For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செவ்வாய் கிழமைகளில் பிறந்த தைரியசாலியா நீங்க? முருகனை வழிபடுங்க

தைரியகாரகன் என்று அழைக்கப்படும் செவ்வாய்க் குரிய கிழமையில் பிறந்தவர்கள் தைரியசாலிகளாகவும், சாமர்த்தியசாலிகளாகவும் திகழ்வர். காவல்துறை, மருத்துவம், மரம், மருந்து போன்ற துறைகளில் சாதனை படைப்பவர்களா

Google Oneindia Tamil News

சென்னை: செவ்வாய்க்கிழமை பிறந்தவர்கள் செல்வச் செழிப்புடன் வாழ்பவர்களாகவும், தைரியம் மிக்கவர்களாகவும், இடம், பூமி போன்றவைகளுக்கு அதிபதிகளாகவும் விளங்குவர்.

தைரியகாரகன் என்று அழைக்கப்படும் செவ்வாய்க் குரிய கிழமையில் பிறந்தவர்கள் தைரியசாலிகளாகவும், சாமர்த்தியசாலிகளாகவும் திகழ்வர். காவல்துறை, மருத்துவம், மரம், மருந்து போன்ற துறைகளில் சாதனை படைப்பவர்களாகத் திகழ்வர். 'செவ்வாய் வெறும் வாய்’ என்பது பழமொழி. ஆனால் 'செவ்வாய் வருவாய் தரும் நாள்’ என்பது புதுமொழி.

Tuesday born people personality

செவ்வாய்கிழமை பிறந்தவர்களுக்கு எந்த வேலையையும் அரைகுறையாகச் செய்வது பிடிக்காது. எதிர்கால தேவைகளுக்காக சிறிதளவாவது சேமித்து வைப்பவர்கள், உழைத்து முன்னேற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தைப் பெற்றவர்கள் இவர்கள். நகைச்சுவை உணர்வு மிக்கவர்களாகத் திகழ்வர். ரகசியங்களைக் காப்பாற்றுவதில் வல்லவர்கள். செல்வச் செழிப்போடு வாழ்ந்தாலும் கொடுத்துதவும் எண்ணத்தைக் கொண்டிருப்பவர்கள்.

கிரகங்களில் செவ்வாய் மங்களகாரகன் என்று அழைக்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை ஒரு புனிதமான கிழமையாகும். பலரும் விரதமிருக்க தேர்ந்தெடுப்பது இந்தக்கிழமையைத்தான். காரணம் இந்தக் கிழமை முருகனுக்கும், அம்மனுக்கும் உகந்த கிழமையாகும். எனவே இக்கிழமையில் பிறந்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்று புராணங்கள் கூறுகின்றன.

இந்தக் கிழமையில் பிறந்தவர்கள் எந்த எண் ஆதிக்கத்தால் பிறந்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

செவ்வாய்க்கிழமையும், ஒன்று எண் ஆதிக்கமும் அமைந்தவர்கள் பல சிறப்புகளைப் பெற்றவர்கள். செயலைச் செய்யும் முன் யாரிடமும் கூறமாட்டார்கள். செய்த பிறகு தான் அடுத்தவர்களுக்கு தெரிய வரும். பல்வேறு தொழில் செய்பவர்களாக இருப்பர்.

செவ்வாய்க்கிழமையும், இரண்டு எண் ஆதிக்கமும் அமைந்தவர்கள் செய்யும் செயல்களைச் சிறப்புறச் செய்ய வேண்டும் என்ற கொள்கைப் பிடிப்போடு செயல்படுவர். பக்திக்கு முக்கியத்துவம் கொடுப்பர். இலகுவான தொழில் செய்து எளிதில் லாபம் பெறுவர்.

செவ்வாய்க்கிழமையும் மூன்று எண் ஆதிக்கமும் அமைந்தவர்கள் நாணயம் தவறாதவர்களாக இருப்பர். எந்தக் காரியத்தையும் நாளை செய்வோம் என்று ஒத்தி வைக்க மாட்டார்கள். சேமிப்பில் ஆர்வம் இருக்காது.

செவ்வாய்க்கிழமையும் நான்கு எண் ஆதிக்கமும் அமைந்தவர்கள், யாம் பெற்ற இன்பத்தை மற்றவரும் பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தைப் பெற்றவர்களாகத் திகழ்வர். பிறருடைய விவகாரத்தில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்க மாட்டார்கள்.

செவ்வாய்க்கிழமையும் ஐந்து எண் ஆதிக்கமும் அமைந்தவர்கள் சுற்றி வளைத்துப் பேசும் தன்மை கொண்டவர்கள். மற்றவர்களின் சொல்லிற்கு மதிப்புக் கொடுக்க மறுப்பர். அரசியல் ஈடுபாடு உண்டு.

