For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் 6ல் ஆர்ஜித சேவைகள் ரத்து - ஏப்ரல் 2ல் ஆழ்வார் திருமஞ்சனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் 6ஆம் தேதி யுகாதி பண்டிகை நடைபெறுவதை முன்னிட்டு ஏப்ரல் 2ஆம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் சுத்தம் செய்யும் பணி நடைபெறுவதால் 5 மணிநேரம் தரிசனம் ரத்து செய்யப்படு

Google Oneindia Tamil News

திருப்பதி: யுகாதி பண்டிகையை முன்னிட்டு திருமலை ஏழுமலையான் கோயிலில் நடைபெறக்கூடிய கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம், வசந்த உற்சவம் ஆகிய சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்யப்படுகிறது. ஏப்ரல் 2ஆம் தேதி செவ்வாய்கிழமையன்று ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் சுத்தம் செய்யும் பணி நடைபெறுவதால் 5 மணிநேரம் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் யுகாதி பண்டிகை, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவ விழா, வைகுண்ட ஏகாதசி விழா ஆகிய முக்கிய உற்சவங்களையொட்டி முன்கூட்டியே வரும் செவ்வாய்க்கிழமை அன்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் சுத்தம் செய்யும் பணி நடைபெறும்.

தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டு யுகாதி ஆகும். பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் யுகாதி கொண்டாட வேண்டும். அன்று அமாவாசை ஒரு நாழிகை இருந்தால்கூட மறுநாள்தான் உகாதி கொண்டாட வேண்டும் என்பது விதி. மனித வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மாறிவரும் என்பதையும் அதைப் பொறுமையோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த உகாதி பண்டிகை உணர்த்துகிறது.

சித்திரை திருவிழா 2019: கள்ளழகரை வரவேற்க தயாராகும் மதுரை - வைகையில் 216 கனஅடி தண்ணீர் திறக்க முடிவு சித்திரை திருவிழா 2019: கள்ளழகரை வரவேற்க தயாராகும் மதுரை - வைகையில் 216 கனஅடி தண்ணீர் திறக்க முடிவு

வசந்த காலம்

வசந்த காலம்

சைத்ர மாதத்தின் முதல் நாள் தான் பிரம்மன் உலகத்தை படைத்ததாக பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்நாளில் புது முயற்சிகளை மேற்கொள்ள நல்ல நாளாக கருதப்படுகிறது. மேலும் சைத்ர மாதத்தின் முதல் நாள் வசந்த காலத்தின் பிறப்பை குறிப்பதால், இந்நாள் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. யுகாதி புத்தாண்டு தினத்தன்று மக்கள் அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளியல் செய்து புத்தாடை அணிந்து யுகாதி பச்சடி செய்வதில் இருந்து நாள் ஆரம்பிக்கிறது.

திருப்பதி ஏழுமலையான்

திருப்பதி ஏழுமலையான்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி யுகாதி ஆஸ்தானம் நடைபெற உள்ளது. இதையொட்டி காலை 3 மணிக்கு சுப்ரபாதம் சேவை தொடங்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. பின்னர் தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி விஸ்வ சேனாதிபதியுடன் ஆனந்த நிலையம், கொடி மரத்தை சுற்றி ஊர்வலமாக வந்து தங்க கதவு அருகே கொலு வைக்கப்பட உள்ளனர். இதனையடுத்து பஞ்சாங்கம் படித்தல் நிகழ்ச்சி நடைபெறும்.

தேவஸ்தானம் அறிவிப்பு

தேவஸ்தானம் அறிவிப்பு

யுகாதி ஆஸ்தானத்தையொட்டி அன்றைய தினம் ஏழுமலையான் கோயிலில் நடைபெறக்கூடிய கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம், வசந்த உற்சவம் ஆகிய சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்யப்படுகிறது.

சுத்தம் படுத்தும் பணி

சுத்தம் படுத்தும் பணி

யுகாதி ஆஸ்தானத்தையொட்டி ஏப்ரல் 2ம் தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இதையொட்டி காலை 6 மணி முதல் 11 மணி வரை சுமார் 5 மணி நேரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவது நிறுத்தப்படுகிறது. தொடர்ந்து மூலவர் சன்னதி முதல் கொடிமரம், ரங்கநாதர் மண்டபம் உட்பட அனைத்து இடங்களும் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட உள்ளது. தொடர்ந்து மதியம் 12 மணிக்கு பிறகு பக்தர்கள் வழக்கம்போல் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

English summary
TTD plans to grandly celebrate the Ugadi Asthanam event on April 6 inside the Srivari Temple,Tirumala. TTD will perform the Koil Alwar Thirumanjanam event in the temple on April 2.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X