது. சூரிய குடும்பத்தின் செல்லப்பிள்ளை புதன். எப்பவுமே சூரியனுக்கு பக்கத்திலே சில சமயம் கூடவே ஒட்டிக்கொண்டிருப்பார்கள் புதனும் சுக்கிரனும். புதன் வேகமாக அதாவது 87.969 நாட்களில் சூரியனை சுற்றி விடும்.

பச்சை நிறமே பச்சை நிறமே

பச்சை நிறமே பச்சை நிறமே

ரோமானியர்கள் புதனை, கடவுளின் தூதுவர் என்கின்றனர். மெர்க்குரி எனப்படும் புதன் பச்சை நிறமுடையது. சுமேரியர்கள் புதன் நபு எனப்படும் எழுத்துக்கடவுளோடு தொடர்புபடுத்துகின்றனர். நமது வேத ஜோதிடத்திலும் புதனை கல்விக்காரகன், வித்தைக்காரகன் என்றே சொல்கின்றனர்.
புத்திசாலித்தனத்தின் அதிபதி என்று ஜோதிடத்தில் கூறப்படும் இந்த கிரகம் சாய்ந்துள்ள கோணம் வெறும் 2 பாகைதான். இதனால் ஒரே ஒரு பிரச்சினைதான் பகலில் கடுமையான வெயில், இரவில் கடுமையான குளிர் என்பதைத்தவிர வேறு பருவநிலை மாற்றங்கள் இருக்காது. புதன் ஏராளமான மேடு பள்ளங்களை கொண்டுள்ளது. கடும் வெப்பம் பகலில் 427 டிகிரி நெருப்பாய் தகிக்கும். அதே போல இரவில் -173 டிகிரி நினைச்சு பார்க்கவே நடுங்குதா, அப்படித்தான் இருக்கும் குளிர்.

குட்டி புதனின் செல்ல விளையாட்டு

குட்டி புதனின் செல்ல விளையாட்டு

பூமி சூரியனில் இருந்து மூன்றாவது சுற்றில் இருக்கிறது. அதே போல முதல் சுற்றில் உள்ள புதனும் இரண்டாவது சுற்றில் உள்ள சுக்கிரன் எனப்படும் வெள்ளியும் அடுத்தடுத்து சுற்றி வரும் போது சில நேரங்களில் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும். சூரியன் பூமிக்கு இடையில் சந்திரன் வரும் அப்போது மறைக்கப்படும் அதை கிரகணம் என்கிறோம். அதே போல குட்டி கிரகமான புதன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நகரும் போது ஒரு புள்ளியாக அதாவது உடம்பில் அழகான மச்சம் போல புள்ளி தோன்றும் இது அதிசயமான நிகழ்வாகவே அமையும்.

சூரியனை மறைக்க முயலும் புதன்

சூரியனை மறைக்க முயலும் புதன்

ஒரு நூற்றாண்டில் இந்த குட்டி கிரகமான புதன் கோள் 13 முறை சூரியனுக்கு குறுக்கே மறுக்கே ஓடிப்போய் மறைக்கும். இதனைத்தான் புதன் இடைமறைப்பு என்கின்றனர். அந்த ஒரே ஒரு நாள் பூமியின் 58.5 நாட்களுக்கு சமமானதாம். இந்த அற்புதமான நிகழ்வு 21ஆம் நூற்றாண்டில் 14 முறை நடைபெறுவதாக வானியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். புதன் மறைப்பு மே அல்லது நவம்பர் மாதங்களில் நிகழும் அதாவது சூரியன் மேஷம் ராசியில் உச்சம் பெற்றிருக்கும் போதோ அல்லது துலாம் ராசியில் நீசம் பெற்றிருக்கும் போதோ இந்த மறைப்பு நிகழ்கிறது. இந்த நூற்றாண்டில் 2003, 2006, 2016 ஆம் மே 9ஆம் தேதி நிகழ்ந்துள்ளது. இந்த ஆண்டு இன்று நவம்பர் 11ஆம் தேதி மாலை நிகழ்கிறது.

இனி எப்போது பார்க்கலாம்

இனி எப்போது பார்க்கலாம்

இன்றைக்கு வானில் நிகழும் அதிசயத்தை காண மறந்துவிட்டால் அப்புறம் இதே போன்ற ஒரு நிகழ்வு இனி 2032ஆம் ஆண்டு நவம்பர் 13 ம் தேதி தான் இது போன்ற நிகழ்வை நம்மால் பார்க்க முடியும் எனவே இன்றைக்கு மிஸ் பண்ணாம பாருங்க. இந்த நூற்றாண்டில் 2039 நவம்பர் 7 2049 ஆண்டு மே 7 ஆம் தேதியும் 2052ஆம் ஆண்டு நவம்பர் 9, 2062ல் மே 10ஆம் தேதியும் இந்த வானியல் அதிசயம் நிகழும். 2065, 2078,2085 ஆகிய ஆண்டுகளில் நவம்பர் மாதத்திலும் 2095 மே மாதத்திலும் 2098ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதியும் இந்த நூற்றாண்டின் இறுதி புதன் மறைப்பு நிகழும் என வானியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

English summary
On November 11 today people across most of the world can catch the planet Mercury passing across the sun. This rare event won't be seen from Earth again until 2032, so we put together this full guide of the science behind the sight and how best to observe it yourself.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X