செவ்வாய்க்கிழமையும் ஆறு எண் ஆதிக்கமும் அமைந்தவர்கள் பேச்சுத் திறமையால் ஆச்சரியப்படும் வாழக்கையை அமைத்துக்கொள்வர்கள். தனித் தொழில் செய்து தனலாபம் பெறுவர். பெண்களால் அதிக பிரச்சினைகளைச் சந்திக்கும் சூழ்நிலையும் உண்டு.

செவ்வாய்க்கிழமையும் ஏழு எண் ஆதிக்கமும் அமைந்தவர்கள் சேமிப்பில் அதிகக் கவனம் செலுத்துவர். ஏமாற்ற நினைப்பவர்களையும் இவர்கள் ஏமாற்றி விடும் அளவிற்குத் திறமைசாலிகளாகத் திகழ்வர்.

செவ்வாய்க்கிழமையும் எட்டு எண் ஆதிக்கமும் கொண்டவர்கள் வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்று துடுக்காகப் பேசுபவர்களாகத் திகழ்வர். கடமை உணர்வும், கடின உழைப்பும் மேற்கொண்டு உயர்வு பெறுவர். மனசாட்சி மிக்கவர்களாகத்திகழ்வர்.

செவ்வாய்க்கிழமையும் ஒன்பது எண் ஆதிக்கமும் பெற்றவர்கள், சுதந்திர மனப்பான்மை உள்ளவர்களாக இருப்பர். தலைமைப் பதவிகள் தானேதேடி வரும். பொதுநலத்தில் புகழ் குவிப்பவர்களாகவும் திகழ்வர். தலைமைப் பதவிகள் தானே தேடி வரும்.

செவ்வாய்க்கிழமை பிறந்தவர்கள் மற்றும் அங்காரக தோஷம் பெற்றிருப்பவர்கள் சென்று வர வேண்டிய திருக்கோவில் தையல்நாயகி உடனுறை வைத்தியநாத சுவாமி மற்றும் அங்காரகன் எழுந்தருளியுள்ள புள்ளிருக்கும் வேளுரான வைத்தீஸ்வரன் கோவில். வாய்ப்பிருக்கும் பொழுதெல்லாம் இந்த ஆலயம் சென்று வழிபட்டு வந்தால் வளர்ச்சி அதிகரிக்கும்.

நவக்கிரஹங்களில் மங்களன் என்று போற்றப்படும் செவ்வாய் ஆதிக்கம் பெற்ற செவ்வாய்கிழமை பிறந்தவர்கள் வேங்கடவனின் அஷ்டதள பாதபத்ம ஆராதனம் என்ற அர்ச்சனையில் கலந்து கொள்வது சிறப்பானது. மங்களகாரகனான செவ்வாய் ஓரையில் நடக்கும் அந்த வைபவமானது நன்மைகளை தரக்கூடியது.

செவ்வாய்க்கிழமை பிறந்த அனைவரும் தவறாமல் அம்பிகை மற்றும் முருகனை செவ்வாய்க் கிழமை அன்று வழிபட்டால் செல்வ விருத்தியும், செல்வாக்கு விருத்தியும் மேலோங்கும். மேலும் இந்த ஐப்பசி மாதத்தில் நவராத்திரி நாயகியாகி பத்தாம் நாள் விஜய தசமி அன்று வெற்றி பெற்ற அம்பிகையை அவசியம் வழிபடுவதும், கந்த சஷ்டியன்று முருகப்பெருமானை வழிபட்டு வருவதும் அவசியமாகும்.

வருவாய் அதிகரிக்க வேண்டுமானால் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். வாரத்தின் ஏழு நாட்களில் மூன்றாவது நாளாக இடம்பிடிப்பது செவ்வாய்க்கிழமை. பொருளாதார நிறைவையும் வழங்குவது அங்காரகன்தான். அந்த அங்காரகனுக்குரிய தெய்வமாக விளங்குவது முருகப்பெருமான் மற்றும் சக்தி தேவி. முருகப்பெருமான், சக்தி தேவி, அம்பிகைக்கு உகந்த நாளான செவ்வாய்கிழமை இந்த தெய்வங்களை வணங்கினால் கவலைகள் அகலும்.

English summary
A person born on Tuesday has the ruling planet of Mars, which symbolizes a fighting spirit, a desire to lead the way and a will to win. Tuesday's child is active, enthusiastic, energetic, courageous, brave, impatient, sometimes too fiery and destructive, and has a big desire to achieve success.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X