For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தெலுங்கு வருடப்பிறப்பு யுகாதி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தன்வந்திரி ஹோமம்

தன்வந்திரி பீடத்தில் நாளை யுகாதி பண்டிகை நாளில் அனைத்து மக்களும் ஆரோக்யமாக வாழ சிறப்பு தன்வந்திரி ஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் விசேஷ திரவியங்களுடன் பல வகையான புஷ்பங்கள், பழங்கள் சேர்க்கப்பட உள்

Google Oneindia Tamil News

வேலூர்: வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டை தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி "யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு" டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் யுகாதி எனும் தெலுங்கு வருடப்பிறப்பு முன்னிட்டு நாளை 06.04.2019 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் சிறப்பு தன்வந்திரி ஹோமமும் மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு மஹா அபிஷேகமும் சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது.

ஆந்திரா, கர்நாடகா, மற்றும் வட மாநிலங்களில் வாழு‌ம் மக்க‌ள் த‌ங்களது புத்தாண்டு ‌பிற‌ப்பை யுகாதி என்ற பெயரில் கொண்டாடி வருகி‌ன்றனர். ஆண்டின் தொடக்கத்தையே யுகாதி என்று அழைக்கிறார்கள். தமிழர்கள் தமி‌ழ் புத்தாண்டை கொண்டாடுவது போலவே ஆந்திரம், கர்நாடகம் வாழ் மக்கள் தங்களது புத்தாண்டை யுகாதியாக கொண்டாடுகின்றனர்.

Ugadi festival at Danvantri Peedam Sri Danvantri Temple

அன்று அதிகாலையில் எழுந்து வாசலில் வண்ணக் கோலமிட்டு எண்ணை தேய்த்துக்குளித்து, புத்தாடை அணிந்து, இறைவனை வழிபடுவார்கள்.இதில் ஒரு ‌சிறப்பம்சம் என்னவென்றால் வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்தும் ‌விதமாக யுகாதி பச்சடி என்ற ஒரு உணவை தயாரிப்பார்கள். அதாவது வாழ்க்கை என்பது மகிழ்ச்சி, கவலை, கோபம், அச்சம், சலிப்பு, ஆச்சர்யம் கலந்தது என்பதை உணர்த்தும் வகையில், கசப்புக்கு வேப்பம்பூ, துவர்ப்புக்கு மாங்காய், புளிப்புக்கு புளி, உரைப்புக்கு மிளகாய் அல்லது மிளகு, இனிப்புக்கு வெல்லம் ஆகிய 6 சுவை கொண்ட பச்சடி செய்து சுவாமிக்கு படைத்து அனைவருக்கும் உணவில் பரிமாறுவார்கள்.

இந்த பச்சடி ஆந்திராவில் யுகாதி பச்சடி என்றும், கர்நாடகத்தில், தேவுபெல்லா என்றும் அழைக்கப்படுகிறது. யுகாதி பச்சடி தயாரித்து இறைவனுக்கு படையல் இட்டு சூரியனை வழிபடுவார்கள். மாலையில் வாசலில் விளக்கேற்றிய பின்னர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த சிறப்பு நாளை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் யுகாதி நாளில் அனைத்து மக்களும் ஆரோக்யமாக வாழ சிறப்பு தன்வந்திரி ஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் விசேஷ திரவியங்களுடன் பல வகையான புஷ்பங்கள், பழங்கள் சேர்க்கப்பட உள்ளன. தொடர்புக்கு : ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513. வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

English summary
Sri Danvantri Peedam, Walajapet Conducted UGADI Special Danvantri Homam and Abhishekam on April 6th,2019.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X